சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மதுசூதனன், முன்னாள் எம்.பி பாலகங்கா உள்ளிட்டோர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களிடையே கடும் போட்டி உருவாகியுள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வதற்காக அக்கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் அக்கட்சியின் ஆட்சிமன்ற குழுவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். புதிய ஆட்சிமன்ற குழு கூடி ஆர்.கே.நகர் வேட்பாளரை தேர்வு செய்வது என்றும் இதற்காக போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனு பெறுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இன்று காலை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளிடம் மனுக்கள் பெறப்பட்டன

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் இன்று காலை தலைமை கழகம் சென்று அங்கிருந்த நிர்வாகி மகாலிங்கத்திடம் விருப்ப மனு கொடுத்தார். இவர் கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட போது ஓபிஎஸ் அணி சார்பில் போட்டியிட்டவர்.

இதே போல முன்னாள் எம்.பியும் வடசென்னை மாவட்ட முன்னாள் செயலாளருமான பாலகங்காவும் விருப்பமனு பெற்றுள்ளார். இவர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர் ஆவார். ஆர்.கே.நகரில் போட்டியிட பாலகங்கா, மதுசூதனன் உட்பட 20 பேர் விருப்பமனு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 8 பேர் தாக்கல் செய்துள்ளார்களாம்.

ஆர்.கே. நகரில் போட்டியிட அதிமுக சார்பில் கடும் போட்டி நிலவுகிறது. அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், வக்கீல் ஆர்.எம்.டி. ரவீந்திர வடசென்னை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ஏ.ஏ.எஸ். முருகன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம், கு.சம்பத், முன்னான் கவுன்சிலர் அஞ்சலட்சுமி அவைத்தலைவர் மதுசூதனன்,வடசென்னை மாவட்ட முன்னாள் அதிமுக செயலாளர் பாலகங்கா ஆகியோர் விருப்பமனு கொடுத்துள்ளனர்.
இதனால் குழப்பத்தில் இருக்கும் ஓபிஎஸ் எடப்பாடி இருவரும் ஆர்கே நகரில் மது சூதனனா, பால கங்காவா என்பதை பிரதமர் மோடியிடம் முறையிட்டு பைசல் செய்ய நாளை டெல்லி செல்ல இருப்பதாக நமது கப்ஸா நிருபர் தெரிவிக்கிறார்.
பகிர்