ஆர்.கே.நகர் தேர்தலில் போலீஸ் அதிகாரிகளை மாற்றவேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்திருந்த நிலையில் வடக்கு மண்டல இணை ஆணையர் அதிரடியாக சுதாகர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வடக்கு மண்டல இணை ஆணையராக போக்குவரத்து காவல் தெற்கு மண்டல இணை ஆணையர் பிரேமானந்த் சின்ஹாவை நியமிக்கும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுகவினர் ஆர்கே நகரில் முழுமையான பணப்பட்டுவாடாவை முடித்து விட்டார்கள் என்பதை உறுதி செய்து கொண்ட பின்னரே, வடக்கு இணை ஆணையர் சுதாகரை மாற்ற ராஜேஷ் லக்கோனி பரிந்துரை செய்தள்ளார்.

பணப் பட்டவாடா குறித்த புகார்கள் எழுந்தபோதே, வடக்கு இணை ஆணையரை ஒரு ஃபேக்ஸ் உத்தரவு மூலம், மாற்ற லக்காணியால் எளிதாக முடியும். ஆனால் அதிமுகவினரின் பணம், தொகுதிக்கு சென்று சேரும் வரை காத்திருந்தார்.

வருமான வரித் துறையை சேர்ந்த பார்வையாளராக பத்ரா வருவதற்கு முன்னதாக பணப் பட்டுவாடாவை உறுதி செய்ய வேண்டும் என்பதே லக்கானியிடம் வைக்கப்பட்ட வேண்டுகோள்.

தற்போது, அதிமுகவுக்கு போட்டியாக, திமுகவோ, டிடிவி தினகரன் அணியோ முயன்றால், அவர்கள் சிக்கிக் கொள்ள வேண்டும் என்பதே லக்காணியின் நோக்கம்.

தேர்தல் முடிந்ததும், சுதாகர் மீண்டும் வடக்கு இணை ஆணையராக நியமிக்கப்படப் போகிறார். ஆளுங்கட்சிக்கு வேண்டியவற்றை செய்து தரும் சிறந்த தேர்தல் அதிகாரியாக லக்காணி முழுமையாக மாறி விட்டார்.

எரிசக்தித் துறை செயலாளராக, கடந்த ஆட்சியில் நத்தம் விஸ்வநாதனோடு சேர்ந்து கல்லா கட்டிய நபரை தலைமைத் தேர்தல் அதிகாரியாக போட்டால் இப்படித்தான் தேர்தல் நடக்கும்.

Credit:Shankar A

பகிர்