சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ டிடிவி தினகரனின் ஸ்லீப்பர் செல்லாக செயல்பட்டதால் பேராசிரியர் தீரன் அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். பாமகவில் இருந்த தீரன் கட்சிகள் மாறிக் கொண்டே வந்தார். தனிக்கட்சி தொடங்கினார். பின்னர் நாம் தமிழர் கட்சிக்கு போனார். அங்கிருந்து பண்ருட்டி வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு தாவினார். அதில் இருந்து விலகி அதிமுகவுக்கு தாவி டிவி விவாதங்களில் பங்கேற்று வந்தார்.
அதிமுக அணிகள் உடைந்த நிலையில் சசிகலா அணியிலேயே இருந்தார். தினகரன் தனியாகப் போன போதும் கூட முதல்வர் எடப்பாடியார் அணியில் இருந்தார். அவரும் டிவி விவாதங்களில் பங்கேற்பவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டும் இருந்தார்.
தினகரனிடம் கட்சியை ஒப்படைக்க வேண்டும் என தொலைக்காட்சியில் பேசிய தீரன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவில் சமீபத்தில் 13 புதிய செய்தித் தொடர்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதில் பேராசிரியர் தீரனும் ஒருவர். ஆரம்பத்தில் பாமகவிலிருந்த தீரன் பின்னர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அதுமுதல் அதிமுகவிலேயே இருக்கிறார்.
தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று சிறப்பாக செயல்பட்டு வந்தார். சமீபத்தில் அதிமுகவில் செய்தி தொடர்பாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டனர். இதில் பேராசிரியர் தீரனும் ஒருவர். சமீபத்தில் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற பேராசிரியர் தீரன் அதிமுகவில் தற்போதுள்ள பிரச்சனை தீர கட்சியை தினகரனிடமும், ஆட்சியை எடப்பாடியும் வைத்துக்கொண்டால் பிரச்சினை தீரும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.