#துரோகம் | #விசுவாசம் | நாங்கள் பார்த்து வளர்த்துவிட்டவர்கள் | நன்றி மறந்தவர்கள் என்று தனது எதிரணியைப்பார்த்து தொடர் கேள்விகள் கேட்டுக்கொண்டே இருக்கிறார் திரு. டி.டி.வி.தினகரன்.இப்புராணத்தை விட்டால் #இரட்டைஇலையை மீட்போம் | கழகத்தை துரோகிகளின் பிடியில் இருந்து விடுவிப்போம் என்று முழங்கிக்கொண்டே இருக்கிறார்.

இவற்றைத் தாண்டி டி.டி.வி. தினகரனின் #அரசியல் என்ன??

தமிழக மக்களுக்கான அரசியல் பார்வை என்ன?
#ஒட்டுமொத்த #தமிழர்களுக்கான #ஒருங்கிணைந்த #தமிழ்நாட்டிற்க்கான வளர்ச்சி,முன்னேற்றம், குறித்து ஏதேனும் அகண்ட பார்வையிருக்கிறதா???

இந்திய அரசியல் குறித்த தொலைநோக்குப்பார்வையிருக்கிறதா???

#பொருளாதாரம், #சாதியம்,#கல்வித்துறை,#உள்கட்டமைப்பு, #வணிகம் ,#தொழில்வளர்ச்சி, #நீர்மேலாண்மை #பெண்ணியம், #திராவிடம், #இந்தியதேசியம், #தமிழ்த்தேசியம் போன்ற விசயங்களில் தினகரனின் பார்வை,கருத்து என்னவாயிருக்கிறது என்று எவருக்கும் தெரியாது.

அவரது தொண்டர்களுக்கு தெரியவேண்டிய அவசியமில்லை ஏனெனில் அவர்கள் இதையெல்லாம் உணராமல் அறியாமல், விசிலடிசான் குஞ்சுகளாக வெறும் தொண்டர்களாகவே இருக்கப்போகிறார்கள், அது தான் அவர்களுக்கும் வசதி,தினகரனுக்கும் நல்லது.

ஆனால் இன்றைய தகவல் தொடர்பு பரவலாக்கப்பட்ட ஒரு சூழலில் ஒரு அரசியல் தலைவன் என்பவன் இவற்றையெல்லாம் உள்வாங்கி அவற்றிற்க்கு தனது எதிர்வினை ஆற்ற வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
புதிய தலைமுறை தமிழர்கள் இவற்றையெல்லாம் அறிவதற்க்கு ஆர்வமாக உள்ளனர்.

இவற்றையெல்லாம் உள்வாங்கி உண்மைக்கு பக்கத்தில் நின்றும், உணர்வுக்கு அருகிலிருந்தும் சிந்தித்து ஒரு சித்தாந்தத்தை,ஒரு புதிய கொள்கையை ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வரக்கூடிய அல்லது சாத்தியமாக்கவல்ல ஒருவனையே தங்கள் தலைவனாக்க முடிவு செய்கின்றனர்.

தமிழர்களுக்கான ஒரு புதிய அரசியலை,மக்களுக்கான வாழ்வாதாரத்தை வளமாக்கி எதிர்கால தமிழ்ப்பிள்ளகளின் வாழ்வு குறித்த திட்டங்களையும் உள்ளடக்கியவராக தினகரன் இருக்கிறாரா என்பதை அவர் தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்.

இருக்கின்ற அல்லது ஆளுகின்ற ஒரு கட்சியினை கையகப்படுத்தி அக்கட்சியின் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றி முன்னர் செய்து கொண்டிருந்த அதே ஊழல் வேலைகள் போன்றஒரு க்ளீஷே அரசியல்வாதியாக மாறுவதை மட்டுமே தனது கொள்கையாக சித்தாந்தமாக தினகரன் கொண்டிருந்தார் என்றால் அவரது அரசியல் எதிர்காலம் பற்றி அவர் ஒரு தீர்க்கமான முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்.

ஏனெனில் அதிமுக என்ற கட்சியினையும் இரட்டை இலையையும் தாண்டி டி.டி.வி தினகரனை பொதுவான மக்கள் திரும்பிப்பார்க்கும் வகையில் பல விசயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
ஜெயலலிதா சசிகலாவை தாண்டி அல்லது கடந்து ஒரு நம்பிக்கை மிகுந்த அரசியல்வாதியாக தினகரனை மக்கள் பார்க்கத்தொடங்கியுள்ளனர்.

சிரித்த முகத்தையுடையவர். மிஸ்டர்.கூல்,கெத்து தினகரன்,தில்லு தினகரன் போன்ற பட்டங்களெல்லாம் சினிமா ரசிகர்கள் தங்கள் செல்லுலாய்ட் ஹீரோக்களுக்கு வைக்கும் புனைப்பெயர்கள். இவற்றையெல்லாம் தாண்டி,
இக்காலகட்டத்தில்,தினகரன் தனக்கான கொள்கைகளை,திட்டங்களை தெளிவான பார்வையை, சமூக அக்கறையுடனும் பொறுப்புடனும், ஒரு புதிய தலைமுறைக்கான அரசியல் தலைவராக பதிவு செய்வதற்க்கான கடமை இருக்கிறது.

இதை விடுத்து மீண்டும்,பழைய புதைகுழியில் தான் தானும் விழுந்து தனது தொண்டர்களையும் விழுகவைத்து தமிழக மக்களையும் இழுத்து விடுவேன் என்று தினகரன் நினைத்தால் அது அவருக்கான இழப்பாக இருக்குமேயன்றி தமிழர்களுக்கோ அல்லது தமிழ் நாட்டிற்க்கான இழப்பாகவோ இருக்காது.

தற்போதைய சூழலும் களமும் தினகரனுக்கு வேறு பல முக்கிய வேலைகளை பிரச்சனைகளை ஏற்படுத்தி அதிலிருந்து உழன்று மீள்வதற்க்கான சூட்சுமத்தை தேட வேண்டிய கட்டாயம் இருந்தாலும்,
ஒரு மகத்தான மக்கள் கூட்டத்தலைவனாக மாறிக்கொண்டிருக்கும் தினகரன் கட்சி,தொண்டர்கள்,சின்னம்,போன்ற பிரச்சனைகளோடு ஒட்டுமொத்த தமிழர்களுக்கான தலைவனாக தன்னை உருமாற்றிக்கொள்ளவேண்டுமெனில் உடனடியாக தனக்கென்ற கொள்கைகளை வகுக்க வேண்டிய தருணம் இது.

வரலாறு ஒவ்வொரு முறையும் தனக்கான தலைவனை தகவமைத்துக்கொள்ளும், அத்தலைவனாக தினகரன் இருக்கவேண்டுமெனில் தினகரனும் தன்னை தகவமைத்து கொள்ளவேண்டும்.

பின்குறிப்பு:- தினகரனுக்கு #திராவிடத்தலைவன் என பெயர்வைத்து புழங்கவிட்ட முதல் ஒருவனில் யத்சமுனி மிக முக்கியமான ஒருவர் என்பதால் இக்கட்டுரையை எழுதவேண்டிய கட்டாயம் எனக்கிருக்கிறது என்பதில் பெருமையுள்ளது.

##இடித்துரைப்பதும் எமது கடமையே……

பகிர்