சென்னை : ஆர்கே நகர் வாக்காளர்கள் குக்கர் சின்னம் தேயும் அளவுக்கு அந்த சின்னத்தில் வாக்குகளை பதிவு செய்ததால் தினகரன் வெற்றி பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை என்று வாக்காளர் ஒருவர் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்கே நகரில் இன்று காலை முதல் வாக்கு பதிவு நடைபெற்றது. இதில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர், தினகரன் அணி ஆகியன போட்டியிட்டனர்.

சாதாரண இடைத்தேர்தலாக இருந்தாலும் இந்த தேர்தலுக்கு அத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்றால் எல்லாம் மக்கள் மனதில் இடம் பிடிப்பது யார் என்ற எதிர்பார்ப்புதான். தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளில் தினகரனே வெற்றி பெறுவார் என்றும் அவரது குக்கர் சின்னம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு அந்த தொகுதியில் வாக்கு பதிவு முடிந்துள்ள நிலையில், டுவிட்டரில் ஒரு கருத்து உலா வருகிறது. அதாவது வாக்காளர் ஒருவர் டுவீட்டியுள்ளார். அவர் கூறுகையில், தற்போதுதான் வாக்கு பதிவு செய்தேன். வாக்குச் சாவடிக்குள் போனதும் எனக்கு அதிர்ச்சி அளித்தது. குக்கர் சின்னத்தில் மக்கள் வாக்களித்ததால் அந்த சின்னம் தேயும் அளவுக்கு சென்றுவிட்டது. தினகரன் இந்த தேர்தலில் வெற்றி பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று பதிவு செய்துள்ளார்.

Credit: OneIndia

பகிர்