“அதிமுகவை கைப்பற்ற தினகரன் தொடர்ந்து முயற்சிக்க வேண்டுமா? புதுக்கட்சி துவங்குவதுதான் தினகரனுக்கு உள்ள ஒரே வழியா?,” என்று பிபிசி தமிழின் #வாதம்விவாதம் பகுதியில் கேட்கப்பட்ட கேள்விக்கு நேயர்கள் பதிவிட்ட கருத்துகளின் தொகுப்பு.

“விரைவில் வரும் தேர்தல்களுக்காக மட்டும் கட்சி துவங்கின்றார், இந்த பாஜகவின் பினாமிகளின் ஆட்சி கவிழ்ந்தால் பழனிச்சாமி மற்றும் பன்னீரின் பக்கம் யாரும் தேர்தலில் நிற்கமாட்டார்கள் பலர் தினகரன் பக்கமே வருவார்கள,” என்று கூறியுள்ளார் சிவ சர்மா எனும் நேயர்.

“தமிழகத்தின் இன்றைய சூழலில் இவர் தனிக்கட்சி தொடங்குவது என்பது தைரியமான முடிவே. பல சினிமா நட்சத்திர அரசியல் பிரவேசம் என்று சொல்வது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இவரின் தனிக்கட்சி என்பது தனித்துவமாக அமையும் மற்றும் வெறுக்கும் சினிமா அரசியலையும், புதிய அரசியல் மாற்றம் வேணடும் என எதிர்பார்பவர்களையும் ஆர்வபடுத்துவதாய் தினகரனின் அரசியல் தனி கட்சி பிரவேசம் அமையலாம்,” என்கிறார் ரமேஷ் நாராயண்.

டுவிட்டர் இவரது பதிவு @noushadksk: தொண்டர்களை தக்க வைத்துக்கொள்ள புதுக்கட்சி தொடங்குவது நல்ல நகர்வு. அதிமுக அதிருப்தி உறுப்பினர்களை தன்கட்சியின் பக்கம் இழுத்து அதிமுக வை முழுமையாக கைப்பற்றும் வரை ஒரு தனி அடையாளம் தேவை. எப்படியிருந்தாலும் அதிமுக வை நிரந்தரமாக விடக்கூடிய எண்ணம் TTVக்கு இருக்க வாய்ப்பே இல்லை

அபு ஜாசர் எனும் நேயர் இவ்வாறு கூறுகிறார், ” தினகரனின் புதிய கட்சி என்பது எதிர் வரும் தேர்தல்களுக்காகவே அமையும். ஆர்.கே நகரில் தற்போதைய அதிமுக-வைவிட தினகரன் தன்னை மேலானவராக நிரூபித்திருக்கிறார். புதியகட்சி அதை நிரூபிக்கும்.”

“அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதற்கு இது சரியான சான்று. தமிழக மக்கள் அரசியலில் கேரள மாநிலத்தை பின்பற்றினால் தமிழினம் தழைக்கும்,” என்பது முருகையன் எனும் நேயரின் கருத்து.

“அதிமுக என்றால் தினகரன்தான்,” என்று கூறியுள்ளார் பொன்னையா எனும் நேயர்.

சுரேஷ் குமார் இவ்வாறு கூறுகிறார், “புதுக்கட்சி தொடங்குவதுதான் அவர் அரசியலில் நிலைக்க ஒரே வழி.”

 டுவிட்டர் இவரது பதிவு @riraje1: காலத்தின் கட்டடாயம். உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள அமைப்பு அவசியம். பாஐக வின் கைப்பாவையாக இன்றைய அதிமுக இருப்பதால் கட்சி இப்போதைக்கு இவர் கையில் வர வாய்ப்பில்லை.


டுவிட்டர் இவரது பதிவு @riraje1: காலத்தின் கட்டடாயம். உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள அமைப்பு அவசியம். பாஐக வின் கைப்பாவையாக இன்றைய அதிமுக இருப்பதால் கட்சி இப்போதைக்கு இவர் கையில் வர வாய்ப்பில்லை.
புகைப்பட காப்புரிமை @riraje1

“நாடெங்கிலும் விடுதலை எழுச்சி எழாமலும், எழுந்தும் பரவாமல் இருந்த காலத்தில், மக்கள் சமூக நீதிக்கான எழுச்சியை கோட்பாடுகளாகக் கொண்டு கொள்கைகளை வகுத்து கட்சியைக் கட்டமைத்து மக்களுக்காகப் போராடி, முன்னேற்றத்திற்கான முதல் அடித்தளத்தை அமைத்து முன்னோடியாகத் திகழ்ந்தது தமிழகம். ஆனால் இன்று தனிப்பட்ட விருப்புவெறுப்பு, ஆளுமை, சுயவிளம்பரம், தன்நலம், பிறரது வற்புறுத்தல், குறிப்பிட்ட சமூகத்திற்கான நலன், திரைத்துறையின் நாயகத் துதி போன்றவற்றுக்கான கொள்கைகளற்ற கட்சிகளால் மக்கள் நலன் என்பது வெற்று விளம்பரத்திற்கு மட்டுமே என முன்னிலைப் படுத்தப்பட்டு தமிழக அரசியல் களம் களைச் செடிகளால் நிறைந்து காணப்படுகிறது,”என்று பதிவிட்டுள்ளார் சக்தி சரவணன்.

