நாகர்கோவில்: ‘ஒக்கி’ புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள், விவசாயிகளுக்கு ஆறுதல் கூறுவதற்காக, பிரதமர் மோடி, இன்று(டிச.,19) மதியம் 2:00 மணிக்கு கன்னியாகுமரி வருகிறார். ‘ஒக்கி’ புயலால் ஏற்பட்ட சேதங்களைப் பார்வையிடவும், பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் பொது மக்களை சந்தித்து, ஆறுதல் கூறவும், பிரதமர் நரேந்திர மோடி, இன்று பகல், 2:45 மணிக்கு, கன்னியாகுமரி வருகிறார். திருவனந்தபுரத்தில் இருந்து, ஹெலிகாப்டரில் குமரி வரும் அவரை, கவர்னர், பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, அதிகாரிகள் வரவேற்கின்றனர். அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள கூட்ட அரங்கில், விவசாயிகள் மற்றும் மீனவர் பிரதிநிதிகளை சந்திக்கிறார். பின், முதல்வர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பிரதமர் வருகைக்காக, ராணுவ ஹெலிகாப்டர் நேற்று தரை இறக்கி ஒத்திகை நடந்தது.
‘ஒக்கி’ புயலை, தேசிய பேரிடராக, பிரதமர் அறிவிக்கலாம் என, எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பிரதமரை வரவேற்பதற்காக முதல்வர் பழனிசாமி, ஆர்கே நகர் பணப்பட்டுவாடா வேலையை கிடப்பில் போட்டுவிட்டு இன்று காலை, விமானத்தில் மதுரை செல்கிறார். அங்கிருந்து, காரில், கன்னியாகுமரி செல்கிறார். சுற்றுப்பயணம் முடிந்து, பிரதமர் புறப்பட்ட பின், சென்னை திரும்புகிறார். இந்த வருகை மீனவர்கள மீது பற்று அல்ல, RK நகர் தேர்தலுக்கு நடக்கும் ஒத்திகை என ஒரு கப்சா செய்தியாளர் அங்கலாய்த்தார்.
குஜராத்தில் தோல்வி பயத்தில் மேடைக்க்கு மேடைக்கு ஒப்பாரி வைத்து மூக்கு சிந்தி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதிமுகவிற்கு பிரசாரம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார். அவருக்கு துணையாக கன்னியாகுமரியில் ஒப்பாரி வைக்க முன்னாள் நாட்டுப்புற இசை வல்லுனர்களான ஓல்டு லேடீஸ் ஒரு டஜன் இறக்கப்பட்டுள்ளனர். பன்வாரிலால் புரகித் வருவதை அறிந்ததும், அங்கிருந்த பெண்கள் பாத்ரூம்களை பூட்டிக் கொண்டு துண்டைக் காணோம் துணியைக் காணோம் என ஓட்டம் பிடித்து தங்கள் உடல் தெரியாதபடி கடலுக்குள் கழுத்தளவு நீரில் நின்று கொண்டு வரவேற்கவும் முடிவு  செய்துள்ளதாக தெரிகிறது.
பகிர்