This article is a verbatim translation of The Week article, no intention of copy right violation

தேனி, பெரியகுளம் ஜங்க்ஷனில் காலை பரபரப்புடன் காணப்படுகிறது ‘ரோசி கேண்டீன்’. பெரிய சைசில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா படங்கள் சுவரை அலங்கரிக்கின்றன. லுங்கி தரித்த பரட்டை தலைகள் கிளாசில் டீயை ருசித்தபடி ஒலிபெருக்கியில் சினிமா பாடல்களை ரசித்துக் கொண்டிருக்கின்றனர். அங்கு வந்த சப்ளையர் ஒருவர், இது எங்க ஓ.பி.எஸ் ஐயாவோட கேண்டீன். வாழ்க்கையில் அடிமட்டத்தில் இருந்து கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர் எங்க ஐயா. என்கிறார். அந்த ஓ.பி.எஸ் வேறு யாருமல்ல. மூன்று முறை தமிழக முதல்வராக பதவி வகித்து, தற்போது துணை முதல்வராக இருக்கும், ஓ.பன்னீர்செல்வம். ரோசி கேண்டீனுக்கு எதிரில் பாழடைந்து பூட்டி கிடந்த ஒரு கட்டடத்தை காட்டிய லாரி டிரைவர், ‘அந்த பூர்வீக வீட்டுல தான் துணை முதல்வரின் அப்பா ஓட்டக்கார தேவர் வசித்தார். எங்களை மாதிரி டிரைவர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுப்பார். கடைசிகாலத்தில் தொழுநோய் வந்து தனிமையில் இறந்தார். பத்து வருடமாக பூட்டிக் கிடக்கிறது. என்றார்.

ஓ.பி.எஸ் குடும்பத்தினருக்கு சொந்தமான 10 வீடுகள் அந்த பகுதியில் இருக்கின்றன. 70, தெற்கு அக்ரஹாரம் இந்த முகவரியில் தான் ஓ.பி.எஸ் தேனிக்கு வந்தால் தங்குவது வழக்கம். ஓ.பி.எஸ் மகன்களுக்கு தனி பங்களாக்கள் உள்ளன. 2016 தேர்தலில் ஓ.பி.எஸ் சமர்ப்பித்த சொத்துக் கணக்கில் 8.6 லட்சம் அசையும் சொத்துக்களும், 33.20 லட்சம் அசையா சொத்துக்களும் மொத்த சொத்து மதிப்பு 1.53 கோடி எனவும் கூறப்பட்டுள்ளது. ஓ.பி.எஸ் மனைவி பி. விஜயலட்சுமி பெயரில் 200கிராம் தங்க நகைகள் 5 லட்சம் மதிப்பில் உள்ளதாகவும், அசையும் சொத்துக்களாக 26.32 லட்சம் 27 ஏக்கர் விவசாய நிலம் உடன் 2063 சதுர அடி வீடும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டக்கார தேவரின் சொத்துக்கள் ஜூன் 27 1994 அன்று பிரிக்கப்பட்ட போது, 4.60 ஏக்கர் நிலம் ஓ.பி.எஸ்க்கு கிடைத்துள்ளது. அதில் 3.60 ஏக்கர் நிலத்தை ரவீந்திரன் போத்திராஜ் நாயக்கரிடம் ஓ.பி.எஸ் விற்றுள்ளார். மீதமுள்ள ஒரு ஏக்கர் 2011 மற்றும் 2016 தேர்தல் கணக்கில் காட்டப்படவில்லை.

ஓ.பி.எஸ் சொத்துக்கள் பெரிதாக வளராத நிலையில், அவரது உறவினர்கள், மகன்கள் சொத்து பல மடங்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மனைவியை தவிர மற்றவர்கள் ஓ.பி.எஸ்சை நம்பி வாழாததால் அவர்களது கணக்கை காட்ட தேர்தல் விதிமுறை விலக்களிக்கிறது. ஓ.பி.எஸ் ஒரு ஜமீந்தார், ஆனால் சொத்துக்கள் எதுவும் அவர் பெயரில் வாங்கப்படவில்லி என்கிறார் எம்.எல்.ஏ தங்கதமிழ் செல்வன். ஓ.பி.எஸ் மூதாதையர்கள், ஸ்ரீவில்லிப்புத்தூர் கிராமம், மதுரை பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர்கள். 25 வருடங்களுக்கு முன்பு தேனியில் அவர்களுக்கு சொத்து எதுவும் கிடையாது. 1996 பெரியகுளம் முனிசிபல் தேர்தலில் ஓ.பி.எஸ் காண்பித்த சொத்துக் கணக்கில் ஒரு டீக்கடை 25 சவரன் நகைகள் ஒரு ஏக்கர் நிலம் 7.61 லட்சம் மதிப்புள்ள மனைவியின் வீடு கணக்கில் காட்டப்பட்டுள்ளது.

