ரஜினி தன் முடிவை மிகத் தெளிவாக சொல்லிவிட்டார். ஆன்மிக அரசியல் என்பது அவர் இலக்கு. மறைந்த சோ வை தன் குரு என்றும் அவர் இருந்து இருந்தால் தனக்கு பத்து ஆள் பலம் கூடுதலாக இருந்திருக்கும் என்றும், பாபா முத்திரையைக் காட்டுவதன் மூலம் என்ன கொள்கையை முன்னெடுக்கப் போகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. 2011 முதல் செயல்படாமல் கிடக்கும் தமிழக அரசைப் பற்றி ஏதும் பேசாமல் கடந்த ஓராண்டு கால தமிழக அரசியல் குறித்த ரஜினியின் கவலை எத்தகையது என்பது வெளிப்படையானது. தேர்தல் கால அளவுபடி நாடாளுமன்ற தேர்தல் தான் 2019 வரும், சட்டமன்ற தேர்தல் 2021 ல் வரும். ஆனால், இவர் 234 என சட்டமன்ற தேர்தல் குறித்தே கவலைபடப் பேசுகிறார். 39ஐ பற்றி பேச மறுக்கிறார். ஆட்சி, அதிகாரம் & இரட்டை இலை சின்னம் என எல்லா வகையிலும் பாஜக உதவி செய்தும் டிடிவி தினகரன் வெற்றியைத் தடுக்க முடியாதவர்களை ஆண்மையற்றவர்கள் என சொல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும்?. மத்தியில் அதிகாரம் இருந்தும், மோடி தொட்டதெல்லாம் பொன்னாகும் என இந்தியா முழுக்க பல சட்டமன்ற தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்றாலும் தமிழக இடைத்தேர்தலில் பாஜக நோட்டாவை விட குறைவாக வாக்குகள் பெற்றக் கோபத்தில் இருக்கும் குருமூர்த்திகள், நூற்றாண்டு கால திராவிட அரசியலை, 50 ஆண்டுகால சமுகநீதி அரசுகள் விளைந்த மண்ணை ரஜினி யின் “ஆன்மீக அரசியல்” என்ற மாயங்களால் தகர்க்க முடியாதபோது நாளை ரஜினியும் ஆண்மையற்றவர் என குருமூர்த்திகளால் அழைக்கப்படலாம். சொன்னதை செய்யவில்லை என்றால் மூன்றாண்டுகளில் பதவி விலகுவாராம் இந்த ரஜினி.
29.11.1999 அன்று தன்னுடைய ராகவேந்திரா திருமண மண்டபத்தை மக்களுக்காக எழுது வைக்கிறேன் என்று சொன்னவர் தான் இந்த ரஜினி. இதுநாள் வரை அந்த மண்டபத்தில் இலவசமாக ஒரு திருமணத்திற்கு கூட அனுமதி அளிக்கப்பட்டதில்லை. வாடகை இரண்டு லட்சம் ரூபாய் என்பது கூடுதல் தகவல். தடையை மீறி தெருவுக்கு தெரு பேனர் வைத்து மக்களை மன்றத்தில் இணைக்கவே போட்டோ ஷூட் நாடகம் அரங்கேறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. ரஜினி முருகன் ரஜினி சுப்பாண்டி ரஜினி துருத்தியான் போன்ற பேனர்களை தேர்தல் சமயங்களில் அதிகம் பார்க்க முடியும். திரையில் ஒரு பிம்பத்தையும் நிஜ வாழ்க்கையில் அதற்கு நேரெதிரான ஒரு மாயத்தோற்றத்தையும் கொண்டவர் ரஜினி. நிஜ வாழ்க்கையில் தற்சார்பு மிக்க லதாவை மணந்த ரஜினி இன்று வரை சினிமாவில் மகள் வயது ஒத்த படிக்காத வேலைக்காரப்பெண்ணை காதலித்து மரத்தை சுற்றி டூயட் பாடுவார். நிஜத்தில் ரசிகன் கைபட்டாலே நோய் ஒட்டிக்கொள்ளுமோ என்று விலகி நிற்கும் ரஜினி படத்தில் பல நூறு பேரை ஓரே குத்தில் பறக்கவிடுவார். நிஜ வாழ்க்கையில் எச்சில் கையில் ஈ ஓட்டாதவர் சினிமாவில் மட்டும் பலமுறை தனது சொத்துக்களை அனாயாசமாக தானம் செய்துவிட்டு ஒற்றை துண்டுடன் பிச்சைக்காரனாய் பிலாசபி பேசுவார்.
