சென்னை: சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 21–ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடுகிறார். நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். விஷால் வேட்புமனுவில் உறுதிமொழி, கணக்கு விவரங்கள் முறையாக இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது இதனால் நடிகர் விஷாலின் வேட்புமனுவை ஏற்க அ.தி.மு.கவும் திமுகவும் எதிர்ப்பு தெரிவித்தன. இதைத் தொடர்ந்து அவரது மனு மீதான பரிசீலனையில் இழுபறி நீடித்தது. இதை தொடர்ந்து மாலை நடிகர் விஷாலின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி வேலுச்சாமி நிராகரித்தார்.
இதனால் நடிகர் விஷால் தன்னுடைய ஆதரவாளர்களுடன் சேர்ந்து வேட்புமனு நிராகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.
இதனால் வேட்புமனு தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் அழைத்துச்சென்றனர். ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்திற்குள், நடிகர் விஷால் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
பின்பு நடிகர் விஷாலில் வேட்பு மனு ஏற்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
இதற்கிடையே நடிகர் விஷாலின் வேட்புமனுவை முன்மொழிந்த கடிதத்தில் சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதல் இன்றி கையெழுத்திடப்பட்ட புகாரின் அடிப்படையில், நடிகர் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்படுவதாக ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
மதுசூதனனுடைய ஆட்கள் விஷாலுக்காக கையெழுத்திட்ட வேலு என்பரின் மனைவியின் சகோதரியை மதுசூதனன் கடத்தி மிரட்டி விஷாலின் வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வைத்திருந்தார்.
காலையில் இருந்தே விஷாலின் வேட்புமனு தள்ளுபடி ஆக வேண்டும் என்ற நெருக்கடி தேர்தல் அதிகாரிக்கு இருந்த நிலையில், அவர் இழுதடித்துக் கொண்டே இருந்திருக்கிறார். மதியம் மூன்று மணிக்கு உங்கள் மனு குறித்த முடிவை அறிவிக்கிறோம் என்றதும். மூன்று மணிக்கு விஷால் அதிகாரியிடம் சொன்ன போது “வெயிட் பண்ணுங்க” என்றிருக்கிறார்.
அடுத்த பத்தாவது நிமிடம் வேலுவை ஒரு அறையில் அடைத்து விட்டு அவரது மனைவியின் சகோதரியை அவர்தான் மதுசூதனன் கும்பலிடம் சிக்கியிருக்கிறார். அவர்கள் குழந்தைகளையும், வேலுவின் மனைவியையும் கடத்த வந்திருக்கிறார்கள். அவர்கள் சிக்காத நிலையில் வேலு மனைவியின் சகோதரியை கடத்திச் சென்று தேர்தல் அலுவலகதின் அருகில் உள்ள ராஜேஷ் என்பவரின் வீட்டில் வைத்து மிரட்டி. அப்படியே கும்பலாக அழைத்துச் சென்று வாபஸ் பெரும் கடிதத்தையும் எழுதி தேர்தல் அதிகாரியிடம் கொடுததும் அவர் “அப்பாடா” என்று நிம்மதி பெருமூச்சு விட்ட பின்னர். விஷாலை அழைத்து உங்கள் மனு தள்ளுபடி என்றிருக்கிறார். இதற்கு எத்தனை லட்சம் லஞ்சம் வாங்கினார் அந்த அதிகாரி என்று பல கேள்விகள் பொது வெளியில் எழுகிறது.
நிற்க, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று தினகரனும், திமுகவும் மனுக்கொடுத்த போதும் ஆளுநர் இழுத்தடித்தாரே..உகந்த சூழல் வரும் வரை ஜனநாயகத்தை படுகொலை செய்தாரே அதே போல தேர்தல் அதிகாரியும் பெண்ணை கடத்த மறைமுகமாக துணை போயிருக்கிறார்.
இந்த விவகாரத்தில் மதுசூதனன் பின்னனியில் இருப்பதால் இதையடுத்து ஆர்கே நகர் தேர்தலில் தினகரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருப்பதாக விஷால் நமது கப்ஸா நிருபரிடம் தெரிவித்தார்.
பகிர்