சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு இதுவரை முக்கிய அமைச்சர்கள் மீதும் நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மதுசூதனன் கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெயலலிதா மறைந்ததை அடுத்து அவரது ஆர்கே நகர் தொகுதிக்கு கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர், தினகரன் அணி ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதில் அதிமுக சார்பில் மதுசூதனனும், திமுக சார்பில் மருதுகணேஷும், பாஜக சார்பில் கரு.நாகராஜன், தினகரன் அணி சார்பில் தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.

ட்சியில் போதிய மரியாதை இல்லாததால், அ.தி.மு.க.வின் அவைத்தலைவர் மதுசூதனன், எடுத்துள்ள திடீர் முடிவால், ஆளுங்கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆட்சிக்கு எந்த நேரமும் ஆபத்து ஏற்படும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், ஆளுங்கட்சியான அ.தி.மு.க. சந்தித்த தோல்வி, அக்கட்சியில் பூகம்பத்தை உண்டாக்கியுள்ளது. தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர், கட்சியின் அவைத்தலைவரான மதுசூதனன். தேர்தல் தோல்விக்குப் பின், மதுசூதனன் மீடியாக்களிடம் பேசுவதை தவிர்த்து வந்தார்.

இதில் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரன் அமோக வெற்றி பெற்றுவிட்டார். திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் டெபாசிட் இழந்தன. ஆர்கே நகர் தேர்தல் தோல்வி குறித்து திமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு சில நிர்வாகிகள் நீக்கப்பட்டனர்.

இந்நிலையில், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதல்வரான எடப்பாடி கே.பழனிசாமிக்கு மதுசூதனன் அனுப்பி வைத்துள்ள கடிதம், கட்சியின் தலைமையை ஆட்டங்காண வைத்துள்ளது.  அந்தக் கடிதத்தில் மதுசூதனன், தன்னுடைய 14 கேள்விகளுக்கு  உரிய பதிலைத் தரும்படி கூறியிருக்கிறார். கேள்விக்கு முன்னதாக மிக நீளமான கடிதம் ஒன்றையும் மதுசூதனன் எழுதியிருக்கிறார்.

அந்தக் கடிதத்தின் ஒரு பகுதியில், “நான் தோற்றதற்கு என்ன காரணம், யார் காரணம், பதில் சொல்லுங்கள் மிஸ்டர் பழனிசாமி?  அம்மா மறைவுக்குப் பின்னர் கழகம் இரண்டானது. தொண்டர்கள் தவித்தனர். நாம் தனித்தனியாக இருவேறு அணியாகக் கிடந்தோம். அப்படிக் கிடந்த அணிகளை ஒன்றாக்கி கட்சியை வலுவாக்கியதுதான் நான் செய்த தவறா? நம்முடைய பிரிவால் எதிரிகள் வலுப்பெற்றுக் கழகத்தை சிதைத்து விடுவார்கள் என்று கருதி நானும் அண்ணன் கே.பி.முனுசாமியும்தானே இந்தப் பேச்சு வார்த்தைக்கே பாலம் அமைத்துக் கொடுத்தோம்? அணிகளை இணைய விடாமல், எதிரணிகளுக்கு பலம் சேர்க்கும் விதமாக  இணைப்பைத் தடுத்தவர், இன்றுவரை உங்கள் நம்பிக்கைக்கு உரிய மந்திரிதானே? தொகுதியில் நான் தோற்க கடமை உணர்வுடன் செயலாற்றியவரும் அந்த மந்திரிதானே? உங்களுக்கு அனைத்தும் தெரியும். நான் புதிதாகச் சொல்ல வேண்டியது ஒன்றும் இல்லை. ஆர்.கே.நகர் தொகுதியில் நான் வெற்றி பெற்றிருந்தால் அது கழகத்தின் வெற்றி, அம்மாவின் வெற்றி, புரட்சித்தலைவரின் வெற்றி, இரட்டை இலையின் வெற்றி. நான் தோற்றது இவை அத்தனையும் தோற்றது போல்தானே? இந்த நிமிடம் வரையில் கழகம், இடைத் தேர்தலில் தோற்றது குறித்து எந்த ஆய்வுக் கூட்டமும்  நம் தரப்பிலிருந்து நடத்தப்பட வில்லையே அது ஏன்? அம்மா இருந்திருந்தால் இப்படியெல்லாம்  நடந்திருக்குமா? ஆர்.கே. நகர்த் தொகுதிக்கான தேர்தலில் வார்டு 38-ல் நான்கு பாகமும், 43-ல் ஐந்து பாகமுமாக 9 பாகங்கள் மந்திரி ஜெயகுமார் பொறுப்பில் கொடுத்தீர்களே… ஒன்பதாயிரத்து, 500 வாக்குகள் இருக்கிற இந்த இடத்தில் நாம் வாங்கிய வாக்குகள் வெறும் 1,800 தானே? அதை ஏன் என்று கேட்டீர்களா? மூத்த மந்திரி ஜெயகுமாரே இப்படி ‘வேலையில் சுணக்கம்’ காட்டியதைப் பார்த்த மற்ற பொறுப்பாளர்கள், முதல்நாளே அவரவர் ஊர்களுக்குக் கிளம்பிப் போய் விட்டது உங்களுக்குத் தெரியுமா? அம்மா மட்டும் இன்று இருந்திருந்தால், தொகுதியில் வேலை பார்த்த மந்திரிகள், மாவட்டச் செயலாளர்கள் முதற்கொண்டு அனைவரின் பதவியும் பறி போய் இருக்குமே. பொதுத்தேர்தல் முடிவையே அம்மா மன்னிக்க மாட்டார்கள். இடைத்தேர்தல் முடிவை அம்மா  அவர்கள் ஏற்பார்களா?  இன்று நம்முடைய அம்மாவை ‘ஃபாலோ’ செய்து கருணாநிதிக் கட்சியில் அப்படிப்பட்ட முடிவை எடுத்திருக்கிறார்களே? தொகுதியின் மொத்த நிர்வாகிகளையும் கூண்டோடு நீக்கி உள்ளார்களே. ‘அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை’ என்று சகோதரர் மைத்ரேயன் பதிவு போட்ட போது அனைவருமே ஒரே குரலில் மறுத்தீர்களே. உண்மையைச் சொல்லுங்கள், நம் மனங்கள் இணைந்துதான் இருக்கிறதா?

