மதுரை: கவிஞர் வைரமுத்து, ஆண்டாள் குறித்து தெரிவித்த ‘தேவதாசி’ கருத்தை எதிர்த்து தமிழகத்தில் போராட்டம் வெடித்துள்ளது. பல இடங்களில் ஆர்பாட்டம், கண்டன பேரணி, உண்ணாவிரதம் நடந்தது. தாயார் ஆண்டாள், இறையருள் பெற்ற கவி. ஆழ்வார்களில் ஒருவராகப் போற்றப்படுபவர். யாரோ வெளிநாட்டில் எழுதிய கட்டுரை தேவையற்றது. கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேடக வேண்டும் என்று எதிர்ப்புக் குரல் எழுந்தது. வைரமுத்துவின் கட்டுரையின் கடைசி வாக்கியம் இன்று இந்து மத ஆர்வலர்களையும், ஆண்டாள் பக்தஜன சபையையும் கொதித்தெழச் செய்துள்ளது.

“இந்த வானம் ஒருவாரமாக பொழிந்து கொண்டிருந்தது. முணுமுணுத்துக் கொண்டிருந்தது. அவ்வப்போது தானே கைதட்டிக் கொண்டிருந்தது. தன்னைதானே மின்னலின் மூலமாக படமெடுத்துக் கொண்டது. தமிழர்கள் வீட்டிற்குள் முடங்கிப்போனார்கள். நான்கூட ஐயப்பட்டேன். கூட்டம் வருமா என்று. மழையில் நனைதால் கரைந்துவிடுமோ என்று வெல்லக்கட்டிகள் வீட்டிற்குள் பதுங்கி விட்டன. மழையில் நனைந்தாலும் கரையாத தங்கக்கட்டிகள் சபையில் உள்ளனர். என்று ஐஸ் வைக்க ஆரம்பித்து ஆண்டாள் பற்றி உரையாற்றினார் வைரமுத்து. கடவுள் திருவுரவத்தோடு ஒரு மானிடச்சி கலதாள் என்பது, பூமிதனில் யாங்கணுமே காணாதது. ஆனால் அச்சாவதாரமாகிய ஒரு விக்கிரகத்தோடு, குருதியும் இறைச்சியுமாய் ஒரு மானிடப் பெண் கலந்தததுண்டா என்ற கேள்விக்கு விடை சொல்ல ஒரு ஆவணம் இருக்கிறது என்று இண்டியானா பல்கலைக்கழகம் ஆய்வுக் கட்டுரையை மேற்கோள் காட்டினார்.

ஆனால் அது குறித்து கப்சா நிருபர் செய்த புலனாய்வில் வைரமுத்து தவறான செய்தியை திரித்து பரபரப்பு ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது. கப்சா நிருபர் கூற்றுப்படி அது இண்டியானா பல்கலைக்கழக ஆய்வே அல்ல. Indian Movement: some aspects of dissent, protest and reform என்ற அந்த நூல் சிம்லாவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்ட் ஸ்டடி (Indian Institute of Advanced Study, Rashtrapati Nivas, Chaura Maidan, Near Birds Zoo, Shimla, Himachal Pradesh 171005, India) வெளியிட்ட ஒரு கருத்தரங்க தொகுப்பு. இதன் அமேசான் லிங்க் https://www.amazon.com/Indian-Movements-Aspects-Dissent-Protest/dp/B003DX9G9C

ஆண்டாள் ரங்கநாதரை திருமணம் செய்து கொண்டாள். நல்ல நாள் நேரம் நட்சத்திரம் பார்த்து சுபயோக சுப தினத்தில் ரங்கநாதர் கோவிலில் வளர்ப்பு தந்தையும் உறவினர்களும் புடை சூழ, மணப்பெண் அலங்காரம் செய்து கடவுள் கழுத்தில் கட்டிய தாலியை ஆண்டாள் கழுத்தில் அணிவித்து, ஆலயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டாள். இதுபோல் குலசேகர ஆழ்வார், நந்த சோழன் போன்ற செல்வந்தர்களும் மன்னர்களும் தங்கள் புதல்விகளை ரங்கநாதர் கோவில் கடவுளுக்கு திருமணம் செய்து வைத்து முதன்முறையாக தனது சொத்துக்களை தானமாக/வரதட்சிணையாக வழங்கிய தகவல்களும் உள்ளன. இது போல் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கு உடலில் முத்திரைகளும் ஏற்படுத்தப்பட்டன. எனவே ஆண்டாளும் ஒரு தேவதாசியே என பலவேறு மற்ற ஆதரங்கள் தெரிவிக்கின்றன. (கீழே தரப்பட்டுள்ளன)

சினிமாவில் வாய்ப்பிழந்த வைரமுத்து, ஜெயலலிதா அப்பலோவில் இருந்த போது விசிட் அடித்துப்பார்த்தார், பா.ரஞ்சித் கபாலி படத்தில் ரஜினிக்கு ஓப்பனிங் சாங் எழுத வாய்ப்பளிக்காததால், கபாலிப்படம் ஒரு தோல்விப்படம் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்திப் பார்த்தார். இப்போது மார்கழி மாதமும் அதுவுமாக ஆண்டாளை பழித்து, வந்தேறி ஷர்மாக்களிடம் சிக்கிக்கொண்டார் என்றார் நமது கப்சா நிருபர்.

ஆண்டாள் ஒரு தேவதாசிதான் என்பதற்கான ஆதாரங்கள்

the_world_of_the_bhaktin_in_south_indian

review_23849

aa.1979.81.1.02a01

13009_chapter 3

08_chapter

209_chapter 3

aa.1979.81.1.02a01130

பகிர்