​என்னை கொல்ல காங்கிரஸ் கூலி படையை அமர்த்தினார்கள் @ மோடி
..
இது சிறுப்பிள்ளைத்தனமாக தெரியவில்லையா.. நாட்டின் பிரதமர் பொதுவெளியில் மக்கள் முன்பு இப்படி ஆதாரமில்லாமல் அவதூறை ஓட்டரசியலுக்காக சொல்வது நியாமானதில்லை
பதவி இருக்கிறது அதுவும் இந்தியாவில் அதிகாரமிக்க ஒருபதவி ..எந்த தகவலையும் அதன் உண்மைதன்மையையும் அறிந்து கொள்ளமுடியும் எவரையும் விசாரிக்க உத்தரவிட முடியும் அப்படி இருக்கையில் ஏன் இதுவரை என்னை கொல்ல சதிசெய்தார்களென வழக்கு பதவி செய்யவில்லை..
இதுவரை எத்தனையோ,தேர்தல்கள் வந்த போது கூட வாய் திறக்காமல் குஜராத்தில் நிலமை மோசமாவது கண்டு .. போகுமிடமெல்லாம் விரட்டாத குறையாக மக்களின் எதிர்வினை கண்டு இழந்த இமேஜை மீட்டெடுக்க எந்த நிலைக்கு தாழ்ந்து தரங்கெட்ட அரசியலை செய்வேன் என்பது மோடி என்ற நபருக்கு அழகு… ஆனால் நாட்டின் பிரதமராக இருந்துகொண்டு சொல்வது அசிங்கமான ஒன்று..
..
மணி சங்கர் அய்யர் நீசர் என சொல்லியதின் விளைவாக ..நீச் என்றால் தாழ்ந்த அல்லது இழிவு என பொருள்படும் ..தன்னை தாழ்ந்தவன் என சொல்லிக்கொள்கிறார் .. இந்த வார்த்தை பிரயோகமே வரகூடாதென்று தான் பெரியார் ஆதிதிராவிடர் என அழைக்க சொன்னார்.. இங்கே எவரும் தாழ்ந்தவனில்லை என பேசியிருந்தால் அவரை பாராட்டலாம்.. ஒரு மாநில வெற்றிக்காக பாகிஸ்தானில் கூலிப்படை கொண்டு என்னை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக மணிசங்கர் மீது குற்றம் சாட்டுவது மிகப்பெரிய பதவியில் இருந்துக்கொண்டு கேவலமாக நடந்து கொள்வதைபோல பிரதமர் பதவிக்கே இழுக்கை தருகிறார்..
..
மோடி எப்போதும் வாய்ச்சொல் வீரராகவே அறியபடுகிறார்.. பொதுவெளியில் ஏற்றஇறக்கத்தோடு பேச தெரிந்தவர் இதுவரை நாடாளுமன்றத்தில் நேரடி விவாதத்தில் பங்கேற்றதே இல்லை.. அதை விடுங்கள் அறிவுடையோரின் கேள்விகளுக்கு மழுப்பலாக பதில் சொன்னால் காலம் கடந்தும் தீராத களங்கத்தை .. லாயகற்ற பிரதமர் என்று வரலாற்றில் பதிவாகிப்போகும். பதவியேற்று மூன்றாண்டுகள் கழிந்தும் இன்னும் கூட
பத்திரிக்கையாளர்களை சந்திக்க அஞ்சுகிற பிரதமரை நாடு கண்டதில்லை.. ஏனெனில் பொய்யை மட்டுமே மூலதனமாக கொண்டு அரசியல் செய்கிறவர்கள் ஊடகங்களை சந்திப்பது புலிவால் பிடித்தகதையைப்போல ஆகிவிடுமென்பதால் தவிர்க்கிறார்..
இதுவரை இந்தியா கண்ட பிரதமரில் ஊடகத்தை சந்திக்காதவரென்ற பெருமை இவருக்குமட்டுமே உண்டு ..
இப்போது கூட கோவில் வேண்டுமா மசூதி வேண்டுமா என கேட்டு பிரதமராக இருக்கும் தகுதியை இழந்துநிற்கிறார்.. பாஜகவின் மோடியாக இதை சொல்லியிருந்தால் நமக்கு கவலையில்லை அதை பிரதமர் சொல்வது நாலாந்தர அரசியல்வாதியைப்போல தெரிகிறது குஜராத் கலக்கம் பாவம் பேதலித்துவிட்டது..

எதையாவது பேசி.. பரபரப்பாக வைத்திருந்தால் மக்கள் நம்புவார்களென்பதை .. எப்போதெல்லாம் வாக்கு தேவைபடுகிறதோ அப்போதெல்லாம் பாகிஸ்தானை இழுத்து .. தீவிரவாதம் பயங்கரவாதமென சொல்லி.. அதுவும் கதைக்காகதுபோனால்.. மதவெறியை தூண்டி..கடைசியில் சாதிவெறியை கையிலெடுக்கும் கடைந்தெடுத்த அயோக்கியத்தன அரசியல். எப்போதும் கை கொடுக்காதென்பதால் வாக்கு பதிவு இயந்திரத்தை நம்புகிறார்கள்..
இதையெல்லாம் மீறி ஜனநாயகம் வெல்லவேண்டும்..
..
#எச்சரிக்கை..
..
Aalanci Spm
ஆலஞ்சியார்

பகிர்