இன்றும் ஓ.பி.எஸ். அணியிலிருந்து வந்தவர்களுக்குக் கட்சியில் எந்த முக்கியப் பொறுப்பும் கொடுக்கப்படாமல் இருக்கிறதே, வடசென்னை மாவட்டம் உள்பட தமிழ்நாடு முழுவதும் அதுதானே உண்மை நிலவரம். இதை காலங்கடந்து போய் இனிமேல்தான் சரி செய்யப் போகிறீர்களா மிஸ்டர் முதல்வர் அவர்களே? கழக இணை ஒருங்கிணைப்பாளர் அவர்களே ? நம்முடைய இயக்கம் விழுதுகளைத் தாங்கி நிற்கும் பேரியக்கம் என்று என்னைப் போல் பலர் உறுதியாக நம்பிக்கொண்டிருக்கிறோம். வேரிலும், விழுதிலும் கந்தகத்தை ஊற்றிவிட்டு ‘கழகமரம்’ கண்டிப்பாக  நிழல் தரும் என்று சொல்வது போல்தானே இச்சம்பவங்கள் காட்டுகின்றன. எனக்கு திருப்தியைத் தரக் கூடிய அளவில் உங்கள் பதில் இல்லையென்றால்   ‘தன்னிச்சை’ யாக நானே, கட்சியில் சில முடிவுகளை மேற்கொள்ள வேண்டிவரும்…” இவ்வாறு   அந்தக் கடிதத்தில் மதுசூதனன் எழுதியிருப்பதாகக் கூறப்படுகிறது போகிறது.  இதுபோக, கடிதத்தின் முடிவில் இருக்கும் 14 கேள்விகள் எந்த ரகத்தில் இருக்கும் என்பதையும் இந்தக் கடிதம் மூலமாகவே ஊகித்து விடவும் முடிகிறது… மதுசூதனன் ஆதரவாளர்கள் தரப்பில் பேசியபோது, ” ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன், செம்மலை ஆகியோர் தலைமையிலான அ.தி.மு.க.வுக்கே இரட்டை இலைச் சின்னமும் கட்சியும் சொந்தம் என்றுதான் தேர்தல் ஆணையம் சொல்லியிருக்கிறது. அப்படிப்பார்த்தால், இன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எங்கள் அண்ணனை எந்த இடத்தில் வைத்திருக்க வேண்டும், அதைச் செய்தாரா… இனி கட்சியில் எந்த நேரமும், எந்த மாற்றமும் நிகழலாம். டி.டி.வி. தினகரன் தரப்பில் அண்ணன் மதுசூதனனை முக்கியமான நபராகக் கருதுகிறார்கள். தினகரனும் அண்ணன் மீது பாசம் கொண்டவர்தான். அம்மா இறந்த போது சசிகலாவைச் சந்தித்துக் கட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டது அண்ணனும், தம்பித்துரையும்தான். நம்ப வைத்து துரோகம் செய்பவர்களை விட, விரோதியான டி.டி.வி. தினகரனே தேவலாம் என்று அண்ணன் மதுசூதனன் முடிவெடுத்து விட்டாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.

