ஏன் பதறுகிறார்களென்று தெரியவில்லை.. விதிமீறலென்று ஆணையம்.. பணம் பட்டுவாடா நடந்ததாக சொல்லி தேர்தலை நிறுத்திய ஆணையம் அதைவிட அதிகமாய் பணம் தந்தபிறகும் மௌனமாய்தான் இருந்தது.. ஒரு தொகுதி அதில் கூட தேர்தலை நடத்தமுடியாமல் போனால் நீதிமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் கையாலாகாத கமிஷனென பெயர்வாங்க வேண்டிவருமென்று கள்ளமௌனம் காத்தது..
இப்போது ஜெயலலிதா வீடியோ வெளியிட்ட பிறகு நடத்தை விதி மீறல்.. இது மாநிலம் தழுவிய தேர்தல் அல்ல ஐந்து கிலோ மீட்டருக்குள் நடக்கும் தேர்தலுக்கான விதியென்பது தேர்தல் நடக்காக இடங்களில் பொருந்தாது .. அதற்காக சமூகவலைத்தளங்களில் கூட வெளியிட கூடாதென்பது வரம்பிற்குட்பட்டதா என்பது ஆய்வுக்குரியது..
..
பாஜகவின் எச்.ராசா வீடியோ வெளியிட்டதற்காக பதறுகிறார்.. குஜராத் தேர்தல் நேரத்தில் ஹிர்திக் பட்டேல் வீடியோவை வெளியிட்டது எந்த அறத்தில் வரும் .. அப்போது ஏன் ஆணையம் தலையிடவில்லை.. தேர்தலில் அனுதாபத்தை முதலாக்குவது தமிழகத்திற்கு புதிதல்லவே.. எம்ஜிஆர் நோவும்.. ராஜீவ் சாவும் தேர்தலையே புரட்டி போடவில்லையா.. மருத்துவசிகிச்சை படத்தை போட்டு வாக்குகேட்டதெல்லாம் எம்ஜிஆர் பார்மூலா தானே.. ராஜீவின் சிதறிய உடல்களை போஸ்டர் போட்டு வாக்குகேட்டது விதிமுறைக்குட்பட்டதா..
எம்ஜிஆரின் நோவில் கிடந்தபோதும் இதே முறை கையாளபட்டதே அப்போதெல்லாம் விதிமுறைக்குட்பட்டது..
எப்போதுமே சாதனைகளை சொல்லி அதிமுக வாக்கு கேட்டிருக்கிறது இருந்தால் தானே சொல்வதற்கு.. இதெல்லாம் தமிழகம் ஏற்கனவே கண்டதுதான்.. என்ன இப்போது உயிரோடில்லாதவரை ..கொண்டுவந்து கதைக்கிறார்கள் பிண வடிவில் பெட்டி செய்து தெருதெருவாக இழுத்து வந்ததற்கும் இதற்கும் பெரிய வேறுபாடில்லை.. இவர்களுக்கு வெற்றி அதற்காக எந்த தரங்கெட்ட செயலும் செய்வார்கள் ..
இவர்களுக்கெல்லாம் கொள்கை கோட்பாடு நாகரீக அரசியல் இவையெல்லாம் என்னவென்றே தெரியாது..
ஒருவரின் உடல்நிலையை வைத்து அரசியல் செய்யும் அயோக்கியத்தனத்தை போல கேடுகெட்ட அரசியல் வேறில்லை..
..
கலைஞர் புகைப்படம் வெளியிடுங்களென கேட்டபோது பெண் பிரைவசி என்றெல்லாம் பேசிய மாலன் போன்றவர்களும் அரசியல் அறியாமையில் உளறிய அடிமைகளும் இப்போது வீடியோவே தேவைபடுகிறதே .. வெளியிடபடுகிறதே எதையும்,ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்தியிருந்தால் சந்தேகங்கள் மர்மங்கள் விலகியிருக்குமே .. இதையெல்லாம் செய்ய அறம்சார்ந்த நேர்மை தேவை.. அதெல்லாம் கவர்ச்சியை மூலதனமாக்கிய மகோரா (எம்ஜிஆர்) ரசிகர்களுக்கு தெரியாது.. எங்குமே காணமுடியாது இதுபோன்ற கழிவு அரசியலை.. கொள்கை சார்ந்து ஏன் தான் விரும்புகிற கோட்பாட்டில் நின்று தான் செய்வது சரியென்கிற அரசியலைதான் நாடு பார்த்திருக்கும்.. இத்தனை இழிவுகளுக்கு மகோராவெனும் மடையன்தான் காரணம்..
விவரகேட்டை மக்கள் நம்பி ஆட்சியை தந்ததின் பலன்.. தொடர்ந்து இன்னும் தமிழகத்திற்கு அவமானத்தை தருகிறது