ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடும் டிடிவி.தினகரன் கேட்ட தொப்பி, கிரிக்கெட் மட்டை, விசில் சின்னம் ஆகிய மூன்றும் வேறு வேறு சுயேட்சை வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது. அவருக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்ததையடுத்து, அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ளது. இதற்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது. அப்போது அதிமுக இரண்டாக பிளவுப்பட்டு நின்றது. இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு இருந்தது.

இப்போது ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமையிலான அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது. அடுத்த நாளே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டது. கடந்த முறை ஓபிஎஸ் அணி சார்பாக போட்டியிட்ட இ.மதுசூதணன் இப்போது இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். கடந்த முறை சசிகலா சார்பில் போட்டியிட்ட, டிடிவி.தினகரன் தொப்பி சின்னத்தில் போட்டியிட்டார்.

டிசம்பர் 21ம் தேதி நடைபெற உள்ள தேர்தலிலும் அவர் போட்டியிடுகிறார். கடந்த தேர்தலில் தனக்கு ஒதுக்கப்பட்ட தொப்பி சின்னத்தை தருமாறு கேட்டிருந்தார். அது இல்லை என்றால், கிரிக்கெட் மட்டை அல்லது விசில் சின்னம் கேட்டிருந்தார். ஆனால் சுயேட்சையாக போட்டியிட்ட 30 பேர் தொப்பி சின்னத்தை கேட்டு மனு செய்திருந்தனர்.

இந்நிலையில் இன்று மாலை வேட்பு மனுக்கல் வாபஸ் வாங்க கடைசி நாள். மொத்தம் 58 வேட்பாளர்கள் களத்தில் நிற்கிறார்கள். அவர்களில் ‘நமது கொங்கு முன்னேற்ற கழகம்’ சார்பில் போட்டியிடும் ரமேஷ் என்பவருக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டது. பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் தொப்பி சின்னம் ரமேஷூக்கு தேர்தல் கமிஷன் ஒதுக்கியது. விசில் மற்றும் கிரிக்கெட் மட்டை ஆகிய சின்னங்கள் வேறு சுயேட்சை வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் டிடிவி.தினகரன் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து, இன்று ஆர்.கே.நகரில் டிடிவி.தினகரன் செய்ய இருந்த பிரச்சாரத்தையும் ரத்து செய்தார். அவருக்கு குக்கர் சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது.

மதுசூதணன் என்ற பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளருக்கு இரட்டை மின் விளக்கு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதே சின்னத்தில் கடந்த தேர்தலில் இப்போதையை அதிமுக இ.மதுசூதணன் போட்டியிட்டார்.

இதையடுத்து பிரதமர் மோடி உத்தரவின் பேரில் தேர்தல் முடியும் வரை ஆர்கே நகரில் தினகரன் சின்னமான குக்கரில் சமைக்கத் தடைவிதிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக நம்பத்தகாத செய்திகள் தெரிவிக்கின்றன.

பகிர்