ஆன்மிக அரசியல் என்பது நியாயமான, தர்மமான அரசியல் என்று ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.

அரசியலுக்கு வருவதை இன்று ரசிகர்கள் முன்னிலையில் உறுதிப்படுத்திய ரஜினி, ‘வரும் சட்டப்பேரவை தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நிற்க முடிவு செய்துள்ளேன்’ என்று அறிவித்தார்.

அதற்குப் பிறகு கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் இருந்து கோபாலபுரத்தில் அருகே போயஸ்கார்டனில் உள்ள தனது இல்லத்துக்கு ரஜினி திரும்பினார்.

அப்போது ஆன்மிக அரசியல் என்றால் என்ன என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த ரஜினிகாந்த், ‘ஆன்மிக அரசியல் என்பது நியாயமான, தர்மமான அரசியல்’ என்றார். கமல்ஹாசன் வாழ்த்தியது குறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்டதும், ‘கமல்ஹாசன் வாழ்த்தியதற்கு மனப்பூர்வமான நன்றி’ என ரஜினி தெரிவித்தார்.

பகிர்