தோழர் ஆலஞ்சி

யாருக்கு வாக்களிக்கவேண்டுமென்பதை விட யாருக்கெல்லாம் வாக்களிக்க கூடாதென்பது உணர்ந்து செயல்பட்டால் தமிழகம் இனியேனும் மிளிரும்..
சிறிது நேரம் என் கறுப்புசட்டையை கழட்டிவைத்துவிட்டு பேசுகிறேன்.. ஒரு இடைத்தேர்தல் இதற்கேன் இத்தனை சிங்காரம் என கேட்ககூடும்.. சில உண்மைகளை தெரிந்து கொள்ளவேண்டும் சில கெடுதிகள் நம்மை நோக்கி வர தொடங்கியிருக்கிற காலகட்டமிது மிதமான வேகத்தில் வருகிற அந்த ஆபத்து சிறிய வெற்றி அதன் வேகத்தை கூட்டி புயலைப்போல புரட்டிவிட்டு போய்விடும்..
..
ஆர்.கே.நகர் தமிழகம் மௌனமாய் கவனிக்கிற தேர்தல் ஏறக்குறைய எல்லா கட்சிகளும் ஏற்கனவே நின்ற கட்சிகள் தவிர்த்து சில பின்மாறியும் சில திமுகவை ஆதரித்தும் அறிவித்துவிட்டன.. திமுக.. அதிமுக.. தினகரன் அணி.. என களம் தெளிய தொடங்கியிருகிகிறது நாம்தமிழரையோ பாஜகவையோ நாம் பொருட்படுத்த தேவையில்லை ஆனால் பாஜகவின் பொருட்கூடிய பார்வையை புரிந்துக்கொள்ள வேண்டும் ..
..
ஒரு தொகுதிக்கு ஆள் தேடுகிற அவலம் இவர்கள் தமிழகத்தை வழிநடத்த நேர்மையான வழியில் தேர்தலை சந்தித்து …இதெல்லாம் நடக்காதென்பதை அவர்கள் அறிவார்கள்.. மறைமுகமாக அதிமுக வெற்றி அவர்களுக்கு உதவுமென அறிவார்கள்.. இந்த மடையர்கள் கையில் ஆட்சி இருக்கும் வரைதான் தாங்கள் நினைத்த காரியம் நடக்குமென அறிவார்கள்.. ஐம்பதாண்டுகளாக வதம் செய்து ஆட்சி அதிகாரத்தில் ஓரம்கட்டபட்டவர்கள் .. சிலமாதங்களுக்குள்ளேயே .. தலைமைசெயலர் பதவி முதல் எல்லா அதிகார கேந்திரங்களிலும் (மையங்களிலும்) முன்னெப்போதுமில்லாத அளவு நிறைந்திருக்கிறார்கள் அவர்களின் ஆட்டத்தை நிறுத்த இந்த இடைத்தேர்தல் உதவும் .. மதுசூதனன்
25 ஆண்டுகளாக ஜெயலலிதாவால் தேர்தல் நிற்க வாய்ப்பு மறுக்கபட்டவர்.. சந்திரலேகா ஆசிட் வழக்கில் அவரே குற்றம் சாட்டி சிபிஐ விசாரித்ததும் .. அவரை நகரவிடாமல் அருகிலேயே வைத்திருந்தார் .. ஏதேனும் உண்மையை உளறிவிடுவாரென அஞ்சி அருகில் வைத்திருந்தார்
அவரை அதிமுக நிறுத்தியிருக்கிறது அவரின் வெற்றியால் ஏதேனும் மாற்றம் வருமா என்றால் மக்களுக்கு ஏதேனும் பலன் வருமா என்றால் நிச்சயமாக இல்லை பாஜகவிற்கு இன்னும் வளைந்த முதுகன் கிடைப்பான் அவ்வளவுதான்.. தினகரனோ கட்சியை கைப்பற்ற பலமுனை போராட்டத்தில் பிரதானமாக இந்த தேர்தலை நம்புகிறார் ..அவர் பாசிசத்திற்கு எதிரானவரென்று கூறிவிட முடியாது..
..
இந்த அடிமைகளால் தமிழர்களின் கௌரவம் ..மரியாதை எல்லாம் கேலிக்குரியாக நிற்கிறது எந்தவொரு முடிவையும் எடுக்கும் திராணியற்றவர்களாக மத்தியரசு சொல்கிறபடி ஆடுகிற .. பொம்மலாட்டத்தை நம்முன் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.. பின்னிருந்தும் இயக்கும் சக்திகளின் ஆட்டத்திற்கு முடிவுகட்ட இது ஒரு தொடக்கமாக இருக்கவேண்டும் .. இல்லையெனில் தமிழர்களின் உரிமைகள் ஒவ்வொன்றாய் பறிக்கபடும் .. அண்ணாவும் கலைஞரும் அரும்பாடுபட்டு தமிழனின் நலனுக்காக கொண்டுவந்த திட்டங்கள் ஒவ்வொன்றாய் சிதைக்கபடும்.. இனியேனும் விழித்துக்கொள்ள மறுத்தால் பெரும் அழிவை தேடி போனதை போல ஆகிவிடும்..
..
இன்றைய காலகட்டத்தில் வெற்றி எளிதாக கிடைக்குமென அயர்ந்தால் பிறகு பெரிய விலை தரவேண்டிவரும்..
எச்சரிக்கை….

Credit: Mansoor Mohammed https://www.facebook.com/mansoor.spm

பகிர்