நடிகர் ரஜினி சந்திப்பின் போது ரசிகர்களுக்கு சில விதிக்கப்பட்டன. அதன்படி ரஜினி அருகில் செல்லும் ரசிகர்கள் யாரும் அவருக்கு சால்வையோ, மாலையோ அணிவிக்கக்கூடாது, ரஜினி தோள் மீது கை போட கூடாது, அவர் கை பிடித்து குலுக்கக் கூடாது போன்ற கட்டுப்பாடுகள் போடப்பட்டன. ஆனால் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்தபோது கருணாநிதியி கையைப்பிடித்து ஆசி பெற்றார். வலிய வந்த ரசிகர்களுடன் கை குலுக்க மறுத்த ரஜினி, கருணாநிதியின் கையை பிடித்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். இந்தப் படம் பரவலாக மீடியாக்களில் வெளியானது.

தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்த பிறகு கருணாநிதியை ரஜினி சந்தித்தது தமிழக அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “கருணாநிதியை சந்தித்து உடல்நலம் விசாரித்ததுடன், புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தேன். தனிக்கட்சி தொடங்குவதற்காக ஆசி பெற்றேன்” என்று கூறினார். இது திமுகவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக திமுக முக்கியத் தலைவர் ஒருவரிடம் கேட்டபோது, “உடல்நலக் குறைவால் ஓய்வெடுத்து வரும் கருணாநிதியை மாற்றுக் கட்சித் தலைவர்கள் உள்பட பலரும் சந்தித்து வருகின்றனர். அந்த அடிப்படையில் ரஜினி கேட்டதும் நேரம் ஒதுக்கப்பட்டது. உடல்நலம் விசாரித்து விட்டு திரும்பி விடுவேன் என்றுதான் அவர் ஸ்டாலினிடம் கூறியிருந்தார். ஆனால், அதற்கு நேர்மாறாக மரியாதை நிமித்தமான இந்தச் சந்திப்பை தனது அரசியலுக்கு பயன்படுத்தும் வகையில் அரசியல் பிரவேசத்துக்கு வாழ்த்து பெற்றேன் என கூறியது வேதனை அளிக்கிறது. ரஜினியிடம் இதனை எதிர்பார்க்கவில்லை” என்றார்.

இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. கொஞ்சம் பின்னோக்கி ஏன்று பார்த்தால் ரஜினியிடம் எந்த போராட்ட குணமும் உண்மையாய் நிரந்தரமாய் இருந்ததில்லை அந்தந்த நேரத்தில் கொஞ்சம் நேரம் மட்டும் சூடாய் இருக்கும் பாஸ்ட் புட் மாதிரதான். அதிலும் மக்கள் நலன் என்று பார்த்தால் சட்டியில் கையை விட்டுத் துழாவித்தான் பார்க்க வேண்டும். காவிரி பிரச்னையில் திரையுலகமே ஒன்று திரண்டு போராடியபோது அதில் பங்கேற்காமல் உண்ணாவிரதம் என்ற கசேரி நடத்தினார். அங்கே தவிர்க்க முடியாமல் கர்நாடகத்தை விமர்சிக்க, குசேலன் படம் கர்நாடகாவில் பெரும்பாடு பட்டது. மறுபடியும் கர்நாடக மக்களிடம் ரஜினி டியூனை மாற்றிபாடிய வீரத்தை உலகறியும். தமிழக மக்கள் எவ்வளவோ நெருக்கடிகளை சந்த்தத் போதும் உண்மையாக குரல் கொடுத்ததே கிடையாது.

இங்கே மீனவன் செத்துகொண்டிருந்தாலும், புயல் வெள்ளத்தில் பதிப்பு ஏற்பட்டாலும், லாஸ் வேகால் கசினோவில் சூதாட்டம் ஆடிக் கொண்டிருப்பார். அள்ளிவிடுவதில் அவருக்கு நிகர் அவரே. நதிகள் இணைப்புக்கு ஒரு கொடி ரூபாய் இன்னும் கொடுத்து கொண்டே இருக்கிறார். அரசியலுக்கு வருவேன் என்கிற ரீதியில் 1996ல் குரல் கொடுத்தார். 1996ல் பிறந்த குழந்தைகள் 2014ல் பதினெட்டு வயது பூர்த்தியாகி நாடாளுமன்ற தேர்தலிலும் 20 வயதாகி சட்டசபை தேர்தலிலும் வாக்களித்து விட்டது. அன்பு காட்டு ரசிகனுக்கு எதாவது செய்ய வேண்டும் என்று மூச்சு முட்ட பேசும் ரஜினியின் முதல் மகள் திருமணத்தின் போது விருந்து வைக்கப் போவதாக சொன்னார். இப்போது அந்த பெண்ணின் மகனுக்கு 11 வயது ஆகிறது. சமீபத்தில் மதுரை ரசிகர்களை ராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்த போது உங்களுக்கு கிடா வெட்டி விருந்து வைக்க ஆசை ஆனால் மண்டபத்தில் அதற்கு அனுமதி கிடையாது என்று மீண்டும் விருந்து காமெடி நடத்தினார். ஆனால் மண்டபத்தின் ஓனரே அவர்தான் என்பதை மறந்துவிட்டார். அதற்கு ‘தலைசுற்றல்’ காரணமாக இருக்குமோ?

இந்நிலையில் ரஜினி வைக்காத விருந்துக்காக மதுரை அழகர் கோவிலில் ஆடுகளை வெட்டி சிறப்பு பூஜையொன்றை நடத்தி சோற்றுக்கு வழியில்லாத ரஜினிக்கு பிரியாணி பார்சல் அனுப்ப ரஜினி ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த நிகழ்வில் ஆடுகளை வெட்ட வேண்டாம் என்று ரசிகர்களுக்கு வலியுறுத்துமாறு நடிகர் ரஜினிக்கு பீட்டா வேண்டுகோள் விடுத்துள்ளது. ஏற்கனவே மகள் சௌந்தர்யா விலங்குகள் நல வாரிய அமைப்பில் உறுப்பினராகி, கணவரை துரத்திவிட்டு நாயுடன் குடும்பம் நடத்துகிறார். இப்போது என்னடா இந்த ஓசி பிரியாணிக்கு வந்த சோதனை கேட்ட உடனே தலைசுத்துதே என்று ரஜினி புலம்புவதாக் கப்சா நிருபர் தெரிவிக்கிறார்.

பகிர்