ரஜினிகாந்த் தனது ஒவ்வொரு திரைப்பட வெளியீடுக்கும் முன்னர்
தனது ரசிகர்கள் மற்றும் பாமர 
மக்களை கவரும் வண்ணம் தான் அரசியலில் வரவுள்ளது போல ஒரு
பாவனைக் காட்டுவார். படம் வரும்,
போகும். இவரும் வந்தார் போனார் என்ற நிலை தான் உள்ளது. 

இந்திய அரசியல் சாசனம் – 1950 – இன் கோட்பாடு – 5 – இன்படி இந்தியனாக பிறந்த அனைவருக்கும் எந்த துறையிலும் கால் பதிக்க அடிப்படை உரிமை உள்ளது. எனவே,
அதை யாரும் தடுக்க முடியாது.
எனவே, தனது அரசியல் வாழ்க்கை தொடர்பாக ரஜினிகாந்த் வருகின்ற
31 – 12 – 2017 – அன்று அறிவிக்கப்
போவதாக செய்திகள் வருகிறது. மகிழ்ச்சி! வாழ்த்துகள்! 

நான் குறிப்பிடுவது என்ன வென்றால் அரசியலில் நுழைந்து அனைத்திந்திய அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டு இந்திய பிரதமர் ஆவதற்கு முயற்சி செய்யுங்கள். தமிழக அரசியலில் நுழையவேண்டாம்.
காரணம், தாங்கள் பிறந்து வளர்ந்த கருநாடக மாநிலத்தை விட தமிழகத்தில் வாழ்க்கையில் பெரும் பகுதியை கழித்திருத்திருக்கிறீர்கள். தமிழக மக்கள்தான் தங்கள் வாழ்க்கையில் வளம் கொழிக்க திரைத்துறையில் மிகப்பெரிய உயரத்தைத் தொட, ஆதரவையும், அன்பையும் தந்தார்கள். தங்கள் ஒரு துளி வேர்வைக்கு, ஒரு பவுன் தங்கக் காசுத் தந்தார்கள்.

தாங்கள் வேர்வை சிந்தி சேர்த்த தங்கக் காசுகளை தமிழக மக்கள் வாழ் வாதார பிரச்சினைக்கு வாரி இறைக்க வேண்டாம். தங்களுக்கு லாபம் தரக்கூடிய ஏதாவது தொழில்துறையை தேர்ந்தெடுத்து மிகப்பெரிய முதலீடு செய்து, உங்கள் ரசிகர்களுக்காவது வேலை வாய்ப்பை ஏற்படுத்தி
தந்திருக்கலாம். ஆனால், செய்ததாக தெரியவில்லை. தங்கள் மாநிலமான
கருநாடக மாநிலத்திற்கே முன்னுரிமை அளித்துள்ளீர்கள். இங்கிருந்து கன்னடத் திரைக்கு சென்றவர்கள் 

தமிழகத்திற்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்டு
எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறார்கள். ஆனால், இன்றுவரை
கருநாடகத்திற்கு எதிராக துணிச்சலாக ஒரு அறிக்கைக் கூட வெளியிட்ட
தில்லை. காரணம், உங்கள் முதலீடு
அனைத்தும் அங்கு உள்ளது.
தங்கள் தனிப்பட்ட உழைப்பால்
தமிழக மக்கள் பணத்தை தங்கள்
மாநிலத்திற்கு கொண்டு போனதில்
தவறில்லை. ஏமாளி தமிழன் ஏமாந்தான். நீங்கள் உயர்ந்தீர்கள்.
இனியும் தமிழக ரசிகர்களையும், மக்களையும் ஏமாற்றும் நோக்கத்துடன் தமிழக அரசியலுக்கு வந்து உயர எண்ண வேண்டாம்.

 

ஏன் என்றால்,
எங்களுக்கு அச்சமாக இருக்கிறது.
நீங்கள் அரசியலுக்கு வந்து ஊழல்
செய்து தமிழக வளங்களை சுரண்டி உங்கள் மாநிலத்திற்கு கொண்டு போய் விடுவீர்கள் என்று அல்ல. தங்கள் அரசியல் வாழ்க்கை மூலம் முதல்வர்
ஆகி, பல ஆண்டுகளாக போராடி, மத்திய அரசிதழில் பதிவேற்றம் செய்தும், தமிழகத்திற்கும் ‘காவிரி’
வருமா? வராதா? என்ற ஏக்கம்
நிறைந்த வாழ்கை வாழ்ந்து கொண்டி ருக்கிறோம். தாங்கள் இங்கு முதல்வர் ஆனாலும் தங்கள் மாநில தண்ணீர் வர விரும்ப மாட்டீர்கள். எனவே, நீங்கள் அரசியலுக்கு வாருங்கள். உங்கள்
குறிக்கோள்கள், நோக்கங்கள் அனைத்தும் இந்திய பிரதமர் ஆவதாக இருக்கட்டும். தமிழகத்தையும், தமிழ் மக்களையும் விட்டுவிடுங்கள். தங்கள் மாநிலமான கருநாடக வளர்ச்சிக்கு
தாங்கள் இந்திய பிரதமர் ஆவதே சரி யாக இருக்கும். வாழ்த்துகள் தோழர்!

– சோ. சௌந்தரராசன்,

பகிர்