‘தி வீக்’ பத்திரிகையிடம் உள்ள ஆவணங்களின்படி 131 ஏக்கர் விவசாய நிலம், மகன்கள் ஓ.பி.ரவீந்திரனாத் குமார், வி.பி. ஜெயபிரதீப் இருவருக்கும் கார்பரேட் கம்பெனிகள் உள்ளன. விஜயலட்சுமி பெயரில் 32 ஏக்கர் நிலம் உள்ளது. ஓ.பி.எஸ் மருமகன் காசிராஜன் தமிழ்நாடு வீட்டு வசதி கழகத்தில் அரசு வழக்கறிஞராக உள்ளார். காசிராஜனின் தந்தை செல்லப்பாண்டியன் மதுரை கோர்ட்டில் அட்வகேட் ஜெனரலாக உள்ளார். ஓ.பி.எஸ் சகோதரர்கள் ஓ.ராஜா என்ற ராமசாமி, ஓ.பாலமுருகன் மற்றும் ஓ.சண்முக சுந்தரம் என்ற சுந்தர் மூவருக்கும் கணிசமான நிலமும் சொத்தும் தேனி மாவட்டத்தில் உள்ளது. சுந்தர் வீட்டை விட்டு ஓடியவர், ஓ.பி.எஸ் அமைச்சர் ஆனபின் திரும்பி வந்துள்ளார். மணல் மாபியா சேகர் ரெட்டி கைது நாடகம் டிச.8 2016ல் அரங்கேறியது. ரிசர்வ் வங்கி புதிய நோட்டுகள் குறித்த சீரியல் எண்களை இல்லை என்று கூறியதால், அந்த வழக்கு பிசுபிசுத்துள்ளது. அவரது டைரியில், ஓ.பி.எஸ் அவரது மகன்கள் மற்றும் சில அமைச்சர்கள் பெயர் உள்ளது வெளியில் வந்து பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த டைரியில் ஓ.பி.எஸ் ‘பெரியவர்’ என்ற பெயரில் குறிக்கப்பட்டுள்ளார் என சந்தேகிக்கப்படுகிறது. ஜூன் – நவம்பர் 2016 கால கட்டத்தில், பெரியவர், ஓ.பி.எஸ்.ரமேஷ், அட்வகேட் காசி போன்ற பெயர்களில் கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாக எழுதப்பட்டுள்ளது. மொத்தம் 3.79 கோடி கொடுக்கப்பட்டுள்ளது கணக்கில் வருகிறது.

1980களில் ஓட்டக்கார தேவரின் மகன்களில் பேச்சிமுத்து என்கிற பன்னீர்செல்வம் தனி டிராக்கில் பயணிக்க ஆரம்பித்தார். பெரியகுளம் சிட்டி யூனியன் வங்கியில் 20,000 கடன் பெற்று பி.வி.கேண்டீன் ஆரம்பமானது. ராஜாவின் மகள் ரோசி இளம்வயதில் இறந்ததால், ரோசி கேண்டீன் என பெயர் மாறியது. பின்னர் ரிலாக்ஸ் கேண்டீன் எதிரில் உருவானது. இதற்கிடையில் ஓ.பி.எஸ் ரியல் எஸ்டேட் புரோக்கராக உருவெடுத்தார். பஜாஜ் எம்80 மோபட்டில் ஓ.பி.எஸ் புரோக்கராக வலம் வந்த காலத்தையும், பாடலாசிரியர் வைரமுத்துவிற்க்கு 12 ஏக்கர் தென்னந்தோப்பு வாங்கி கொடுத்து கமிஷனாக 2000 ரூபாய் பெற்றதையும் உறவினர் நினைவு கூர்கிறார். 1996 சரித்திரம் திரும்பிப்பார்த்தது, பெரியகுளம் முனிசிபாலிடி சேர்மன் ஆனார் ஓ.பி.எஸ் டிடிவி தினகரன் நட்பு மூலம் ஜெயலலிதாவின் சந்திப்பு அமைந்தது. 2001 ஜெயலலிதா டான்சி நில வழக்கில் சிறை சென்ற போது, முதன்முறையாக முதல்வர் நாற்காலியை ஓ.பி.எஸ் அலங்கரிக்கும் அவலம் நேர்ந்தது. ஜெயலலிதா மறைந்தபிறகு தர்மயுத்தம் தொடங்கிய ஓ.பி.எஸ் ஊழல் ஆட்சி நடக்கிறது என்று எடப்பாடி பழனிசாமியை குறைகூறிவிட்டு, அவருடனே போய் சேர்ந்துகொண்டுள்ளது சந்தர்ப்பவாத புத்தியை காட்டுகிறது. 2006 திமுக ஆட்சியை பிடித்தபோது, சொத்துக் குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. பின்னர் பிசிபிசுத்தது.

