வில்லிபுத்தூரில் நேற்று ஆண்டாள் குறித்து நடந்த கருத்தரங்கத்தில் வைரமுத்து கலந்துகொண்டார். அப்போது, ஆண்டாள் வாழ்ந்த காலம், தெய்வம் மற்றும் கடவுள்களுக்கிடையே உள்ள வேறுபாடு பற்றி அவர் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. அவருடைய கருத்துக்கு பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்தார்.

பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கவிஞர் வைரமுத்து, ஆண்டாளைப் பெருமைப்படுத்துகிறேன் என்று பேசவும், எழுதவும், ஆரம்பித்து சிறுமைப்படுத்தியிருக்கிறார். தேவதாயாக, பெண் ஆழ்வாராக பெருமை சேர்த்தவரை, தேவதாசியாக சித்தரிக்க எப்படி மனம் வந்தது?தமிழைப் பழித்தவரை தாய் தடுத்தாலும் விடேன் என்ற பாரதியின் வார்த்தையை தமிழ் வளர்த்த ஆண்டாளைப் பழித்தவரை யார் தடுத்தாலும் விடோம் என்பதே எங்களது நிலை. மனது புண்பட்டால் வருந்துகிறேன் என்பது, பண்படாமல் எழுதிய வாசகங்களுக்கு பதில் ஆகாது.

உடனே கட்டுரையை மாற்றி, எழுத்து பூர்வமாக பதிவு செய்வது மட்டுமின்றி, இனிமேல் இதுபோன்று உணர்வுகளை காயப்படுத்த மாட்டேன் என மன்னிப்பு கேட்க வேண்டும். இப்போது நீங்கள் கொடுத்திருக்கும் மறுப்பு ஏதோ வெறுப்பை மனதில் வைத்தே கொடுத்தைப் போல் உள்ளதால் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்தநிலையில் இதுகுறித்த வைரமுத்துவின் ட்விட்டர் பதிவில், ‘தமிழை ஆண்டாள் என்ற எனது கட்டுரையில் அமெரிக்க இண்டியானா பல்கலைக்கழகத்தின் ஆய்வு நூலில் சொல்லப்பட்டிருந்த ஒரு வரியைத்தான் நான் மேற்கோள் காட்டியிருந்தேன்; அது எனது கருத்தன்று. ஓர் ஆய்வாளரின் தனிக்கருத்து. ஆளுமைகளை மேன்மைப்படுத்துவதே இலக்கியத்தின் நோக்கமேயன்றி சிறுமை செய்வதன்று. அதற்கு இலக்கியமே தேவையில்லை. ஆண்டாளைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் என் கருத்துகளெல்லாம் ஆண்டாளின் பெருமைகளையே பேசுகின்றன என்பதை அனைவரும் அறிவர். எவரையும் புண்படுத்துவது என் நோக்கமன்று; புண்பட்டிருந்தால் வருந்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.  யாரையும் புண்படுத்துவது எனது நோக்கமல்ல. புண்பட்டிருந்தால் வருந்துகிறேன் என்று பாடலாசிரியர் வைரமுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

நமது கப்ஸா நிருபரிடம் பேசிய வைரமுத்து தமிழிசை உருவத்தில் நான் கருப்பு ஆண்டாளை பார்க்கிறேன், அதுபோல் கிருஷ்ணரை ராஜா உருவத்தில் பார்க்கிறேன். எப்படியாவது ஞான பீடம் விருதை கொடுங்கள் என்று திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார்.

பகிர்