கவுசல்யாவுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பையும், அரசு வேலையையும் வழங்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”கடந்த 2016 மார்ச் 13 அன்று உடுமலைபேட்டை சங்கர் கூலிப்படையினரால் மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். சங்கரும் கவுசல்யாவும் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதால் கவுசல்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூலிக்கும்பலை வைத்து ஈவிரக்கமின்றி இந்தப் படுகொலையை செய்தனர். கூலிக்கும்பலின் கொடூரத் தாக்குதலில் படுகாயமுற்ற கவுசல்யா உயிர் தப்பினார்.

திருப்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த சங்கர் கொலை வழக்கில் இன்று அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஆணவக் கொலைகள் செய்யும் கும்பலுக்கும் கூலிக்கு கொலை செய்யும் கும்பலுக்கும் இந்த தீர்ப்பு ஒரு பாடமாக அமையும். தமிழகத்தில் மட்டுமல்ல அகில இந்திய அளவில் சாதி வெறியர்களுக்கும் மத வெறியர்களுக்கும் பாடம் புகட்டும் வகையில் இத்தீர்ப்பு அமைந்துள்ளது. இந்த காட்டுமிராண்டி கலாச்சாரத்தை எதிர்த்து துணிந்து போராடிய கவுசல்யாவுக்கு இத்தீர்ப்பு மிகப் பெருமளவில் ஆறுதல் அளிக்கும். கவுசல்யாவுக்கு மட்டுமின்றி மனிதநேயமுள்ள ஒவ்வொருவருக்கும் இத்தீர்ப்பு ஆறுதல் அளிப்பதுடன் நீதித்துறையின் மீது நம்பிக்கையை அளிக்கும். இத்தீர்ப்பை வழங்கிய நீதியரசர் அலமேலு நடராஜனை விசிக நெஞ்சாரப் பாராட்டுகிறது.

பொதுவாக மேல்முறையீடு செய்யும்போது உயர் நீதிமன்றத்தில் இதுபோன்ற தீர்ப்புகளுக்கு எதிராக தீர்ப்பளிப்பது நடைமுறையாக இருந்து வருகிறது. எனவே, மேல்முறையீட்டு வழக்கிலும் அரசு தரப்பில் உறுதியாக நின்று வழக்காடி இத்தீர்ப்பை தக்கவைத்து நீதியைக் காப்பாற்ற வேண்டும்.

கவுசல்யாவுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்குவதோடு, அரசு வேலையையும் வழங்க வேண்டும். மேலும் மைய, மாநில அரசுகள் ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் இயற்ற வேண்டும்” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மேலும் நமது கப்ஸா நிருபரிடம் பேசும்போது…கவுசல்யாவை வைத்து இன்னும் நிறைய நான் சாதிக்க வேண்டியுள்ளது. அவ்வப்போது அனிதாக்களும் கவுசல்யாக்களும் நமக்கு கிடைத்து நம்மை அரசியலில் வாழ வைத்துக்கொண்டிருக்கின்றார். கவுசல்யாவுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று கூவத்தூர் பழனிச்சாமிக்கு கோரிக்கை வைப்பேன் என்றார்.

பகிர்