மாறன் சகோதரர்கள் மீதான பிஎஸ்என்எல் வழக்கு விசாரணை ஜன.8க்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. சிபிஐ தரப்பில் பதில் அளிக்க அவகாசம் கோரியதால் சென்னை சிபிஐ நீதிமன்றம் விசாரணையை ஒத்தி வைத்தது. சன் டிவி இந்தியாவின் தலைசிறந்த ஒளிபரப்பாளர்களுள் ஒன்றாகவும், தமிழில் முன்னோடி தொலைக்காட்சியாகவும் உள்ளது. 600 கோடி பெறுமதியான சன் நிறுவனத்தில் முதன்மையான தொலைக்காட்சி சேவையாக சன் டிவி இருக்கிறது. மாறன் சகோதரர்கள் என்று அழைக்கப்படும் கலாநிதி மாறன், தயாநிதிமாறன் சகோதரர்கள் 18 வருடங்களுக்கு முன்பு பூமாலை வீடியோ பத்திரிக்கை ஆரம்பித்தனர். அதில் சினிமா செய்திகள், இயக்குநர் மற்றும் நடிகர் நடிகை பேட்டிகள் போன்றவைகளையும் திரைப்பட பூஜை போன்றவைகள் இடம்பெற்றன. இருந்தாலும் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. தூர்தர்சன் மட்டுமே கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் மக்களின் நாடித்துடிப்பை உணர்ந்து தொடங்கப்பட்டது சன் டிவி.
இந்த வேரிலிருந்து கிட்டத்தட்ட கேடிவி, சன்நியூஸ், சன் மியூசிக், ஆதித்யா என தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் 30 சேனல்களை வரை தன் கைவசம் வைத்துள்ளது சன் குழுமம். தற்போது சன் டிவி குழுமத்திடம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத்தில் 21 சேட்டிலைட் சேனல்கள், 42 எப்எம் ரேடியா நிலையங்கள், தினகரன், தமிழ் முரசு ஆகிய செய்தித் தாள்கள், 4 வார இதழ்கள், டிடிஎச் தொலைக்காட்சி சேவை ஆகியவை உள்ளன. சன் குழுமத்திற்காக பிஎஸ்என்எல்லின் அதிவேக இணைப்பை முறைகேடாக பயன்படுத்தியதாக மாறன் சகோதரர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி மாறன் சகோதரர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தனர். சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இதுகுறித்து பதில் அளிக்கும்படி சிபிஐயிடம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. தற்போது இந்த வழக்கில் பதில் அளிக்க சிபிஐ தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டு இருக்கிறது. இதனால் வழக்கு விசாரணை ஜன.8க்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் மாறன் சகோதரர்கள் இன்று வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை. சென்ற வழக்கு விசாரணையின் போதும் மாறன் தரப்பு ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2ஜி அலைக்கற்றை ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் தீர்ப்பு வெளியாகி உள்ளது. இதில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, நாடாளுமன்ற ராஜ்யசபா எம்.பி கனிமொழி ஆகியோரை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டு உள்ளார். 2ஜி வழக்கில் முறைக்கேடு நடந்ததற்காக போதிய ஆதாரங்களை நீதிமன்றத்தில் எதிர்த்தரப்பு சமர்பிக்கவில்லை என்று நீதிபதி கூறி இருப்பது தனக்கு சர்க்காரியா கமிஷனின் அறிக்கையை நினைவுபடுத்துகிறது. விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்தால் நிரூபிக்க முடியாது என்று தெரிந்தே இதை சிலர் செய்து இருக்கின்றனர். இன்று அநீதி வெற்றி பெற்று உள்ளது. இந்த தீர்ப்பை தி.மு.க.,வினர் உற்சாகமாக கொண்டாடி வரும் நிலையில், மாறன் சகோதரர்கள் மீதான விசாரணை அடுத்த மாதம் பொங்கல் நெருக்கத்தில் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதால், பொங்கல் இனாமாக அவர்களும் விடுவிக்கப்படுவார்களா, மோடி ஆவன செய்வார என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
பகிர்