எடப்பாடி அரசுக்கு எதிராக உங்களது கோபத்தை இங்கே பதிவு செய்யுங்கள்…ரகுவுக்கு நீதி கிடைக்க உதவுங்கள் 

https://www.change.org/p/who-killed-raghu

கோவையில் எம்ஜிஆர் நூற்றாண்டுவிழா அலங்கார வளைவு அமைக்கப்பட்ட இடத்தின் அருகே நடந்த விபத்து பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.

கோவையில் நடைபெற உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டுவிழாவை முன்னிட்டு பல இடங்களில் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அவிநாசி சாலையில் அரசு மருத்துவக் கல்லூரி சந்திப்பு அருகே அலங்கார வளைவு அமைக்கப்பட்டிருந்தபோது, அங்கு ஏற்பட்ட விபத்தில் மென்பொருள் பொறியாளர் ரகு (32) என்பவர் பலியானார்.

அமெரிக்காவில் பணியாற்றிய ரகு, திருமண ஏற்பாட்டுக்காக கோவை வந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. அலங்கார வளைவில் மோதி விழுந்தபோது எதிரே வந்த டிப்பர் லாரியில் மோதி விபத்துக்குள்ளானதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஆனால், இதனை கோவை மாநகர போலீஸார் மறுத்தனர். கோவை மாநகராட்சியில் ஒப்பந்தப் பணியை மேற்கொண்டுள்ள தனியார் நிறுவன லாரி தவறான பாதையில் வந்து விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறி, அதன் ஓட்டுநரான பரமக்குடியைச் சேர்ந்த மோகன் (31) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

தவறான பாதையில் லாரி?

போலீஸார் கொடுத்த விளக்கத்தில் சுமார் 2 கி.மீ தூரத்துக்கு அந்த லாரி தவறான பாதையில் வேகமாக வந்ததாகவும், அதில் மோதியதாலேயே இளைஞர் பலியானார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அலங்கார வளைவு குறித்த எந்த தகவலும் இடம் பெறவில்லை. ஆனால், சம்பந்தப்பட்ட அலங்கார வளைவு அமைத்ததே விபத்துக்கு காரணம் என புகார் எழுந்ததை அடுத்து, அது உடனே அகற்றப்பட்டது. சாலையை ஆக்கிரமித்து வளைவு அமைக்க அனுமதி கொடுக்கவில்லை என மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த விபத்து அலங்கார வளைவினால் ஏற்படவில்லை. தவறான பாதையில் வந்த லாரியால் ஏற்பட்ட விபத்து. அந்த லாரி நிறுவனத்துக்கும் திமுகவினருக்கும் தொடர்பு இருக்கிறது. அவர்களே இந்த விபத்தை தவறாக திசை திருப்புகிறார்கள். அலங்கார வளைவுகள் அனைத்து அனுமதி பெற்றே அமைக்கப்பட்டுள்ளன. ஆணையாளர் கொடுத்த விளக்கம் தவறானது என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று தெரிவித்தார்.

அதேசமயம், சிசிடிவி பதிவின் அடிப்படையிலேயே லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதை வைத்து மேற்கொண்டு விசாரணை நடக்கும் என கூறும் போலீஸார், அந்த வீடியோ பதிவுகளை வெளியிட மறுத்துள்ளனர். எனவே இந்த விபத்துக்கு என்ன காரணம் என்பது குழப்பமாகவே தொடர்கிறது.

சர்ச்சை சொற்றொடர்

இந்நிலையில், விபத்து ஏற்பட்ட, அலங்கார வளைவு அகற்றப்பட்ட இடத்தில் நேற்று ‘ரகுவை கொன்றது யார்?’ என சாலையில் எழுதப்பட்டிருந்தது. சாலையின் நடுவே எழுதப்பட்டிருக்கும் சொற்றொடர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அவிநாசி சாலையில் விபத்து நடந்த இடத்தில் எழுதப்பட்டிருக்கும் வாசகம்.

சமூகவலைத்தளங்களிலும் இந்த விபத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. சாலையில் எழுதியவர்கள் யார் என்பது குறித்து மாநகர போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஒருவேளை இறந்த இளைஞரின் நண்பர்கள், நலம் விரும்பிகள், அல்லது அரசியல் கட்சியினர் யாரேனும் எழுதினார்களா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.

ஸ்டாலின் கண்டனம்:

”எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா என்கிற பெயரில் உயர் நீதிமன்ற உத்தரவினை அப்பட்டமாக மீறி, ஆபத்தான மற்றும் இடையூறு ஏற்படுத்தக்கூடிய பேனர்களை அ.தி.மு.க. அரசு வைத்து வருவதால், தற்போது கோவையை சேர்ந்த ரகுபதி என்ற இளம் பொறியாளர் மரணமடைந்திருக்கிறார். சட்டத்தை மீறி செயல்படும் இந்த அரசை வன்மையாக கண்டிக்கிறேன்” என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

அமைச்சர் வேலுமணிக்கு திமுக சவால்..