ஜெயலலிதா சசிகலாவை ஒதுக்கி வைத்து, தினகரனை ஓரம்கட்டிய சந்தர்ப்பத்திலும் ஓ.பி.எஸ் வளர்ச்சி இருந்தது. பின்னர் ஓ.பி.எஸ்க்கு சொந்தமான லக்ஷ்மிபுரம் பஞ்சாயத்து கிணறு பிரச்சினை பூதாகாரமானது. கிராம மக்கள் ஒன்றிணைந்து, கிணற்றை வாங்க பணம் திரட்டினர், உடனடியாக மனைவி பெயரில் இருந்த கிணறு சுப்புராஜ் என்பவருக்கு சொந்தமானது. பின்னர் கிராம மக்கள் போராடி கிணற்றை மீட்டனர். தற்போது சுற்றியுள்ள 40 ஏக்கர் நிலத்தை மீட்கவும் போராடி வருகின்றனர். அரசுக்கு சொந்தமான 99 ஏக்கர் நிலத்தை (போஜராஜ் டெக்ஸ்டை மில்லுக்கு அருகில் உள்ளது) மார்க்கெட் ரேட்டில் பாதி விலைக்கு ஓ.பி.எஸ் அடிமை ஒருவர் வாங்கியுள்ளதாக தெரிகிறது. பத்து வருடங்களுக்கு பழைய பேப்பர் பிசினஸ் ஆரம்பித்த ஓ.பி.எஸ் மகன்களுக்கு வாணி பேப்ரிக்ஸ் என்ற நிறுவனம் உட்பட 57.75 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன.

தற்போது ஓ.பி.எஸ் மகன்கள் மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் வாணிபம் செய்ய முயற்சித்து வருவதாக தெரிகிறது. போடிநாயக்கனூரில் முண்ணணியில் உள்ள ஏலக்காய் வணிகத்தை ஓ.பி.எஸ் குடும் குத்தகைக்கு எடுத்து, கோலோச்சி வருவதாக தெரிகிறது. ராஜசேகரன் என்ற வழக்கறிஞர் தகவல் அறியும் சட்டத்தில் விசாரித்ததில் இங்கு ஒரு மாபியா கேங் போல் ஓ.பி.எஸ் பினாமிகள் செயல்பட்டு வருவது தெரிகிறது. தினக்கூலிகளின் பேரில் உரிமங்கள் பெறப்பட்டு வணிக முறைகேடு நடக்கிறது. 2013 ஆண்டு இறந்து போன ஒரு டிரைவரின் பேரில் உரிமம் வழங்கி அரசுக்கு 26 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஓ.பி.எஸ் முதல்வராக இருந்த 2014-15 காலகட்டத்தில் இந்த மாபியாவுக்கு ஆதரவாக வரிவிகிதம் 5 சதவிகிதத்தில் இருந்து 2 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. இதனால் அரசுக்கு 3000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஓட்டக்கார தேவர் கல்வி அறக்கட்டளை மூலம் 15 கோடி பள்ளிக் கட்டடம் சொத்து சேர்க்கப்பட்டுள்ளது. ஓ.பி.எஸ் சொத்து சேர்ப்பு மட்டும் அல்லாமல் கொலை மற்றும் கொலைவெறித் தாக்குதல் குற்றப் பிண்ணனி சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார். எஸ்.நாகமுத்து என்ற தலித அர்ச்சகர் 2012ல் தற்கொலை செய்துகொண்டார்.

2002ஆம் ஆண்டு தென்கரை கைலாசநாதர் கோவிலை ஒரு காட்டுக்குள் கண்டுபிடித்து அர்ச்சனை செய்து பராமரித்து வந்தார். 2007 வரை ஓ.பி.எஸ் குடும்பம் உதவி செய்துள்ளது, பின்னர் அருகில் உள்ள குகையில் புதையல் இருப்பதை நாகமுத்து கண்டறிந்ததும், அவரை தற்கொலைக்கு தூண்டியுள்ளது. ஓ.பி.எஸ் நண்பர்களான சன்னாசி அவரது மகன் விக்கிக்கு சொந்தமான விஷ்னு மோட்டார்ஸ் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்த கலைவாணன் என்பவர் காணாமல் போய் உள்ளார். அவர் ஓ.பி.எஸ் தரப்பால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது. ஓ.பி.எஸ்-ஈ.பிஎஸ் அணிகள் ஒன்றிணைந்து இரட்டை இலை சின்னம் கைப்பற்றப்பட்டுள்ளது. சின்னம்மா மற்றும் உறவினர்களின் வீடுகளில் வரலாறு காணாத அளவில் ரெய்டுகள் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து தினகரன் கூறும்போது, ‘இந்த ரெய்டுகள் தேர்ந்து எடுத்த இடங்களில் அரங்கேறி உள்ளது, ஊழலை ஒழிப்பவர்கள், முதலில் ஓ.பி.எஸ்-ஈ.பிஎஸ் வீடுகளில் ரெய்டுகள் நடத்தி இருக்க வேண்டும்.” என்றார்.

பகிர்