பிரபல டிவி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி என்ற டிடி, தனது கணவரிடம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தனியார் தொலைக்காட்சியில் முன்னணித் தொகுப்பாளினியாக இருந்து வருபவர் திவ்யதர்ஷினி என்கிற டிடி. (விஜய் டிவி) ‘நம்ம வீட்டு கல்யாணம்’, ‘காஃபி வித் டிடி’ போன்ற நிகழ்சிகளை தொகுத்து வழங்கினார். குறும்புத்தனமான டிடியின் பேச்சுக்காகவே அவரின் நிகழ்ச்சிகளுக்கு ஒரு ரசிகர் கூட்டமே இருக்கிறது. டிடிக்கும் அவரின் நண்பர் ஸ்ரீகாந்த ரவிச்சந்திரனுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2014 ஆம் ஜூன் மாதம் 29 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. தற்போது 34 வயது ஆகும் டிடிக்கும் அவரின் கணவர் வீட்டிற்கும் இடையே சுமுகமான உறவு இல்லை என கூறப்படுகிறது. மேலும் திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடப்பதற்கு டி.டி கணவர் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். முன்னதாக விசில் படத்தில் நடித்த டிடி, நடிகர் தனுஷ் இயக்கிய முதல் திரைப்படமான ரஜினி மாமாவின் கலைப்போலி கபாலியின் இரண்டாந்தரமான் காப்பி ‘பவர் பாண்டி’ படத்தில் நடித்தார் டிடி. இதனால் திவ்யதர்ஷினிக்கும் தனுஷுக்கும் நெருக்கமானது. டிடி – அவரின் கணவர் ஸ்ரீகாந்த்க்கும் பிரச்சனை ஏற்பட்டது. அண்மைக்காலமாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்ததாகவும் தெரிகின்றது.
இந்நிலையில், இருவரும் பரஸ்பரம் விவாகரத்து பெற விரும்பி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற திருமணத்தையும் அதன் பிறகு நடைபெற்ற திருமணப் பதிவையும் ரத்து செய்ய வேண்டும் எனவும் இருவர் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பரஸ்பர முறையில் விவாகரத்து கோரி ஒரு தம்பதியினர் மனு தாக்கல் செய்தால் ஆறு மாதம் கால அவகாசம் அளிக்கபடும் அதன் பிறகு விவாகரத்து பெறும் முடிவில் உறுதியாக இருந்தால் விவாகரத்து வழங்கப்படும். இதற்கு காரணமாக தற்போதைய கோள்களின் நிகழ்வு இருக்குமோ என்று உங்கள் நியூஸ் கப்சா ஜோசியர் தெரிவித்தார். சனிப்பெயர்ச்சி நிகழ்வால் சுக்ரன் காதல் கிரகம் இன்று விருச்சிக ராசியில் இருந்து தனுஷ் ராசியில் இடம் பெயர்கிறார். சுக்ரன் அடிக்கடி ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வார். இப்போது குருவின் வீடான தனுசு ராசியில் சூரியன், (டிடி போன்ற) சனியோடு இணைந்து சில தினங்கள் கூட்டு குடித்தனம் செய்யப்போகிறார். சுக்ரன் (தனுஷ் போன்ற) கலைஞர்களின் நாயகன். ஆடை, அலங்காரத்தின் அதிபதி. ரிஷபம் ராசியும், துலாம் ராசியும் சுக்ரனின் ஆட்சி வீடு சுக்ரன் மீனம் ராசியில் உச்சமடைகிறார். (டிடி போன்ற) கன்னி ராசியில் நீசமடைகிறார்.
சுக்கிரன் சுகபோகங்களின் அதிபதி. இன்பங்களின் ஊற்றாக இருப்பவர். இயல், இசை, நாடகம் உள்ளிட்ட ஆய கலைகள் அறுபத்து நான்குக்கும் அதிபதி. அதனால்தான் (தனுஷ் போல) வசதியாக வாழ்பவர்களைப் பார்த்து அவனுக்கு சுக்கிர திசை நடக்கிறதா என்று கேட்பார்கள். (சிம்பு போன்ற) எதிரிகளுடன் சற்றே கவனம் தேவை. வெள்ளிக்கிழமைகளில் குங்குமப்பூ கலந்த பாயசத்தை துர்க்கா தேவிக்கு நிவேதனம் செய்தது வழிபட வேண்டும். சுக்கிர திசை காலம் ஒருவருக்கு 20 வருடங்கள் நடைபெறும். மிகப்பெரிய ராஜ யோக பலன்கள் உண்டாகும். பரணி, பூரம், பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிறக்கும் போது சுக்கிர திசையில் பிறந்திருப்பார்கள். அவர்களுக்கு 20 வருடங்கள் நடக்க வாய்ப்பு இருக்காது. அதே நேரம், சனி திசை, கேது திசை காலங்களில் பிறந்தவர்கள், 20 ஆண்டுகள் சுக்கிரதிசையின் யோகங்களை அனுபவிப்பார்கள். கமல் கவுதமி போல் 20 வருடங்கள் லிவிங் – டு கெதர் நடைபெறுமா என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
பகிர்