திருமாவளவனை கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த சென்ற எச் ராஜா கைது செய்யப்பட்டார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இந்துக்களின் மனது புண்படும்படி பேசியதாக அவர் மீது சர்ச்சை எழுந்தது. அம்பேத்கர் நினைவு நாளில் கூட்டத்தில் பேசிய திருமாவளவன், ‘அயோத்தியில் ராமர் கோயில் இருந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டது. அதனால் பாபர் மசூதி இடிக்கப்பட்டதாக சங் பரிவார் போன்ற அமைப்புகள் கூறி வருகின்றன.

இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான சிவன் கோவில்களும், பெருமாள் கோவில்களும், பௌத்த விஹார்களையும், சமண கோவில்களையும் இடித்துவிட்டுத்தான் கட்டி இருக்கிறார்கள். ஒரு வாதத்திற்கு கேட்கிறேன். சிவன் மற்றும் பெருமாள் கோவில்கள் இருக்கும் இடங்களில் புத்த விஹார்கள் கட்ட தயாரா?’ என்று பேசினார். இதையடுத்து இந்துக் கோயில்களை இடிக்க வேண்டும் என பேசியதாக கூரி திருமாவளவனுக்கு பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்து கோவில்கள் குறித்தும், பிரதமர் மோடி குறித்து கடுமையாக விமர்சித்த திருமாவளவன், ‘நீச் ஆத்மி’ என்ற மணிசங்கர் அய்யர் ஆகியோரை கண்டித்து, பாஜக சார்பில் காரைக்குடியில் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது பேசிய அக்கட்சியின் தேசிய செயலர் எச்.ராஜா, வேட்டியை மடித்து கட்டினால் தானும் ரவுடி தான் என்றார். திருமாவளவனுக்கு புதியதாக ‘தீயசக்தி திருமா’ என்ற அடைமொழியையும் கொடுத்தார். சீர்காழியில் டிசம்பர் 11ம் தேதி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் பாஜகவினர் மீது வி.சி.க வினர் கல்வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.


கொருக்குப்பேட்டை ராதாகிருஷ்ணன் நகரில் உள்ள பிசியோதெரபி மையத்தில் ரூ.13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருவண்ணாமலையை சேர்ந்த அதிமுக பிரமுகர் பச்சையப்பனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிமுகவினரிடம் இருந்து மூட்டை மூட்டையாக பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஒரு வீட்டில் ரூ.20 லட்சம் பதுக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார் தெரிவித்துள்ளது. பணம் பதுக்கப்பட்டுள்ள வீட்டுக்கு எதிரே திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கொருக்குப்பேட்டையில் பணம் பதுக்கப்பட்ட வீட்டுக்கு பூட்டு போடப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் மொத்தம் 210 வாக்குச் சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு சாவடிக்கும் பணம் தர சராசரியாக 50 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
