ஆர்.கே.நகரில் சுயேட்சையாக களமிறங்கி, ’தொப்பி’ சின்னத்தை கோரிய தினகரனுக்கு அது மறுக்கப்பட்டது. பெண்களின் பொருளான ‘குக்கர்’ ஒதுக்கப்பட்டது. இதைக் கண்டு பழனியப்பன், தங்கத்தமிழ்செல்வன், செந்தில்பாலாஜி ஆகியோர் தலைமையில் எக்கச்சக்க ஆதரவாளர்களி கவலையான முகத்துடன் தினகரனை நெருங்கியபோது ”ஏன் கவலைப்படுறீங்க? இவங்க எனக்கு நெருக்கடி கொடுத்து நெருக்கடி கொடுத்து அலைய அலைய வெச்சு இன்னொரு அம்மாவாகவே மாத்திட்டிருக்காங்க.

அம்மா, தலைவர் கையில் இல்லாம தனிச்சு வெச்சுப் பார்த்தா இரட்டை இலையும் ஒரு சுயேட்சை சின்னம்தான். அதனால அம்மா பெயரைச் சொல்லி குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு போயி சேர்ப்போம். சத்துணவு போட்டு மக்கள் தலைவரானார் எம்.ஜி.ஆர்., அம்மா உணவகம் அப்படின்னு ஒரு திட்டத்தை துவக்கி தமிழ்நாட்டுக்கே சோறு போட்டவங்க அம்மா! இந்த குக்கரும் சோறுதானே போடுது அதனால தெரிஞ்சோ தெரியாமலோ எனக்கு இந்த அதிகார வர்க்கமெல்லாம் நல்லதுதான் பண்ணிட்டிரு இருக்குது.” என்று புன்னகை மாறாத முகத்துடன் உசுப்பிவிட்டு அனுப்பினார் டி.டி.வி. அதன் பலனை இதோ அனுபவிக்கிறார்.

தமிழகத்தை பொறுத்தவரையில் தேர்தல் என்று ஒன்று வந்துவிட்டால் எல்லோரும் எதிர்பார்ப்பது பேராசிரியர் ராஜநாயகத்தின் கருத்துக் கணிப்பைத்தான். இதோ ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சாரம் செகண்ட் கியருக்கு மாறியிருக்கும் நிலையில் அந்த தாடி மனிதர் ‘முந்துவது யார்?’ என்று பேட்டி தட்டியிருக்கிறார். ராஜநாயகத்தின் ஆசீர்வாதம் டி.டி.வி.க்கு கிடைத்திருப்பதுதான் ஆளும் கூட்டங்களை கலங்க வைத்திருக்கிறது.

தினகரனுக்கு சாதகமாக சர்வேயில் கிடைத்த தகவல்களாக ராஜநாயகம் சொல்லியிருப்பன:

* தினகரனின் சின்னம் குக்கர் என்பது தொகுதியில் 91.6% வாக்காளர்களை சென்றடைந்திருக்கிறது.

* அறிவாற்றல், துணிச்சல், நிர்வாக திறன், துடிப்பான செயல்பாடு, ஊடகச்சிறப்பு, வெகுஜன உறவு, சமூக அக்கறை ஆகியவாற்றால் தினகரன் முன்னிலை வகிக்கிறார்.

கலங்கி நின்ற தனது ஆதரவாளர்களிடம் தினகரன் கூறியதையேதான் அரசியல் விமர்சகர்களும் சொல்கிறார்கள்…அதாவது எம்.ஜி.ஆர். இறப்புக்குப் பின் ஜானகி அல்லாது ஜெயலலிதா முன்னிலைக்கு வருவதை பெரும் படை தடுத்தது. மாஜி சபாநாயகர் காளிமுத்து உள்ளிட்ட முக்கிய வி.ஐ.பி.க்கள் காட்டிய கள ஆக்ரோஷமெல்லாம் அசாதாரணமானது. ஆனால் அதையெல்லாம் தனது சாதுர்ய குணத்தால் எதிர்த்து சூறையாடினார் ஜெ., ஒரு கட்டத்தில் ஜெவிடம் சாஷ்டாங்கமாக ஐக்கியமானார் காளிமுத்து.

இன்று தினகரனுக்கும் இதையேதான் ஆளும் அணி செய்து கொண்டிருக்கிறது. ஆனா அடிபட அடிபட எப்படி அன்று ஜெயலலிதாவுக்கு மக்கள் மாஸ் ஏறியதோ அதையேதான் தினகரனுக்கு இன்று நடக்கிறது என்கிறார்கள். ஜெயலலிதாவி கொள்கை ரீதியில், நிர்வாக ரீதியில் விமர்சிப்பவர்கள் கூட அவரை தோற்றம் ரீதியில் ‘கரிஷ்மேடிக் பர்ஷன்’ என்பார்கள். இன்று தினகரனும் அதை பேரைத்தான் வாங்கி வைத்திருக்கிறார்.

எடப்பாடி மற்றும் பன்னீரிடம் எக்காலத்திலும் வரவே வாய்ப்பில்லாத, ஸ்டாலினிடம் இத்தனை ஆண்டுகளில் வந்துவிடாத ‘மக்களை ஈர்க்கும்’ ஒரு சூட்சமம் இயல்பாகவே தினகரனிடம் இருக்கிறது. இன்னொன்று, ஆளும் அ.தி.மு.க. டீம் மீது மக்கள் வெறுப்பில் இருப்பதும், ஏற்கனவே ஆண்ட தி.மு.க. மீது ஆயாசத்தில் இருப்பதும் தினரனை நோக்கி ‘வாய்ப்பு கொடுத்துத்தான் பார்ப்போமே!’ என்று மக்களை யோசிக்க வைத்திருக்கிறது.
இது போக பந்தை உருட்டி விட்டாலே சிக்ஸரடிக்கும் தினகரனுக்கு லவ்லியாக ஒரு ஓவரை ஒதுக்கியிருக்கிறார் ராஜநாயகம். ஆக இனி கிரவுண்டில் தினா அட்டெண்ட் செய்யும் ஒவ்வொரு பந்தும் பவுண்டரி, சிக்ஸர் என பறக்கும்.

தினகரன் ஜெயலலிதாவாவதை, கடமை எல்லையை தாண்டி நடக்காததன் மூலம் மட்டுமே எடப்பாடி அண்ட்கோவால் தடுக்க முடியும். மக்கள் செல்வாக்கு இருக்கிறதே என்று கடுப்பில் கைது அதுயிதுவென அவர் மீது கைவைத்தால் ஆதரவு இன்னும் அதிகரிக்கத்தான் செய்யுமே தவிர மங்காது: என்கிறார்கள்.

பகிர்