நடிகர் விஜய்யின் தந்தை ஏ.எஸ்.சந்திரசேகர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்யலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் சில நாள்களுக்கு முன்பு நடந்த ‘விசிறி’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசினார். அப்போது, நாட்டில் லஞ்சம் பெருகியுள்ளது. கடவுளுக்கே லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது என்று திருப்பதி கோயில் காணிக்கையைக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார். இவரது இந்தப் பேச்சு சர்ச்சையைக் கிளப்பியது.
இந்த நிலையில், எஸ்.ஏ.சந்திரசேகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த நாராயணன் என்பவர் போலீஸில் புகார் அளித்தார். ஆனால், எஸ்.ஏ.சந்திரசேகர் மீது எந்த நடவடிக்கையும் காவல்துறை எடுக்காமல் இருந்தது. இந்த நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகர்மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி நாராயணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் நாராயணன், `மனுதாரர் நாராயணன் தொடர்ந்த வழக்கில் முகாந்திரம் இருப்பதாகப் போலீஸார் கருதினால் இந்தப் பிரச்னை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்யலாம்’ என்று கூறியுள்ளார். முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்துக்கு நீண்ட நாள்களாக பிரச்சினைகள் விடாது கருப்பாய் பின் தொடர்ந்தன. ஆரம்பத்தில் தலைப்புக்கு பிரச்சினை, பின்னர் படம் வெளியாவதில் பிரச்சினை என இருந்தது. படம் வெளியான பிறகு, ஜிஎஸ்டி குறித்த கருத்துகளை நீக்க கோரி பாஜகவினர் வலியுறுத்தி வந்தனர். மருத்துவ துறை முறைகேடு, ஜிஎஸ்டி தொடர்பான வசனங்கள் உள்பட பல பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. பாஜக அரசை கொந்தளிக்க வைத்த மெர்சல் படத்தில் விஜய் பேசிய பன்ச் வசனங்கள் என்ன என்பதை இங்கே பார்ப்போம்.
“7 சதவீதம் ஜிஎஸ்டி வாங்கும் சிங்கப்பூர் அந்த நாட்டு மக்களுக்கு மருத்துவத்தை இலவசமாக தரப்போ, 28 சதவீத ஜிஎஸ்டி வாங்கும் நம்ம அரசாங்கத்தால ஏன் மருத்துவத்தை இலவசமாக தர முடியல?. மெடிசினுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டியாம், ஆனால் தாய்மார்களின் தாலியை அறுக்கும் சாராயத்துக்கு ஜிஎஸ்டியே கிடையாது. நம்ம நாட்டோட நம்பர் 1 மருத்துவமனையில ஆக்சிஜன் சிலிண்டரே இல்லை. என்னடா காரணம் கேட்டா, ஆக்சிஜன் சப்ளை பன்ற நிறுவனத்துக்கு 2 வருஷமா பணம் பாக்கியாம். இன்னொரு கவர்மென்ட் ஆஸ்பிட்டல் டையாலிசிஸ் பன்றப்ப கரென்ட் கட் ஆகி 4 பேர் செத்தே போயிட்டாங்க. ஒரு பவர் பேக்கப் கூட இல்லை. இன்குபேட்டரில் இருந்த குழந்தை பெரிச்சாலி கடிச்சு இறந்தத நம்ம ஊர்ல மட்டும்தான்யா பாக்க முடியும். ஜனங்க நோயை பார்த்து பயப்படறத விட கவர்மென்ட் ஆஸ்பிட்டல்ஸ பார்த்துதான் பயப்படறாங்க. அந்த பயம்தான் பிரைவேட் ஆஸ்பிட்டல்ஸோட இன்வெஸ்மென்ட்” என்று விஜய் வசனம் பேசியுள்ளார்.
இந்நிலையில் சிபிஎஸ்இ மூன்றாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் தமிழர்களின் கலாச்சாரம் என்ற தலைப்பில் விஜய் வேஷ்டி சட்டை அணிந்திருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இந்த புகைப்படத்தை ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். பொங்கல் விழாவை பற்றிய குறிப்பில் வேஷ்டி, சட்டை தமிழர்களின் பாரம்பரிய உடை என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வேலாயுதம் படத்தில் விஜய் வேஷ்டி சட்டையுடன் நடந்து வரும் புகைப்படத்தையும் பயன்படுத்தியுள்ளனர். மத்திய அரசின் சிபிஎஸ்ஈ கல்விப் புத்தகத்தில் எப்படி ஒரு கிறித்தவரின் புகைப்படம் பாரம்பரிய பொங்கல் பண்டிகைக்கு உதாரணம் ஆகலாம்? என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. ஏற்கனவே திருமாவளவன் இந்து கோயில் இடிப்பு பேச்சு, கமல்ஹாசனின் இந்து தீவிரவாதம் பற்றிய பேச்சில் வெகுண்டெழுந்த பாஜக தற்போது விஜய்யை பழிவாங்கும் விதமாக அவரது தந்தை சந்திரசேகரை கைது செய்ய திட்டமிட்டுள்ளது தெளிவாகிறது.