ஜல்லிக்கட்டு போராட்டம், ‘பிக்பாஸ்’ மூலம் கவனம் ஈர்த்த ஜூலி தமிழ் சினிமாவில் ஒரு புதிய படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். இப்படத்துக்கு ‘தேவையில்லாத தாசி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் ஜூலி. இதற்கு முன்னதாக ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்று கோஷங்கள் எழுப்பியதில் கவனம் பெற்றார்.

தற்போது பிரபல தொலைக்காட்சி சேனல் ஒன்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருக்கும் ஜூலி புதிய தமிழ்ப் படம் ஒன்றில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இப்படத்தை K7 புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. ‘ஜூலியும் 4 பேரும்’, ‘தப்பாட்டம்’ போன்ற படங்களில் நடித்த துரை சுதாகர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

படம் குறித்து ஜூலி கூறுகையில், ”கதையைக் கேட்டதும் எனக்குப் பிடித்துவிட்டது. இந்தப் படம் என் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும்” என நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிலையில் படத்துக்கு ‘உத்தமி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தில் ஜூலி ஆண்டாளாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பகிர்