நடிகர் ரஜினிகாந்த் தன் ரசிகர்களை இரண்டாம் கட்டமாக (26-ந்தேதி) முதல் 6 நாட்களுக்கு ராகவேந்திரா மண்டபத்தில் சந்திக்கிறார். காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நீலகிரி மாவட்ட ரசிகர்களை அவர் சந்தித்தார். நிகழ்ச்சியில் பேசிய ரஜினி காந்த், “அரசியல் எனக்கு புதிது அல்ல. அரசியல் பற்றி தெரிந்ததால்தான் வர தயங்குகிறேன். அரசியலின் ஆழம் தெரியும். அரசியல் நிலைப்பாடு குறித்து 31-ஆம் தேதி அறிவிப்பேன். அரசியலுக்கு வர வீரம் போதாது. வியூகமும் வேண்டும்” என்றார்.
ரஜினிகாந்த் இரண்டாம் நாள் சந்திப்பில் கூறுகையில், ‘தாய். தந்தையர் வாழும் தெய்வங்கள். குழந்தைகளை நன்றாக வளர்க்க வேண்டும், நமது சொத்து அவர்கள் தான்.’ என்று கூறினார். ரஜினிகாந்தை மையப்படுத்தி தமிழக அரசியலில் விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அரசியலுக்கு வருவது குறித்து முடிவெடுக்க ரஜினிகாந்த் சென்னையில் தனது ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்து வருகிறார். ரஜினிகாந்த் இன்று காலை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் இருந்து புறப்பட்டபோது, அரசியல் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘31-ம் தேதி வரை பொறுத்திருங்கள்’ என்று பதிலளித்தார். தொடர்ந்து ராகவேந்திரா மண்டபத்திற்கு வந்த பின்னர் ரசிகர்கள் மத்தியில் அவர் பேசியதாவது: 2-வது நாளாக உங்களை சந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொருவருக்கும் அவர்கள் குடும்பம்தான் முக்கியம்.
மாற்றுத்திறனாளி ரஜினி ரசிகரின் ஒரே ஆசை!
மாற்றுத்திறனாளி ரஜினி ரசிகரின் ஒரே ஆசை!
Posted by IETamil on Tuesday, December 26, 2017
தாய். தந்தையர் வாழும் தெய்வங்கள். குழந்தைகளை நன்றாக வளர்க்க வேண்டும், நமது சொத்து அவர்கள் தான். ரசிகர்கள் கட்டுப்பாடுடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆக்கபூர்வமாக சிந்தியுங்கள். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. இவ்வாறு கூறினார். ரஜினிகாந்த் முதல் நாளில் தனது சினிமா வாழ்க்கை குறித்தும் அரசியல் தொடர்பாகவும் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். ஆனால் இன்று தனது பேச்சை சுருக்கமாக முடித்துக்கொண்டார். திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 1,000 ரசிகர்கள் இன்று ரஜினிகாந்தை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். ரஜினியின் இன்றைய பேச்சு, அவர் அரசியலுக்கு வருவாரா, நழுவுகிறாரா? என்கிற குழப்பத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தியதை காண முடிந்தது. இந்த நிலையில், மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர் ரஜினியை எப்படியாவது நேரில் பார்த்துவிட வேண்டும் என்று வந்திருந்தார். வாயில் ரஜினியின் படத்தை வைத்துக் கொண்டு, ராகவேந்திரா மண்டபத்தின் வெளியே நீண்ட நேரம் அவர் காத்திருந்தார்.அவரிடம் நாம் பேச்சுக் கொடுத்த போது, “தலைவர் நிச்சயம் அரசியலுக்கு வரணும். அதைக் கேட்கத் தான் இங்கு கஷ்டப்பட்டு வந்தேன். அவரை பார்க்க முடியவில்லை என்றாலும், அவர் அரசியலுக்கு வந்தால் அதுவே போதும்” என்றார் உருக்கமாக.
உங்கள் நியூஸ் கப்சா நிருபரின் ஆய்வில் ஒரு அதிர்ச்சிகரமான உண்மை வெளிவந்துள்ளது. கடந்த முறை கபாலி என்ற கலைப்போலி திரைப்படம் வெளியானபோது வயது முதிர்ந்த ரசிகர்கள் சாப்பிட தட்டு வாங்க காசில்லாமல் மண் சோறு சாப்பிட்டதையும், சொன்னபடி தயாரிப்பாளர் தாணு டிக்கட் கொடுக்காததால் இரவில் பேனர்களை கிழித்து குளிருக்கு போர்த்தி திரைஅரங்க வாசலில் படுத்ததையும் கேள்விப்பட்ட ரஜினி, தனது ரசிகர்களுள் வயது முதிர்ச்சியால் இறந்தவர்கள் போக மீதமுள்ள தன்னுடைய ரசிகர்களுக்காக ‘முதியோல் இல்லம்’ திறக்க இருப்பதாக தெரிகிறது. இதற்கென வாடகை கொடுக்காமல் கட்டிடம் தேடி வருவதாகவும், முன்பு பூட்டுபோடப்பட்ட ஆசிரம் பள்ளியை திறக்க அதன் உரிமையாளரிடம் கெஞ்சி வருவதாகவும் தெரிகிறது. ‘ஸ்டைல் இருக்கும்வரை தான் மதிப்பு, கைகால் விழுந்த பின்பு, தனுஷ் கடைசி வரை கஞ்சி ஊத்துவார் என்று நம்ப முடியாது, இறுதிக் காலத்தில் நானும் அங்கு போக நேரலாம்’ என்று ரஜினி புலம்பியதாக தெரிகிறது.