தமிழக சட்டப்பேரவையின் அவை முன்னவராக செங்கோட்டையன் இருந்தார். இந்நிலையில், அவரிடம் இருந்த அந்தப் பதவி பறிக்கப்பட்டு, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவை முன்னவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அ.தி.மு.க., கடந்த ஆண்டு சசிகலா அணி, ஓ.பி.எஸ் அணி என இரண்டாகப் பிரிந்தபோது, பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன், அவை முன்னவராக நியமனம் செய்யப்பட்டார். இரு அணிகள் இணைந்த நிலையிலும், வரும் 8-ம் தேதி சட்டப்பேரவை கூட உள்ள நிலையிலும், அவை முன்னவர் பதவியிலிருந்து செங்கோட்டையன் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, ஓ.பன்னீர்செல்வம்தான் அவை முன்னவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் மனமுடைந்த நிலையில் இருக்கும் செங்கோட்டையன் பாலிடால் குடிக்க இருந்ததாக தெரிகிறது. அருகில் இருந்தவர்கள் அவரை தேற்றி தினகரன் அணியில் சேருமாறு கூறியதாகவும், நம்பத்தகாத செய்திகள் தெரிவிக்கின்றன.

பகிர்