ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரில் வரும் 21ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், சுயேட்சையாக டிடிவி தினகரன் ஆகியோர் நடுவே கடும் போட்டி நிலவுகிறது. இதுகுறித்த லயோலா கல்லூரியின் பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான மக்கள் ஆய்வு மைய அமைப்பின் சுவாரசிய கருத்துக்கணிப்பு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளன. வேட்பாளரின் சின்னத்தையும் சம்பந்தப்பட்ட வேட்பாளர்களின் பெயரையும் சரியாகப் பொருத்துவதில் பிரஷர் குக்கர்- டிடிவி தினகரன் இணை 91.6 சதவீதம் பேரால் அடையாளம் காணப்படுவதாக லயோலா கல்லூரியின் பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான மக்கள் ஆய்வு மைய அமைப்பின் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. வேட்பாளரின் சின்னத்தையும் சம்பந்தப்பட்ட வேட்பாளர்களின் பெயரையும் சரியாகப் பொருத்துவதில் பிரஷர் குக்கர்- டிடிவி தினகரன் இணை 91.6 சதவீதம் பேரால் அடையாளம் காணப்படுவதாக லயோலா கல்லூரியின் பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான மக்கள் ஆய்வு மைய அமைப்பின் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. டி.டி.வி.தினகரனுக்கு இந்த தேர்தலில் ஒதுக்கப்பட்டு இருக்கும் பிரஷர் குக்கர் சின்னத்தை அத்தொகுதியிலுள்ள 91.6 சதவீதம் மக்கள் எளிதாக அடையாளம் காண்கிறார்கள்.
இரட்டை இலையை 81.1 சதவீதம் பேரே எளிதில் அடையாளம் கொண்டுள்ளதாக இந்த சர்வே கூறுவதை பார்க்கும் போது ஜெயலலிதா இறந்தவுடன் இரட்டை இலையை மக்கள் மறந்து விட்டனர் என்பது கண்கூடாக தெரிகிறது. உதயச்சூரியனை 77.8 சதவீதத்தினரும், மெழுகுவர்த்திகள் சின்னத்தை 14.2 சதவீதத்தினரும், தாமரை சின்னத்தை 10.4 சதவீதம் பேரும் அடையாளம் காண்கின்றனர். கடந்த முறை தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டது. அப்போது தொப்பியை பிரபலப்படுத்த தினகரன் படாதபாடுபட்டார். இந்த முறை அவருக்கு தொப்பி சின்னம் ஒதுக்காமல் பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பிரஷர் குக்கர் சின்னம் தாய்மார்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்துள்ளது. இந்த இடைத்தேர்தலில் தினகரன் நிச்சயம் வெல்வார் என்று கருத்து கணிப்பு முடிவுகள் சொல்கின்றன. இதை வைத்து பார்க்கும்போது இரட்டை இலையை மக்கள் மதிக்கவில்லை என்று தெரிகிறது.
நேற்று சுயேச்சையாக களம் இறங்கிய தினகரனுக்கு இத்தனை மவுசா என்று மற்ற அரசியல்வாதிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். பிரஷர் குக்கர் சின்னம் அறிவித்த கொஞ்ச நாட்களிலேயே தொகுதி முழுவதும் சென்றுவிட்டது. வாக்காளர்களுக்கு பிரஷர் குக்கர் லஞ்சமாக வழங்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. ஆர்.கே.நகரில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் உரிய ரசீது இன்றி கொண்டு வரப்பட்ட 500 குக்கர்கள் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து குக்கர்கள் சப்ளை செய்யப்படுகிறதா? என்று கண்காணிக்கப்பட்டு வருகிறது. தொகுதி முழுவதும் பணப்பட்டுவாடாவும் நடைபெற்று வருவதாக அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணைய அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆர்.கே நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு கொடுக்க ஒன்றரை லட்சம் குக்கர் தயாரிக்க டிடிவி தினகரனால் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொகுதியில் உள்ள 1 லட்சத்து 20 ஆயிரம் பெண் வேட்பாளர்களை கணக்கில் கொண்டு, வீட்டுக்கு வீடு தலா ஒரு குக்கர் வழங்க டிடிவி தினகரன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி சுமார் ஒன்றரை லட்சம் குக்கர் தயாரிக்க ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஆர்டர் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குக்கர் சின்னத்தில் வாக்களித்தால் தோற்றாலும், ஜெயித்தாலும் தேர்தலுக்கு பின் குக்கர் வழங்கப்படும் என்ற வாய்மொழி வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகிறதாம். ஒவ்வொரு குக்கருக்குள்ளும் தனிக்கவரில் 2,000 ரூபாய் வைத்து கொடுக்கவும் திட்டமிடப்பட்டு வேலை நடைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. (ஏற்கனவே உங்கள் நியூஸ் வெளியிட்ட ‘கேஸ்கட்டுக்கு பதில் கேஷ் கட்டு’ செய்தி உண்மையாகி உள்ளது) இது பற்றிய தகவல் அறிந்ததும் ஆர்.கே.நகர் தொகுதிக்காக நியமிக்கப்பட்ட தேர்தல் பார்வையாளர்கள் குக்கர் எங்கு தயாரிக்கப்படுகிறது, எப்போது எங்கே வைத்து விநியோகிக்கப்பட உள்ளது என்ற கண்காணிப்பு பணியை முடுக்கி விட்டுள்ளனர்.
 ஆர்கே நகரில் இடமில்லாவிட்டாலும் நடுக்கடலில் குக்கர் பிளாண்ட் அமைத்து, அதிமுகவை மக்கர் செய்ய வைப்பேன் என்றார். டிடிவிக்கு போட்டியாக ஆர்.கே.நகர் தொகுதியில் பெண்களுக்கு ஸ்கூட்டி தருவதாக கூறி அமைச்சர் ஒருவர் டோக்கன் வினியோகித்து வருவதாக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இதுபற்றியும் தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அம்மா ஸ்மார்ட்போன் வழங்க அதிமுக தலைமை முடிவெடுத்தபோது, கமல் சரத்குமார் உள்ளொட்டோர் ‘ஆப்பு’ வைத்து விடக்கூடும் என்பதால் அந்த யோசனை கைவிடப்பட்டது. மேலும் அதிமுக அரசின் செயல்பாடுகள் மக்களுக்கு எரிச்சலை ஊட்டியுள்ளன. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள் குக்கர் என்பதாலும் அது பிரபலம் அடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் புரிந்து கொள்ள வேண்டும் வலுவான தலைமையே தமிழ்மக்கள் விரும்புகிறார்கள். தொடை நடுங்கிகளை அல்ல என்பது இதன்மூலம் புலனாகிறது.
பகிர்