போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் நான்காவது நாளாக இன்றும் (ஞாயிறு) தொடர்வதால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று பணிக்கு திரும்பாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. கோரிக்கை ஏற்கப்படும் வரை போராட்டம் தொடரும் என தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.

 இந்நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் குறித்து ஓபிஎஸ் இபிஎஸ் சார்பில்  தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘‘போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கையை முழுமையாக ஏற்று அவர்களுக்கு சம்பள உயர்வு வழங்க தமிழக அரசுக்கு மனம் உள்ளது. ஆனால், தமிழக அரசு கடுமையான நிதிப்பற்றாக்குறையில் தவிக்கிறது. போக்குவரத்து ஊழியர்கள் கேட்கும் அளவிற்கு சம்பளம் தர மனம் இருந்தும் பணம் இல்லை. அரசின் நிலைமையை உணர்ந்து போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். அரசு அறிவித்துள்ள சம்பள உயர்வை ஏற்றுக் கொள்ள வேண்டும்’’ எனக் கூறினார்.

ஓபிஎஸ் இபிஎஸ் நமது கப்ஸா நிருபருக்கு அளித்த கூட்டறிக்கையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை நடத்தவே நிதி போதவில்லை இதில் இவர்கள் வேறு எங்கள் உயிரை எடுக்கிறார்கள் என்று சளித்துக் கொண்டனர்.

பகிர்