ரஜினியின் புத்தாண்டு பேச்சை கூர்ந்த்து கவனிக்கும் போது
அவர் மீண்டும் அரசியல் பிரவேசத்தை தள்ளி வைத்திருப்பதாகவே தொன்றுகிறது. அரசியல் என்பதன் பால படமே அரசியல் சூழலை நடப்புகளை விமர்சிப்பதும், கருத்துக்களை சொல்வதும் தான் இதில் கருணாநிதி வல்லவர். ஆனால் விமர்சனமே இல்லாத அரசியல் என்பதில் ரஜினி சொதப்புகிறார். 2021 மே மாதம் வர இருக்கும் சட்டமன்ற தேர்தல் வரை இன்னும் குறைந்தது மூன்று வருடங்கள் அரசியலை ஒத்தி வைத்திருக்கிறார். அதற்குள் காலா, 2.0 படங்களும் இன்னபிற கேலிக்கூத்துகளும் வெளியாகி விடும். கபாலி உட்பட மற்ற படங்களைப் போலவே திரைஅரங்க டிக்கட்டுகள் ஆர்கே நகர் பணப்பட்டுவாடா போல 4000 இருந்து 6000 முதல் 10000 வரை விலை உயர்த்தி விற்கக் கூடும். விற்கப்படும். ஆளும் தரப்பு இந்த விலையேற்ற விற்பனையை கண்டுகொள்ளாது. பள்ளிக்கட்டிட வாடகை பாக்கி, கார்ப்பரேஷன் வாடகை பாக்கி கேட்க அஞ்சுவார்கள். பல நூறு கோடி ரூபாய் திட்டங்களான அந்த இரு படங்களும் வசூலை அள்ளி ஏழு தலைமுறைக்கு சொத்து சேரும். இது தான் ரஜினியின் திட்டம்.
தாய்மார்கள், இளைஞர்கள் அனைவரையும் மன்றத்தில் இணைக்கவேண்டிய வாட்சுமேன் MLM வேலைகளை ரசிகர் சம்பளம் வாங்காமல் செய்யவேண்டும். திரைப்பட நடிப்பை நம்ப வைத்துத்தான் ரசிகர்கள் அவரை தமிழக முதல்வராக்கி பார்க்க ஆசைப்படுகிறார்கள். கட்சிக் கொள்கை என்ன என்றால் நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கும், என்றும், உண்மை உழைப்பு உயர்வு கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்பதை எல்லாம் கட்சிக் கொள்கை என்கிறார். இவை முழக்கங்களே அன்றி கொள்கை ஆகா. அரசியல் குறித்து எல்.கே.ஜி. குழந்தை மார்க்கெட் போன நடிகை கஸ்தூரி வரை விவாதம் நடத்தினார். இதனால் எந்தப் பயனும் இல்லை. எப்போ அரசியலுக்கு வருவாய் என்ற ஆபத்தான கேள்வியில் இருந்து இன்னும் குறைந்தது மூன்று ஆண்டுகள் தப்ப திட்டமிட்டு பேசியுள்ளார் ரஜினி. அவரது 2.0 மற்றும் கால படங்கள் வெற்றி அடையவும், அடுத்து அறிவிக்க இருக்கும் படமும் வெற்றி அடைய உங்கள் நியூஸ் சார்பாக வாழ்த்துக்கள்.
பகிர்