டிசம்பர் 4-ந் தேதியே ஜெயலலிதா இறந்துவிட்டதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் பரபரப்பான தகவலை வெளியிட்டு உள்ளார். ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் மரணம் அடைந்தார். அவரது மரணம் தொடர்பாக ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகள் எழுந்து உள்ளன. இது தொடர்பாக தமிழக அரசு அமைத்த விசாரணை கமிஷன், ஜெயலலிதா மரணம் குறித்து சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்பினரிடம் கண்துடைப்பு விசாரணை நடத்தி வருகிறது. அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை, டி.டி.வி.தினகரனின் ஆதரவாளரான வெற்றிவேல் ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், 2016-ம் ஆண்டு டிசம்பர் 4-ந் தேதியே ஜெயலலிதா இறந்துவிட்டதாக, அவரது தோழி சசிகலாவின் தம்பி திவாகரன் பரபரப்பான தகவலை வெளியிட்டு உள்ளார்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4-ந் தேதி மாலை 5.15 மணிக்கு இறந்தார். ஆனால் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், அவருடைய மரணத்தை உடனடியாக அறிவிக்கவில்லை. உயிர் பிரிந்த பின்னரும் அவருடைய உடல் வெண்டிலேட்டரில் இருந்தது. மருத்துவமனை குழும தலைவரிடம் கேட்டபோது, தமிழகம் முழுவதும் எங்களுடைய மருத்துவமனைகள் உள்ளன. மருத்துவமனைகளுக்கு பாதுகாப்பை பலப்படுத்துங்கள். அதன் பின்னர் மரணத்தை அறிவிக்கிறோம் என பேரம் பேசினர் என்று கூறினார். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தும் ஆணையம் இதுவரை தன்னை அழைக்கவில்லை என்றும், அழைப்பு விடுத்தால் விசாரணைக்கு ஆஜராவதில் தனக்கு எந்த தயக்கமும் இல்லை என்றும் திவாகரன் தெரிவித்தார். ஜெயலலிதா எப்போது இறந்தார் என்பது குறித்து குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் தகவல் தெரிவித்துள்ள திவாகரனை கைது செய்ய வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார். ஜெயலலிதா இறப்பு குறித்து விசாரணை ஆணையத்தில் எதையும் கூறாமல் பொதுவெளியில் வெளியிடுவது தவறானதாகும். ஜெயலலிதா மரணம் குறித்து திவாகரன் வெளியிட்ட தகவல் முரணானது. அதேபோல் ஜெயலலிதாவின் சிகிச்சை வீடியோவை வெளியிடுவது போன்ற செயல்களால் தினகரனும், திவாகரனும் மலிவான அரசியல் செய்கின்றனர். அவர்களை விசாரணை ஆணையம் தாமாக முன்வைத்து கைது செய்ய வேண்டும் என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.

இதை அறிந்த தினகரன் திடீர் பல்டி அடித்தார். கப்சா செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4-ந் தேதி மாலை 5.15 மணிக்கு தீவிர இருதய செயலிழப்பு ஏற்பட்டதாக தகவல் கிடைத்தது. அவ்வாறு ஏற்படும் போது மருத்துவரீதியாக உயிரிழந்ததாக கருதப்படும். ஆனாலும் மூளை செயல்பாடு இருந்து கொண்டிருக்கும். இதனால் டாக்டர்கள் 24 மணி நேரம் ‘எக்மோ’ கருவி கொண்டு மீண்டும் இருதயத்தை செயல்படவைக்க வாய்ப்பு இருக்கிறதா? என்று முயற்சிப்பார்கள். அதன்பிறகு தான் உயிரிழப்பு குறித்து அறிவிக்கப்படும். அதை குறிப்பிடும் நோக்கில் தான் நான் இதனை குறிப்பிட்டேன். ஆனால் நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது. எனவே மன்னார்குடி மாபியாவின் சூழ்ச்சிப்படி எனது விளக்கத்தை அளிப்பதற்காக இதை தெரிவிக்கிறேன். ஜெயா பிறந்த பிராமண சம்பிரதாயப்படி பிறந்தநாள், இறந்தநாள் இவ்விரண்டும் நாள் கணக்குப்படி ஒரு முறையும், நட்சத்திர திதி கணக்குப்படி ஒரு முறையும் கொண்டாடுவது வழக்கம். எங்கள் மன்னார்குடி மாபியாவுக்காக அம்மா இரண்டு முறை இறந்து எக்மோ கருவி பலனளிக்காததால் பல்லிளித்து வாய்பிளந்து ‘அப்பீட்’ ஆனார் என்றார். பின்னர் ரொட்டி சாப்பிட்டுக்கொண்டிருந்த அப்போலோ ரெட்டியும் இதை உறுதி செய்தார்.

பகிர்