ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலையை தேர்தல் ஆணையம் வழங்கியிருக்கலாம்.

ஆனால் ஆர்கே நகரில் அதிமுக வாக்குவங்கியைப் பறிக்க டிடிவி தினகரன் அணியினர் சாமர்த்தியமாக ஜெயலலிதா, எம்ஜிஆர் படங்களுடன் பிரசாரம் செய்து வருகின்றனர்.

பிரசாரம் தொடங்கியது முதல் விறுவிறுப்பாக பிரஷர் குக்கர் சின்னத்தை பிரபலப்படுத்த தினகரன் தரப்பினர் முனைப்புடன் செயலாற்றி வருகின்றனர்.

அதிமுகவின் மூவர்ண நிற பார்டர் கொண்ட வேட்டியையே அவர்கள் அணிந்து வருகின்றனர். ஆர்கே நகரில் வெற்றி பெற்று உண்மையான அதிமுக தாங்கள்தான் என நிரூபிப்போம் எனக் கூறுகின்றனர்.

.தி.மு.கவுக்குத் தோல்வியைக் கொடுக்கும் வகையில் தினகரன் திட்டம் தீட்டி வருகிறார். துரோகம் செய்துவிட்டுப் போனவர்களின் பிரஷரை அதிகரிக்கச் செய்வதற்காகவே பிரஷர் குக்கர் வந்து சேர்ந்திருக்கிறது என உற்சாகமாகப் பேசினார் தினகரன். குக்கர் சின்னம் கிடைத்த மாத்திரத்தில் ஆயிரக்கணக்கான குக்கர்களை தொகுதிக்குள் இறக்கிவிட்டனர் தினகரன் ஆட்கள்.

ஆர்.கே.நகரில் அ.தி.மு.க மண்ணைக் கவ்வ வேண்டும் என்பதில் தினகரன் உறுதியாக இருக்கிறார். அவர்களைத் தோற்கடித்தால்தான் தனக்கு அரசியல் வாழ்வு என நம்புகிறார். அ.தி.மு.கவுக்கு ஒரு லட்சம் வாக்குகள் கிடைக்கிறது என்றால், அதில் ஐம்பதாயிரம் வாக்குகளைப் பிரித்தால் போதும் என்ற மனநிலையில் இருக்கிறார். இதற்காக என்ன விலை கொடுக்கவும் அவர் தயாராக இருக்கிறார். குடும்பத்தை சமாதானப்படுத்தவும் அ.தி.மு.க நிர்வாகிகளுக்குப் பாடம் புகட்டவும் ஆர்.கே.நகரைப் பயன்படுத்த இருக்கிறார். வரக் கூடிய நாட்களில் தினகரன் பிரசார வியூகம் எதிர்த்தரப்பினருக்குக் கூடுதல் அதிர்ச்சியைக் கொடுக்கலாம் என்கிறார் பெரியகுளத்தைச் சேர்ந்த தினகரன் ஆதரவு பிரமுகர் ஒருவர்.

Graph Credit: Priya GuruNathan

பகிர்