விஷால் மனு ஏற்பும் பின் நிராகரிப்பும்..
..
முதலில் இந்திய தேர்தல் முறையில் நிறைய மாற்றங்களுக்கு உட்படுத்தவேண்டும் தனியாக எந்த கட்சியையோ அமைப்பையோ சாராதவர் நிற்க வேண்டுமெனில் 10 பேர் பின்துணைக்கவேண்டுமென்பது கூட ஒருவகை அத்துமீறல்.. சம்பந்தபட்ட தொகுதியை சேர்ந்த வாக்காளர் இருவர் போதுமென அங்கரீக்கபட்ட கட்சிகளுக்கு மட்டுமென்பதை எல்லோருக்கும் என பொதுவானதாக ஆக்கவேண்டும்.. யார் வேண்டுமானாலும் போட்டியிட உரிமை உண்டென்கிற போது.. அதில் எல்லோருக்கும் சமமான நீதியை வழங்கவேண்டும்.. அதிகளவில் தனி வேட்பாளர்கள் வருவார்கள் என காரணம் காட்டி அவர்களுக்குமட்டும் விதிகளில் கடுமையென்பது சிறந்த ஜனநாயகமில்லை.. கட்சிகளுக்கு மாற்று வேட்பாளர் படிவம்
என்ற சிறப்பு மட்டும் போதும் .. அதை வேண்டுமானால் தனி வேட்பாளருக்கு தேவையில்லையென வைக்கலாம்..
தேர்தல் நடத்தும் ஆணையம் எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கவேண்டும்.. தேர்தல் நடத்தும் அதிகாரி யார் வேட்பு மனுவையும் ஏற்கும் நிராகரிக்கும் தகுதியென்பது சரியான முறையாக இல்லை.. படிவத்தில் இருக்கும் தவறுகளை .. திருத்திக்கொள்ள அவகாசம் வழங்கலாம்..
ஏனெனில் கட்சிகள் மற்றும் ஒரு சிலரை தவிர அந்த படிவத்தை பூர்த்தி செய்ய நிறைய பேருக்கு தெரியாது சாதாரணமாக தாலுக்கா அலுவலங்களில் எழுதி கொடுப்பதற்கென்றே வெளியே சிலர் இருப்பர்.. அதே போல தேர்தல் அலுவலகத்திலும் சிலரை நியமிக்கலாம்..
..
சரி ..
விஷாலின் மனு நிராகரிக்கபட்டதாக முதலில் அறிவித்துவிட்டு பின்பு ஏற்றுக்கொண்டதாக சொன்னதேன்.. மீண்டும் சம்பந்தபட்டவரை (கையெழுத்திட்டவர்) அழைத்து விசாரிக்க யார் பணித்தார்கள்.. மீண்டும் தள்ளுபடி செய்ய யாரோ மிரட்டியதாக வரும் செய்தி எந்தளவிற்கு உண்மை..
ஒரு Returning Officers தேர்தல் அதிகாரிகளின் நடத்தை விதிமுறைகள் ஏன் இங்கே மீறப்பட்டது
இதே போல் நிறைய தனி வேட்பாளர்கள் மனுக்கள் தள்ளுபடி செய்யபட்டிருப்பதில் உண்மை நிலையென்ன .. பிரபலமானவர் என்பதால் விஷால் தெரிந்தாரே தவிர.. முகம் தெரியாத அந்த மனுசெய்த தனி நபர்கள் சரியான அளவுகோலோடு நிராகரிக்கபட்டார்களா…. இதற்கெல்லாம் யார் பதில் தருவது..
இந்திய அரசியலமைப்பு வழங்கியிருக்கிற உரிமைகளை சில தவறுகள் தடுக்குமெனில்.
வரையறுக்கபட்ட விதிகள் தவறானதென்றே பொருள்.. இன்னமும் எளிமைபடுத்தபட்டிருக்கவேண்டும் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாமென உரிமை பேசிவிட்டு விதிகளை கடுமையாக்குவது சரியான அணுகுமுறையல்ல..
..
எத்தனை பேர் போட்டியிட்டாலும் வாக்குபதிவு இயந்திரம் தான் என லக்கானி சொல்கிறார்.. இது தேர்தல் நடத்தும் விதிமுறைகளுக்கு எதிரானது..ஏனெனில் 64 பேருக்கு மேல் போனால் வாக்கு சீட்டுமுறையென தேர்தல் ஆணையம் நீதிமன்றத்திலேயே சொல்லியிருக்கிறது..லக்கானியின் பேச்சு 64 பேருக்குமேல் போகாமல் பார்த்துக்கொள்ள தேர்தல் அதிகாரிக்கு வழங்கபட்ட சமிஞ்சை யாக கருதவேண்டியிருக்கிறது…
தேர்தல் அதிகாரிகளிடம் கெஞ்சும் விஷால்…தலையை குனிந்து வாய் மூடி அமர்ந்திருக்கும் அதிகாரிகள். மதுசூதனனை வெற்றி பெற வைக்க மத்திய மாநில அரசுகள் தேர்தல் ஆணையத்தின் உதவியோடு சகல அஸ்திரத்தை உபயோகிக்கிறது. பிறகு ஏன். தேர்தல் என்ற ஜனநாயக கேலிக்கூத்து??
Posted by Political Press Attitude on Wednesday, December 6, 2017
..
விஷாலின் மனு ஏற்போ நிராகரிப்போ அல்ல பிரச்சனை ..எப்படி தேர்தல் ஆணைய அதிகாரி நடந்துக்கொண்டார்.. ஏனிந்த தடுமாற்றம்..யாருக்கு வழங்கி நிற்கிறது தேர்தல் ஆணையம்.. தொடர்ந்து வாக்குபதிவு இயந்திரம் மீதான சந்தேகமற்ற சந்தேகம் நிறைய இடங்களில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவிற்கு வாக்கு விழுந்ததோ அது எப்படி நிகழ்ந்தது வாக்கு பதிவு இயந்திரத்தின் நம்பகதன்மை ஜனநாயகத்தை சர்வாதிகாரமாக்கியிருக்கிறதே ஏன்.. இதையெல்லாம் கவனித்திலேயே கொள்ளாமல் தேர்தல் நடத்துவதைவிட யார் ஆளுகிறார்களோ அவர்கள் விருப்பதற்கு ஏற்றாற்ப்போல் தேர்தலை நடத்திவிடலாம்..
..
தேர்தல் மிக சிறந்த ஜனநாயகமுறை தயவு செய்து அதை கேலிகூத்தாக்கிவிடாதீர்..
..
Aalanci Spm
ஆலஞ்சியார்