பின்னர் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “மீனவர்கள் காணாமல் போனது தொடர்பாக பிரதமரிடம் பேசி தேடுவதற்கு ஏற்பாடு செய்தேன். அமைச்சர்களை அனுப்பி உதவவைத்தேன். இப்போதும் நிறைய பேரைக் காணவில்லை என்பதால் தேடும் பணி தொடரும். கடைசி மீனவன் கிடைக்கும் வரை தேடும் பணியைத் தொடர்ந்து நடத்துவோம். புயலால் வீடிழந்தவர்களுக்குப் பசுமை வீடுகள் திட்டத்தின்கீழ் வீடுகள் கட்டித்தரப்படும். புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 20 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கபடும். அத்துடன், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித் தகுதி அடிப்படையில் வேலை வழங்கப்படும். கடலில் காணாமல் போனவர்கள் இறந்ததாக அறிவிக்க 7 வருடங்கள் என்று இருப்பதை, முடிந்த அளவுக்குச் சட்டத் திருத்தம் செய்யப்படும். ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் செல்பவர்களுக்கு அவசரகாலத்தில் தகவல் தெரிவிக்க ஏதுவாக 68 கோடி ரூபாய் செலவில் 300 அடி உயர கோபுரம் அமைத்து தகவல் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

பின்னர் கப்ஸா நிருபரிடம் பேசும் போது இப்போது ஆர்கே நகரில் இடைத்தேர்தலுக்காக பணப் பட்டுவாடாவில் பிசியாக இருக்கிறோம். அங்கு பட்டுவாடா செய்து கஜானாவில் ஏதேனும் மிச்சம் இருந்தால் மீனவர்களுக்கு கொடுப்போம், இல்லாவிட்டால் எல்லோருக்கும் கருவாடு தான் கதி என்றார்.

பகிர்