நடிகர் கமல்ஹாசன் தன் காலில் விழப்போன ரசிகரின் கன்னத்தில் அறையும் வீடியோ வைரலாகி வருகிறது.

நடிகர் கமல்ஹாசன் சமீப காலமாக தொடர்ந்து அரசியல் விமர்சன கருத்துக்களைக் கூறி வருகிறார். அண்மையில், தேர்தலில் போட்டியிட்டு தமிழக முதல்வராக விரும்புவதாகவும் வெளிப்படையாக கூறியிருந்தார். மேலும், கேரளா, டெல்லி மற்றும் மேற்கு வங்கத்தின் முதல்வர்களையும் அவர் சந்தித்து அரசியல் நிமித்தமாகப் பேசியுள்ளார்.

தமிழக அரசையும் மத்திய அரசையும் கண்டித்து அவர் கூறும் கருத்துக்குள் பெரும் சர்ச்சையா வெடிக்கின்றன. அமைச்சர்கள் அவருக்கு பதிலடி கொடுத்து காரசாரமான விவாதத்தைக் கிளம்புகின்றனர்.

இந்துத்துவ பயங்கரவாதம் குறித்து அவர் கூறிய கருத்துக்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஆதாரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்யலாம் என்று உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே விரைவில் அவர் தன் புதிய கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை வெளியிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதானல், அவரது தலைமையில் சமூகப் பணிசெய்ய ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இச்சூழலில் கமல்ஹாசன் தன்னைச் சந்திக்க வந்து காலில் விழப்போன ரசிகர் ஒருவர் கன்னத்தில் ஆவேசமாக அடிக்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகிவிட்டது. இது குறித்து கமல் தரப்பில் எந்த விளக்கமும் இதுவரை கூறப்படவில்லை.

 

 

பகிர்