அண்மையில் நடந்து முடிந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில், மகத்தான வெற்றிக்குப் பிறகு முதல் முறையாக டிடிவி தினகரன் பெங்களூருவில் சசிகலாவை சந்தித்தார். ஜெயலலிதா நினைவு நாளில் இருந்து சசிகலா பெங்களூரு சிறையில் மவுன விரதம் இருந்து வருவதாக டிடிவி தினகரன் ஊடகங்களுக்கு பெங்களூருவில் அளித்த பேட்டியில் அதிர்ச்சிகரமான தகவலை கூறினார். ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சசிகலாவின் அக்காள் மகனான டிடிவி தினகரன் இமாலய வெற்றி பெற்றதை தொடர்ந்து அவர் சசிகலாவை சந்திப்பார் என கூறப்பட்டது. ஆனால் உடனடியாக சிறைக்கு வரவேண்டாம் என சசிகலா கூறியதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் டிடிவி தினகரன் பெங்களூரு சிறையில் சசிகலாவை நேரில் சந்தித்து பேச முயன்றபோது சசிகலா சைகையில் பேசியுள்ளது தெரியவந்துள்ளது. தினகரன் தனது பேட்டியில், சசிகலாவை சந்தித்து ஆசி பெற்றதாகவும், சசிகலா மவுன விரதம் இருப்பதால் தான் பேசியதை மட்டும் அவர் கேட்டுக்கொண்டார் என்றும், ஜெயலலிதா நினைவு நாளில் இருந்து மவுன விரதம் இருந்து வருவதாகவும் கண்ணீர் மல்க கூறினார். மேலும் சசிகலா டெலிபதியில், “ஐடி ரெய்டு மீண்டும் நடக்கிறதா? என்று விசாரித்ததாகவும் கதறினார். “யாரையும் நீக்க ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை! குக்கர் சின்னம் இறைவன் அருளினால் கிடைத்தது, ஏற்கனவே குக்கர் சின்னத்தை தீர்மானித்து வைத்திருந்தேன். மக்கள், தொண்டர்களினால் புறக்கணிக்கப்பட்டவர்கள் ஓபிஎஸ், ஈபிஎஸ்தான். ஜெயலலிதாவுகுகு வாரிசுகள் என்று யாரும் இல்லை, நான்தான் அடுத்த வாரிசு” என்றும் ரஜினி பட டைட்டிலை கூறி டிடிவி தினகரன் மேலும் ரெய்டு ஆத்திரத்தில் கப்சா நிருபரை தெறிக்கவிட்டார். கப்சா நிருபர் விசாரித்ததில் ஆறுமுகசாமி கமிஷன் சம்மன் அனுப்பியுள்ள நிலையில் சசிகலா சிறைக்குள் மவுன விரதம் மேற்கொண்டிருப்பது சிறைக்காவலர்கள் மத்தியில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. சம்மனில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக 15 நாளில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

கமிஷன் சம்மன் அனுப்பியதிலிருந்து விசாரணை முடியும் வரை மவுன விரதம் இருப்பதாகவும் டிசம்பர் இறுதியில் கலைப்போலி ரஜினி அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிக்கும் வரை மௌன விரதம் தொடரும் என்றும் தெரிகிறது. மவுனமாவது விரதமாவது. கஸ்டடியில் எடுத்து விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்தால் உண்மைகள் வெளியே வரும். என்று கொதித்தார் நிருபர். இது ஒருபுறமிருக்க, தில்லி கற்பழிப்பு சம்பவம், சென்னை ஸ்வாதி கொடூர கொலை ஆகியவற்றை இருட்டடிப்பு செய்யும் விதமாக, இந்தியாவின் பாதுகாப்பான நகரம் சென்னை என்ற மத்திய பாஜக வின் கூற்றுப்படி பெங்களூரு சிறையில் மௌன விரதமிருக்கும் சசிகலாவை இந்தியாவின் பெண்களுக்கு பாதுகாப்பான நகரான சென்னையில் உள்ள புழல் சிறைக்கு மாற்ற டிடிவி தினகரன் மோடிக்கு மிரட்டல் விடுக்க உள்ளதாக நம்பத்தகாத செய்தி கூறுகிறது.

பகிர்