சென்னை: தமிழக சட்டசபை கூட்டம், வரும், 8 ஆம் தேதி தொடங்குகிறது. அன்று, கவர்னர் பன்வாரிலால் புரோஹித், சட்டசபையில் உரையாற்றுகிறார். கூட்டத்தில்,சுயேச்சையாக வெற்றி பெற்ற தினகரனும்,பங்கேற்க உள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், ‘டிபாசிட்’டை பறிகொடுத்த தி.மு.க.,வினர், சட்டசபையில், பல்வேறு பிரச்னைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளனர். மேலும், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களை தங்கள் வசம் இழுத்து, ஆட்சியை கவிழ்க்க, தினகரனும் முயற்சித்து வருகிறார். இவற்றை முறியடிக்கவும், சட்டசபை கூட்டத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை தீர்மானிக்கவும், அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், இன்று காலை, 10:00 மணிக்கு, சென்னையில், ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. இதில் 100 எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர் சொந்த காரணங்களின் காரணமாக 7 எம்.எல்.ஏக்கள் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
அம்மா ஆட்சியின் சாதனைகளை முழுமையாக வெளியில் தெரிவிக்க புதிதாக தொலைக்காட்சியும், நாளிதழும் தொடங்குவது பற்றி ஆலோசித்த வருகிறோம்.
கழக ஆட்சியின் செயல்பாடுகளை மக்கள் முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில் தேவையான ஏற்பாடுகளை செய்ய இருக்கிறோம்.
தினமலர், தினத்தந்தி இப்போது ரஜினிக்கு ஆதரவாக இருப்பதாலும், ஜெயா டிவிக்கு போட்டியாக ‘இம்போட்டண்ட் டிவி’ என்ற பெயரில் டிவி சானல் ஆரம்பிக்க இருக்கிறோம், இது அடல்ட்ஸ் ஒன்லி சேனல் என்றும் எடப்பாடி கூறினார்.