ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன் னும் முடிவு செய்யவில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
தமிழக பாஜக உயர்நிலைக் குழு கூட்டம், சென்னை தி.நகரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்துக்குப் பிறகு நிருபர்களிடம் தமிழிசை கூறியதாவது:
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தினோம். முதல்கட்ட ஆலோசனை மட்டுமே முடிந்துள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. தேர்தலில் போட்டியிடுவதா, வேண்டாமா என்பது குறித்தும், போட்டியிட்டால் யார் வேட்பாளர் என்பது குறித்தும் அடுத்தகட்ட ஆலோசனையில் தெரியவரும். நாங்கள் தேர்தலில் போட்டியிட்டால் நட்சத்திர வேட்பாளர் ஒருவரை நிறுத்துவோம்.
ஆர்.கே.நகர் தேர்தலை தேர்தல் ஆணையம் நேர்மையாக நடத்த வேண்டும். கடந்த முறை தேர்தல் பிரச்சாரத்தின்போது தொப்பி சின்னத்தை வைத்துதான் பணப் பட்டுவாடா நடத்தப்பட்டது. எனவே, டிடிவி தினகரன் தரப்புக்கு மீண்டும் அந்த தொப்பி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கக் கூடாது.
பின்னர் கப்ஸா நிருபரிடம் பேசும்போது ஆர்கே நகரில் எடப்பாடியின் அதிமுக போட்டியிட்டால் பாஜக போட்டியிட்டதற்கு சமம் விளக்கம் தந்தார்