தேர்தலை நிறுத்த அதிமுகவிற்கு வேறு வழி தெரியவில்லை எடப்பாடிக்கும் பன்னீருக்கும் தோல்விபயம் வந்துவிட்டது..  கட்சியின் அடிமட்ட தொண்டன் தினகரனை விரும்புவதை தேர்தல் பணியில் காண முடிந்ததை.. கட்சி நழுவி தினகரனிடம் சென்றுவிட்டால்… என்ன செய்வதென்பதற்காக பகிரங்கமாகவே பண விநுயோகத்தை அதிமுகவின் எம்பி பாலகங்கா வீட்டிலேயே தந்து.. அதை வெளியே வந்து தேர்தலை நிறுத்தினால் தான்.. ஆட்சியை தொடரமுடியுமென்பதால் .. எடப்பாடி அணி பணத்தை வாரி இறைக்கிறது..
..
தெரிந்தே தேர்தலை நிறுத்தும் செயல் இது .. இதுவரை தேர்தலுக்கு பணம் கொடுக்கும் போதெல்லாம் இடைதரகர்கள் அல்லது கடைமட்ட ஊழியர்களை வைத்து செய்தவர்கள் நேரடியாகவே விநியோகம் செய்கிறார்கள்.. நல்ல வளர்ச்சி..
என்ன அவ்வளவு பயம்..தினகரன் மீது..

வழக்கு சோதனை என தொடர்ந்து இடையூறு செய்தும் எல்லாவற்றையும் வழக்கையும் எதிர்க்கொள்ளலாம் என்கிற மனஉறுதியும்.. ஏறக்குறைய 30 ஆண்டுகள் ..வழக்கு,..,விசாரணை கைது சோதனை என்று நிறைய பார்த்து பழகியதால் .. எதுவாயினும் பார்த்துக்கொள்ளலாமென்ற தைரியமும் எதற்கும் இந்த திருநாட்டில் விலைநிர்ணயமுண்டு என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையும் தினகரனை செயல்பட வைத்திருக்கிறது.. ஆளும் கட்சி செய்யபோகும் தில்லுமுல்லுகள் முதலில் தினகரனுக்கு தகவலாக வந்துவிடுவதும் ..அதை தொடர்ந்து ஆளும்கட்சி நடத்துகிற பணபட்டுவாடா முதலில் செய்தியாக்கி ஜெயா டிவி வெளியிடுவதும்
ஆளும்கட்சியை பதட்டமடைய செய்திருக்கிறது.. அதிமுகவின் மாவட்ட செயலர் தினகரன் அணியாகி போனதால் அங்கே வேலை செய்ய ஆளும்கட்சி ஆளில்லாமல் தவிக்கிறது..
..
வெளிப்படையாகவே நாங்கள் பணம் கொடுத்துதான் வாக்கை வாங்குவோம் என்கிற தைரியம் ஆளும்கட்சியாக இருப்பதால் காவல்துறை கண்டுக்கொள்ளாமல் இருப்பதும்.. ₹.k.நகரில் பணம் மழையாய் பொழிகிறது.. வாக்காளன் இருபுறமும் பணம் கொட்டுகிறது.. அங்கே குக்கரில் பணம் ..இங்கே அடையாள அட்டையை காட்டினாலே பணம்.. ஆசை மனிதனை விடாது வலியவந்து தருவதை வேண்டாமென்று வைக்க அவனால் முடியாது.. தேர்தல் நியாயமாக நடத்த அதுவும் ஒரு இடைத்தேர்தலை நடத்த முடியவில்லை.. எங்கே போகிறது.. இந்த நாடு.. இதையெல்லாம் தாண்டி வாக்கு இயந்திரம்..அதில் என்னென்ன தில்லுமுல்லோ.. வாக்களாளன் யாருக்கு வாக்களித்தேன் என நம்பிக்கையை அவனுக்கு ஏற்படுத்தவேண்டாமா .. தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவது ஜனநாயக விரோதம்..
இனியும் இந்த தேர்தலை நடத்துவேன் என்றால் முதலில் அதிமுக வேட்பாளரை ..வெளிப்படையாகவே பணம் தந்த பாலகங்கா எம்பியை கைது செய்திருக்கவேண்டாமா வரிசையில் நின்று பணம் பெற்றவர்கள் மீது வழக்கு தொடர்ந்திருக்கவேண்டாமா…? எல்லாவற்றிக்கும் மேலிட உத்தரவிற்காக காத்திருக்கும் ஆணயம் வேறுவேலை செய்யலாம்..
..
கடந்தகாலங்களில் நிறைய விமர்சனங்கள் இருந்தாலும் இந்த இடைத்தேர்தலை நேர்மையாக சந்திருக்கிறது திமுக .. அதற்காக அவர்களை பாராட்டலாம்.. போலி வாக்காளர்களை கண்டறிந்து அதை நீக்க வலியுறுத்தி தேர்தல் கமிஷன் அசையாதபோது உயர்நீதிமன்றம் போய் வெற்றிபெற்று நீக்கி.. நீதிமன்றம் பாராட்டியது ..இந்த தேர்தலை வாக்காளர்களை சந்தித்து வாக்கு கேட்டு தங்களின் நேர்மையே மக்களுக்கும் நாட்டுக்கும் உணர்த்திருக்கிறார்கள்..
..
பார்ப்போம்
தேர்தல் நடக்குமா..
..
Aalanci Spm

பகிர்