இதனிடையே நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் திமுக எம்எல்ஏ கார்த்திக் கூறும்போது, ‘இந்த விபத்தில் திமுகவினரையும், என்னையும் அமைச்சர் வேலுமணி தொடர்புபடுத்துவது சரியல்ல. சாலையை ஆக்கிரமித்து அமைத்த அலங்கார வளைவே இந்த விபத்துக்கு காரணம் என்பது அனைவருக்கும் தெரியும். புகார் கொடுத்தும் கூட போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக, பல இடங்களில் இதுபோல அமைக்க அனுமதித்துள்ளனர். இறந்த பொறியாளரின் குடும்பத்துக்கு அரசு இழப்பீடு கொடுக்க வேண்டும். அமைச்சர் வழக்கு தொடுப்பதாக கூறியிருக்கிறார். அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். செயல் தலைவர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்று அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம்’ என்றார்.

காவல்துறை அறிக்கை (இடது), அழிக்கப்பட்ட வாசகம் (வலது)

கமல்ஹாசன் காட்டம்:

இதற்கிடையில், “உயிர்ச்சேதமானாலும் பரவாயில்லை. புகழும் பதவியும் மட்டுமே முக்கியம் என நினைக்கும் எவ்வரசும் கவிழும். பாதசாரிகளின் உயிரை மதியாத அரசு பல்லக்கில் போவது வெகுநாள் நடக்காது. விபத்துகள் நிகழ வழி செய்பவர் கொலைக்கு உடந்தையாவர் என தமிழக Banner”ஜி”க்கள் உணரவேண்டும்  என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.

இதேபோல் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், “சம்பவம் நடந்த இடத்தில் அலங்கார வளைவு வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுமதியே வாங்கப்படவில்லை” என குற்றஞ்சாட்டியுள்ளார்.

பொது மக்கள் ஆவேசம்:

அரசியல் சாடல்கள், வாத விவாதங்கள் ஒருபுறம் இருக்க திருமணத்துக்கான வந்த ஓர் இளைஞர் திரும்பாப் பயணமாக சென்றது ஒட்டுமொத்த தமிழக மக்களையும் கொதித்தெழ வைத்திருக்கிறது.  இது தொடர்பாக இணையத்தில் மக்கள் பலரும் ஆவேசமாக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

வளைவு அகற்றப்பட்டது.

Social media compilation on this issue..!

சம்பவம் நடந்த இடத்தின் அருகில் உள்ள ஆக்சிஸ் வங்கி , கோகிலம் சிட்பண்ட்ஸ் வணிக வளாகம் மற்றும் ஜி பிளாஸ்ட் கம்பெனியின் சிசிடிவி வீடியோ பதிவுகளை அலசி ஆராய்ந்த பார்த்தால் அனைத்து உண்மைகளுக்கும் விடை கிடைக்கும்.

Senthil V

ரகுவைக் கொன்றது யார்? – கேள்வி எழுப்பும் கோவை மக்கள் ! இந்த ஏதேச்சதிகார அரசை ஆளவிட்டு வேடிக்கை பார்க்கும் நம்மால்தான் இந்த பலி.

Ezhilan M

அன்று முதல்வர் விழா, அரசுக்கு எதிராக அதே ஊரில் துண்டு சீட்டு விநியோகித்தார் என டிடிவி உட்பட பலர் மீது வழக்கு, சிலர் கைது என தமிழக அரசு ரியாக்ட் செய்தது.

இன்று முதல்வர் விழா, சட்ட வீதிமுறைக்கு மீறி அரசு செலவில் கட்சி விளம்பரத்தால், ஒருவர் பரிதாபமாக மரணம்.

முதல்வர் கைது ஆவாரா, குறைந்தபட்சம் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படுமா?

Thamizhanda

ரகுவைக் கொன்றது யார்?- அரசியலா? அரசியல் கட்சியா? அதன் ஆடம்பரமா? அரசா? அரசின் அராஜகமா? அதிகாரமா? அதிகார அத்துமீறலா? அலட்சியமா? அல்லது நடு ரோட்டை மறைத்து பேனர் கட்ட வேண்டிய அவசியமா??

V.dilip Venkatesh

கோவை மக்களே நமக்கு தன்மானம் அதிகம். அதிமுகவின் கோட்டையாக விளங்கும் கோவை இனிமேல் எப்படி இருக்க வேண்டும் என்பது உங்கள் கையில்.

