புதுச்சேரியை அடுத்த ஆரோவில்லில், தனக்கு சொந்தமான பண்ணை வீட்டில் தங்கியிருந்து பொங்கலைக் கொண்டாடினார் எம்.எல்.ஏ., டி.டி.வி. தினகரன். காவிரி நீர் பிரச்சினை குறித்து கேட்டதற்கு சின்னம்மா தயவால் குருட்டு அதிர்ஷ்டத்தில் எடப்பாடி பழனிசாமி  முதல்வரானதால் காவேரி நீரை தமிழகத்துக்குப் பெற மத்திய அரசிடம் கோரிக்கைதான் வைக்க முடியும். டாஸ்மாக் போல் தடையின்றி காவிரித் தண்ணீர் பெற்றுத்தர டெட்பாடியால் முடியாது. 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செல்லாது எனத் தீர்ப்பு வருவதற்கான உள் வேலைகள் பணப்பட்டுவாடா ரகசியமாக ஸ்லீப்பர் செல்கள் மூலம் நடைபெறுகிறது. இரட்டை இலை தவறானவர்கள் கையில் சிக்கியுள்ளது.
அ.தி.மு.க-வின் சட்ட திட்டத்தின்படி பெரும்பான்மையான தொண்டர்கள் யார் பக்கம் உள்ளார்கள் எனப் பார்க்காமல், தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கியதற்கு ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் எனக்கு குக்கரில் வாக்களித்து வெற்றியைத் தந்து நிரூபித்துள்ளனர். ஒன்றரைக் கோடி தொண்டர்களின் எண்ணத்தை ஆர்.கே. நகர் மக்கள் வெறும் இருபது ரூபாய் நோட்டின் மூலம் பிரதிபலித்துள்ளனர். பணம் கொடுத்து வெற்றிபெற்றுவிட்டதாக, என் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாத கமல் போன்றவர்கள், ஆர்.கே. நகர் மக்களை தாழ்த்திப் பேசி வருகின்றனர். இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பேன். தனிக்கட்சி தொடங்குவதற்கு எப்படி செயல்பட வேண்டுமோ அப்படிச் செயல்படுவேன். தனிக்கட்சி தொடங்குவது தொடர்பாக, நாளை எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் முடிவுசெய்வோம். தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தலில் எங்கள் (டி.டி.வி. தினகரன்) அணி வெற்றிபெறும். இந்த ஆட்சி, இரண்டு மாத காலத்தில் குக்கரில் வாய்க்கரிசி போட்டு முடிவுக்கு கொண்டு வரப்படும். மகா ஊழல்வாதியான மிகப் பெரிய ஆளாக வளர்த்துவிட்டதில் மோடியின் வருமான வரித்துறைக்கும் ஊடகங்களுக்கும் பெரும் பங்கு உண்டு. அவர்களுக்கு என் நன்றி!” என்று தெரிவித்தார்.
இதை அறிந்த மன்னார்குடி உறவினர் ஒருவர் ‘தனிக்கட்சி தொடங்கிவிட்டால், நீதிமன்றத்தில் இரட்டை இலைக்கு தினகரனால் உரிமை கோர முடியாது. எடப்பாடி பழனிசாமி-பன்னீர்செல்வம் அணிதான் பலம் பெறும். ஆனால், தினகரன் மனநிலை வேறுமாதிரியாக இருக்கிறது.’ தனக்காகத்தான் கூட்டம் கூடுகிறது. ஆட்சி மாற்றத்தையே உருவாக்க முடியும்’ என நினைக்கிறார். ஆர்.கே.நகர் வெற்றி அவரது மனதை மாற்றிவிட்டது வாய்க்கரிசி போடுவாரா அல்லது போட்டுக் கொள்வாரா பார்ப்போம். தனிக்கட்சி என்பதாக இல்லாமல் பேரவை என்று தொடங்கினால் நல்லது என்று நினைக்கிறேன். அதுவும் பிற்காலத்தில் குட்டி அம்மா தீபா பேரவை போல அட்ரஸ் இல்லாமல் போகும் காலம் சீக்கிரம் வரும்.’ என்றார் நக்கலாக. துணை முதல்வர் கூன்பாண்டியன் ஆட்சி மற்றும் கட்சிப் பொறுப்பை தினகரனிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக் கொள்ள எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்க ஆலோசிப்பதாகவும் நம்பத்தகாத வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
பகிர்