போக்குவரத்து தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அரசு உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவாரத்தை மூலம் நடவடிக்கை எடுக்குமாறு நடிகர் கமல் தனது ட்விட்டர் பக்கம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
புதிய ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததைத் தொடர்ந்து போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தமிழகம் முழுவதும் பரவலாக பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழக முதலமைச்சர், மக்கள் அனுபவிக்கும் இன்னல்களையும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளையும் மனதில் கொண்டு, தயவாய் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். பொங்கலுக்கு அதுவே அரசுதரும் விலைமதிப்பிலா பரிசாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சர், மக்கள் அனுபவிக்கும் இன்னல்களையும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளையும் மனதில் கொண்டு, தயவாய் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். பொங்கலுக்கு அதுவே அரசுதரும் விலைமதிப்பிலா பரிசாகும்.
— Kamal Haasan (@ikamalhaasan) January 5, 2018
டெங்கு பாதிப்பு, எண்ணூர் சாம்பல் கழிவு பிரச்சினை, அரசின் மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் என பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் அவ்வப்போது கமல் ட்வீட் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை தொடங்கி நடந்துவரும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து மக்களுக்கு உதவுமாறு கமல் கோரிக்கை விடுத்துள்ளார்.