சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

பண்பாட்டு மக்கள் தொடர்பகம், லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துக் கணிப்பு நடத்தினர். அதாவது 7 வார்டுகளில் 1,267 பேரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது.

வெற்றி யாருக்கு:

இவை ஆச்சரியம் அளிக்கக் கூடிய வகையில் உள்ளது. அதன்படி, திமுக 33% வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. ஆளுங்கட்சிக்கு 26% வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன.

டிடிவிக்கு பெருகும் ஆதரவு:

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், டிடிவி தினகரன் 28% வாக்குகள் பெற்று, அதிமுகவை தோற்கடித்துள்ளார். இந்த கருத்துக்கணிப்பால் ஆளுங்கட்சியின் அச்சத்தில் உள்ளனர்.

பிற கட்சிகள்:

மேலும் நாம் தமிழர் கட்சி 2.18% வாக்குகளும், பாஜக 1.23% வாக்குகளும் பெற்றுள்ளன. 5.59% வாக்குகள் நோட்டாவுக்கு கிடைத்துள்ளது. சுயேட்சை வேட்பாளர்களுக்கு 4% வாக்குகள் கிடைத்துள்ளன.

பொதுமக்கள் சொல்வது என்ன:

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஆர்.கே.நகரில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக 73% பேர் கூறியுள்ளனர். அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை என்று 70% பேர் குறிப்பிட்டுள்ளனர். விலைவாசி அதிகம் என்று 82% பேர் தெரிவித்துள்ளனர்.

எந்த கட்சி வேண்டும்:

கட்சிகளைப் பொறுத்தவரை திமுகவிற்கு 29.9% ஆதரவு அளித்துள்ளனர். இதன்மூலம் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என்று மக்கள் நம்புகின்றனர். தற்போதைய ஆட்சி தொடர வேண்டும் என்று 0.53% பேர் குறிப்பிட்டுள்ளனர்.

Credit: Samayam

பகிர்