டி.டி.வி.தினகரன் “புதிய கட்சி” தொடங்குவதற்க்கான அறிவுப்புகளை வெளியிட்டவுடன் எதை தின்றால் பித்தம் தெளியும் என்று காத்திருந்தவர்களின் அடி வயிற்றில் பூகம்பம் வெடித்திருக்கிறது என்பது உண்மையாகியிருக்கிறது.

ஆர்.கே.நகர் தேர்தலில் உச்சகட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையே இன்னும் சரிவர செரிமானம் செய்ய இயலாதவர்களால் #டிடிவியின் அடுத்த அதிரடி அறிவிப்பு ஆகப்பெரிய இடியாய் வந்து இறங்கியிருக்கும் என்பதை நம்மால் புரிந்து கொள்ளமுடிகிறது!!

பல திசைகளிலிருந்து வரும் தொடர் இடர்பாடுகளினால் இடிந்து போய் உட்கார்ந்து விடுவார், இனி அரசியல் பக்கமே திரும்ப யோசிப்பார் என்றெல்லாம் மனக்கணக்கு போட்டவர்களின் மூளையில் ஏறி உட்கார்ந்து ஆணியடித்துவிட்டார் டிடிவி.

ஆர்.கே.நகர் வெற்றி என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் குரலாக எடுத்துக்கொள்ள முடியாதுதான் எனினும் ஒரு திரளான மக்கள் கூட்டத்தின் ஒரு சதவீத மக்களின் நம்பிக்கையைப் பெறுவது என்பது கூட ஆளுங்கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் இயலாமல் போய்விட்டது என்பதே நிதர்சனம்!!

சிதறிக்கிடக்கும் அதிமுக தொண்டர்களை ஒருங்கிணைக்கும் சக்தியும் , வலிமையும், ஆற்றலும் இன்று டிடிவி தினகரனைத்தவிர வேரொருவருக்கும் இல்லை என்பது இறுதியான முடிவாகிவிட்டது!!!

இரட்டை இலை என்பது ஒரு சின்னம் மட்டுமே அதை வைத்துக்கொண்டு மட்டுமே எம்ஜிஆர்+ ஜெயலலிதாவின் ஆட்சி என்று மக்களிடம் சொல்லிச்செல்ல முடியாது என்பதையும் ஆர்.கே நகர் வெற்றியும், தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக டிடிவி தினகரனுக்காக வந்து சேரும் தொண்டர்படை நிருபித்துக்கொண்டே இருக்கிறது!!

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் வாரிசாக எவரையும் ஏற்றுக்கொள்ள அக்கட்சியின் தொண்டர்கள் இல்லாத சூழலில் அவர்கள் மீது எவரையும் திணிக்க முடியாது.

தொண்டர்கள் தான் தலைவனை தீர்மானிக்க முடியும் என்று நாம் தொடர்ந்து சொல்லி வந்துள்ளோம். அதன் படி அண்ணா திராவிட முன்னேற்றக்கழக தொண்டர்களின் ஒட்டுமொத்த உணர்வாக டிடிவி தினகரன் தன்னை நிலை நிறுத்தி உள்ளார்.

எனவே எது உண்மையான அதிமுக என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டிய தருணம் இது!!

தேர்தல் கமிஷனோ, நீதிமன்றமோ, மத்திய அரசோ இதுதான் உண்மையான அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் என்று சொல்ல முடியாது. அதை தொண்டர்கள் மட்டுமே சொல்ல முடியும்.

அக்கட்சியின் தொண்டர்களை தாண்டி தமிழக மக்கள் அதை உறுதி செய்யவேண்டும்.

தேர்தல் கமிசன் சொன்னதாலும் இரட்டை இலை போனதாலும் அதிமுக இவர்களுக்குத்தான் சொந்தம் என்று சொல்வதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இச்சதி திட்டத்தை முறியடிக்கவேண்டிய கட்டாயத்தில் தான் இன்று தமிழகம் இருக்கிறது!!

எனவே டிடிவி தினகரன் புதிய கட்சியை அறிவிப்பது மூலமாக எது உண்மையான அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் என்பதை தொண்டர்களும் தமிழக மக்களும் முடிவு செய்வர்.

இதுவே காலத்தின் கட்டாயம்!!

இரட்டை இலையை எதிர்த்து டிடிவி தினகரன் போட்டியிட்டார் என்று அழுதுபுழம்பியவர்கள் தான் இன்று டிடிவி தினகரன் புது கட்சி தொடங்கப்போகிறார் என்றவுடன் மிரளத்தொடங்கியுள்ளனர்.

Credit: BBC

பகிர்