சென்னை: ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோவை வெளியிட்டு வெற்றிவேல் நம்பிக்கை துரோகம் செய்துள்ளதாக இளவரசி மகள் கிருஷ்ணபிரியா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தன் மீது கொலை பழி வந்த போது கூட, வீடியோவை வெளியிடாமல் சசிகலா மவுனமாக இருந்தார். தற்போது அதனை அவமதிக்கும் வகையில் வெற்றிவேல் வெளியிட்டுள்ளார். இது தெரியாமல் அவர் பேசிக் கொண்டுள்ளார். சசிகலா அனுமதி இல்லாமல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரிரு மாதங்களில் வீடியோ எடுக்கப்பட்டது. ஜெயலலிதா கூறியதன் பேரில் சசிகலா தான் வீடியோவை எடுத்தார். வீடியோவை விசாரணை ஆணையத்தில் வழங்க சசிகலா தான் எங்களிடம் வழங்கினார். தினகரனிடம் கொடுக்கப்பட்ட வீடியோ வெற்றிவேலிடம் எப்படி போனது? ஏன் போனது? இதற்கு பதில் என்னிடம் இல்லை. அது பற்றி விசாரணை நடத்த வேண்டும். வெற்றிவேல் நம்பிக்கை துரோகம் செய்துள்ளார். தன் மீதான விமர்சனம் வந்தபோது சசிகலாவே வெளியிட்டிருக்கலாம். ஆனால் தற்போது வெளியிட வெற்றிவேல் யார். எதைப் பற்றியும் கவலைப்படமால் பேசி கொண்டுள்ளார். அவர் பெரிய தவறு செய்துள்ளார். வெற்றிவேல் மீது தினகரன் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். வீடியோ வெளியானது பற்றி தினகரனிடம் கேள்வி கேட்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். கண்டனம்முன்னதாக அவர் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில், “டிடிவி(?) உடனிருக்கும் வெற்றிவேலின் கீழ்த்தரமான செயல்” என குறிப்பிட்டுள்ளார். மேலும்
முதல்வராக இருந்த ஜெயலலிதா, சிகிச்சைபெறும் வீடியோவை வெற்றிவேல் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவைப் பார்க்கும்போது சில சந்தேங்கள் எழுகின்றன.
 1.  ஜெயலலிதா, பெட்டில் படுத்தவாறே இடது கையால் ஜூஸ் குடிக்கிறார். முதல்வராக இருந்த ஜெயலலிதாவை வீடியோ எடுத்தவர்கள் ஏன் அவரது உடையைச் சரிசெய்யவில்லை?
 2. இந்த வீடியோ, ஜெயலலிதாவுக்குத் தெரிந்து எடுக்கப்பட்டதா அல்லது தெரியாமல் எடுக்கப்பட்டதா என்பதை வீடியோ எடுத்தவர்கள் முதலில் தெரிவிக்க வேண்டும். ஆனால், வீடியோவைப் பார்க்கும்போது ஜெயலலிதாவுக்குத் தெரியாமல்  எடுத்திருக்க வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
3. எந்த கேமரா மூலம் வீடியோ எடுக்கப்பட்டது. ரகசிய கேமரா மூலம் அந்த வீடியோ எடுத்ததற்கான வாய்ப்புகள் குறைவு. செல்போன் கேமரா மூலம்தான் அந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும், அந்த வீடியோ ஜூம் செய்து எடுக்கப்பட்டுள்ளது. அதைத் தடய அறிவியல் துறையினர்  ஆய்வுசெய்தால், வீடியோவின் உண்மைத்தன்மையைக் கண்டறிந்துவிடலாம்.
4. வீடியோவில் ஜெயலலிதா எதையோ (டி.வி பார்த்திருக்க வாய்ப்பு உள்ளது) பார்த்தபடி ஜூஸ் குடிக்கிறார். இதனால், அவர் வீடியோ எடுத்தவர்களைக் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கலாம். இருப்பினும் வீடியோவில் அவரின் கை அசைவு, உதடுகள் அசைவு ஆகியவற்றை உற்றுநோக்கினால் சில வித்தியாசங்களைப் பார்க்க முடிகிறது.
5. ஜெயலலிதாவின் இடதுகையில் சில மாற்றங்கள் இருக்கின்றன. வீடியோவை ஆய்வுசெய்தால் அதைக் கண்டறியலாம்.
6. வீடியோ எடுக்கப்பட்ட கேமரா அல்லது செல்போனை தடய அறிவியல் துறையினரிடம் சம்பந்தப்பட்டவர்கள் ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் வீடியோவின் உண்மைத் தன்மையை எளிதில் கண்டறிய முடியும்.
 7. ஜெயலலிதாவின் வீடியோ எந்தத் தேதியில், எந்த நேரத்தில், எவ்வளவு நேரம் எடுக்கப்பட்டது என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்க வேண்டும்.
8. ஒரிஜினல் வீடியோவை சமர்பிக்கப்பட்டால், அதை ஆய்வுசெய்து வீடியோ குறித்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.
9. வீடியோ எடுக்கப்பட்டிருக்கும் இடம் ஒரு மருத்துவமனை தான் என்பதை உறுதி செய்யும் வகையில், அருகில் இருக்கும் கட்டில் உணர்த்துகிறது.
10. வெற்றிவேல் வெளியிட்ட வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது. வீடியோவை நன்றாகக் கவனித்தால், ஒரு சினிமா பாடலின் ஹம்மிங் சத்தம் கேட்கிறது. இந்தச் சத்தம், டி.வி-யிலிருந்து வந்திருக்க வாய்ப்புள்ளது. வீடியோவின் தொடக்கத்தில் கேட்கும் பாடல், அதன்பிறகு கேட்கவில்லை. எனவே, தற்போது வெளியான வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளதை உறுதியாகச் சொல்ல முடியும். இந்த வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து இன்னும் ஒரு மாமாங்கத்திற்குள் தடய அறிவியல் துறை கண்டுபிடிக்க வேண்டும். லெமன் ஜூஸ் குடித்த வீடியோவை வெளியிட்டவர்கள் இட்லி சாப்பிட்ட வீடியோவை வெளியிடாது விட்டது ஏன் என்றும் கிருஷ்ணப்பிரியா கப்சா நிருபரிடம் கேள்வி எழுப்பினார்.
பகிர்