பல தடைகளையும், பணப்பட்டுவாடா புகார்களையும் கடந்து ஜெயலலிதாவின் ஸ்டார் தொகுதியான ஆர்கே நகரில் இன்று விறு விறு வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருதுகணேஷ், சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன், பா.ஜனதா சார்பில் கரு.நாகராஜன், நாம் தமிழர் சார்பில் கலைக்கோட்டுதயம் என 59 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தொகுதியில் உள்ள 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்கள் ஓட்டுப்போடுவதற்காக 51 மையங்களில் 258 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. மாலை 5 மணிக்குள் வந்தவர்களுக்கு ‘டோக்கன்’ வழங்கப்பட்டு, அவர்கள் ஓட்டுப்போட அனுமதிக்கப்படனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 74.5 சதவித வாக்குகள் பதிவாகி இருந்தது என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் 174 வாக்குச்சாவடிகளில் முழுமையாக வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மீதமுள்ள வாக்குச்சாவடிகளில் டோக்கன் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது. 84 வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க 5,000 பேர் காத்திருதனர் என தெரிவிக்கப்பட்டது. முன்னதாக ஆளும் கட்சி கவனித்ததைவிட அதிக அளவில் கவனிக்க டிடிவி அணியினர் முடிவு செய்து புது டெக்னிக்கைப் பயன்படுத்தி உள்ளனர்.
அதாவது, ஆர்.கே.நகரில் மொத்தமுள்ள 256 பூத்களில் தலா 300 ஓட்டுவீதம் மொத்தம் 70 ஆயிரம் ஓட்டுகளுக்குப் பணப் பட்டுவாடாவை டி.டி.வி.தினகரன் அணி செய்துவிட்டது. அதாவது, ஒரு வீட்டில் ஐந்து ஓட்டுகள் இருந்தால்… 10 ரூபாய் நோட்டையும், 6 ஓட்டுக்கு மேல் இருந்தால் 20 ரூபாய் நோட்டையும் கொடுத்துள்ளனர். இந்த நோட்டுகளின் சீரியல் எண்களை ஒரு நோட்டுப் புத்தகத்தில் குறித்து வைத்துக்கொண்டு வீடுவீடாகக் கொடுத்துள்ளனர். தேர்தல் முடிந்த பிறகு அந்த நோட்டுகளைக் கொடுத்தால்… 10 ரூபாய் நோட்டுக்கு ரூ.10,000-மும், 20 ரூபாய் நோட்டுக்கு ரூ.20,000-மும் தரப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளனர். இந்தப் புது டெக்னிக் பண மழையைப் பார்த்து மதுசூதனன் டீம் மிரண்டுபோய் உள்ளது. கப்சா நிருபர் வாக்காளர் வேடத்தில் சென்று விசாரித்ததில் இந்த ‘பின்பணம்’ கிடைக்காமல் போய்விடுமோ என்றும், முன்னதாக கொடுத்த பணம், குக்கர் போன்றவற்றை திருப்பிக் கேட்டு தர்ம அடி கொடுப்பார்களோ என்ற பயத்தில், வாக்குப்பதிவு 5 மணிக்கு முடிந்த பின்பும், பெண்களும், ஆண்களும் டோக்கன் வாங்கிக் கொண்டு வரிசையில் கால் கடுக்க நின்று வாக்களித்ததாக தெரிவித்தார். கொடுத்த காசுக்கு மேல் கூவுவதால், இம்முறை ஆர்கே நகரில் 120 சதம் வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிகிறது.
பகிர்