From Tharasu Shyam

ர். கே. நகர் தேர்தல் முடிவுகள் வெளிவந்து சில வாரங்கள் ஆகியுள்ள நிலையில் அதிமுக அவைத்தலைவர் & தோல்வி அடைந்த வேட்பாளர் மதுசூதனன் திடீரென்று தூக்கி உள்ள போர்க்கொடி ஆளும் தரப்பை மேலும் ஆட்டம் காண வைத்துள்ளது.

முதல்வர் எடப்பாடிக்கு மது எழுதி உள்ள கடிதத்தில் தனது தோல்விக்கு அமைச்சர் ஜெயக்குமார், வடசென்னை எம்.பி வெங்கடேஷ்பாபு மற்றும் முன்னாள் எம்.பி. பாலகங்கா ஆகியோர் தான் காரணம் என்று குற்றம் சாட்டி உள்ளார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும் கோரி உள்ளார். தேர்தல் தோல்வியை அலச அதிமுக கூட்டிய கூட்டத்தில் மதுசூதனனைப் பேசவே விடவில்லை. அதுவும் அவரது கோபத்திற்குக் காரணம்.

இருபது ரூபாய் டோக்கன் கொடுத்து ஹவாலா முறையில் டிடிவி வெற்றி பெற்றதாக ஜெயக்குமார் கூறிவந்த நிலையில், மதுசூதனன் மந்திரி மற்றும் ஆர்.கே.நகர் பொறுப்பாளர்களைக் குற்றம் சாட்டி உள்ளது “ஆல் இஸ் நாட் வெல் இன் ஏ.டி.எம்.கே” என்பதையே காட்டுகிறது.

மேலும் இரட்டை இலை சின்னம் மற்றும் அ.தி.மு.க கட்சிப் பெயர் ஆகியவற்றின் “மந்திரச்சாவி” அவைத்தலைவர் மதுசூதனன் தான். மது, செம்மலை மற்றும் ஓபிஎஸ் பெயரிலேயே தேர்தல் கமிஷன் இறுதி உத்தரவுக் கடிதம் வழங்கி உள்ளது. ஆனாலும் ஆணையம் விசாரித்த சர்ச்சை எண் 2/2017 “டைட்டில்” பெட்டிஷனர்களின் பெயர் “மதுசூதனன் மற்றும் இருவர்” என்றே உள்ளது.

எடப்பாடி கூட இடையில் இணைந்துகொண்ட “இம்ப்ளீடர்” தான்.

எம்.ஜி.ஆர் காலத்தில் அனைத்து அடிப்படை உறுப்பினர்களும் சேர்ந்தே பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுக்க முடியும் என்று மாற்றமுடியாத விதியைச் சேர்த்து வைத்திருந்தார். விரும்பத்தகாத சக்திகளால் கட்சி “ஹைஜாக்” செய்யப்படுவதைத் தடுக்கும் “கவச குண்டலம்” இது.

ஜெயலிதா அந்த விதியை மேலும் வலிமைப்படுத்தியிருந்தார். ஆனால் “ஓபிஎஸ். இபிஎஸ் காம்போ” நடத்திய பொதுக்குழுவின் திருத்தப்பட்ட விதிகளின்படி பொதுக்குழு நினைத்தால் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை மாற்ற முடியும். எனவே டிடிவி செய்ய வேண்டியதெல்லாம்
மதுவை வளைத்துப் போட்டு இன்னொரு இன்னிங்ஸைத் துவக்கவேண்டியது தான். மறுபடியும் தேர்தல் கமிஷன் “தலைவலி மருந்து” தேடக் கிளம்பிவிடும்.

எனவே அதிமுக போட்டிப் பொதுக்குழுவை கூட்டுவதென்று மதுசூதனன் முடிவெடுத்தாலோ அல்லது டிடிவி தினகரன் அணியுடன் கரம் கோர்ப்பது என்று முடிவு செய்தாலோ கதை கந்தல்.

Credit: Vikatan & OneIndia & Tharasu Shyam

பகிர்