#WhoKilledRagu – உரிய அதிகாரிகள் பதிலளிக்கும் வரை, திரும்பத் திரும்பப் பகிர்ந்து வைரல் ஆக்குவோம்.

Ezhil

கொங்கு மண்டலம் தந்த அன்பிற்கு ஈடாக, அதிமுக அளித்த பதில் அன்பே – #WhoKilledRagu?

சாம் மகேந்திரன்

#WhoKilledRagu..?- Tamilnadu Government.

Nagaraja Chozhan MA

இணையத்தில் முட்டுக் கொடுக்கிறதுல சங்கிகள், உ.பி.க்கள்தான் கை தேர்ந்தவங்கன்னு நினைச்சேன். ஆனா அதிமுக ஐடி விங், அவர்களை விட பெரிய ஆளா இருப்பாங்க போல. லாரி வந்துச்சாம், பிரேக் போடலயாம், தண்ணி அடிச்சிருந்தாராம். ஆனா ரோட்டை மறச்சு பேனர் வச்சது மட்டும் கண்ணுக்குத் தெரில. #WhoKilledRaghu

Aboo Yoosuf

கைது செய்யக் காரணமாய் கந்து வட்டியோ, சமூகச் செயல்பாடோ, கார்டூனிஸ்டோதான் தேவை…

திராவிட இயக்கங்களின் பேனர் கலாச்சாரத்தில் இறந்தமைக்குக் கைது செய்ய சட்டத்தில் இடம் இருக்கிறதா என்ன….?

Vinoth Kumar Manikandan

இறந்தவருக்கு விழாவா…? இறப்பதற்காக விழாவா..?

#whokilledraghu #coimbatoreraghu #NONEEDMGR100

Manoj Savarimuthuraj

#WhoKilledRaghu சுய விளம்பரத்துக்கும் விவிஐபி கலாச்சாரத்துக்கும் இனியாவது முற்றுப்புள்ளி வைப்போம்.

இடும்பாவனம் கார்த்தி @idumbaikarthi

இன்னும் எத்தனை உயிர்களைக் கொல்லப் போகிறீர்கள்? #Whokilledragu

மனிதன் @Subhash_Offl

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவது மட்டுமே இந்த அரசின் வேலை. அதுவும் மோசமான முறையில்!

Vicky AV @iamVickyAV

எதிரே வந்த லாரி மோதிதான் ரகு இறந்தார். அது சரி, எதிர்ல லாரி வரும்போது ஒதுங்கக்கூட இடம் இல்லாம கட்- அவுட் வைச்ச உத்தமர்களை என்ன பண்றது?

P Kathir Velu

கேள்விக்கு பதில் சொல்ல திராணி இல்லாமல், தேர்வையே ரத்து செய்யும் கயமைத்தனம் இதுதானோ!- அழிக்கப்பட்ட வாசகங்கள்.

Paul Samson J C @jcp_paul

இன்னும் அவினாசி சாலையில் ஆக்கிரமிப்பு செய்தும் அனுமதி பெறாமலும் பல பேனர்களும் அலங்கார வளைவுகளும் இருக்கத்தான் செய்கிறது. #WhoKilledRagu

Vicky AV @iamVickyAV

சாலையில் கோவை மாநகராட்சியிடம் அனுமதி பெறாமல், ஆக்கிரமித்து எழுதப்பட்ட Who Killed Ragu வாசகம் ஒரே நாள் இரவில் அழிப்பு!

சிறப்பாக செயல்படும் தமிழக அரசு !

Ramya Sriram @ramyasriram79

கட் அவுட் கலாச்சாரம் ஒழிப்போம்.

Skycinemas @skycinemas

#WhoKilledRagu- மக்களாகிய நாம் அனைவரும்தான்… நடு ரோட்டுல பேனர் வச்சா தட்டி கேட்போம்.. அதுக்கப்புறம் யார் வைக்கறாங்கன்னு பார்ப்போம்…

Sujith Kumar @sujithkumar13

சாலையோரங்களில் மரக்கன்றுகளை நட 101 அனுமதியைப் பெற வேண்டும். ஆனால் பொதுமக்களைக் கொல்லும் முறைகேடான அலங்கார வளைவுகளை அமைக்க ஆளுங்கட்சிக்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை.

Praveen Kumar @praveenkumar558

எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி நொண்டி அடிக்குது… சின்னம் ஹிந்தி படிக்குது. இதுல அவருக்கு நூற்றாண்டு விழாவா? #WhokilledRaghu

M Manikandan @puliangudi

#WhoKilledRaghu- ஆளுங்கட்சியைக் கேள்வி கேட்கத் திராணி இல்லாத நாம் ஒவ்வொருவரும்தான்!

Credit: The Hindu

பகிர்