மத்திய அரசின் கழுகு ஒன்று அந்த சமயத்தில் அப்பல்லோவில் இருந்தது. அவருக்கு வேண்டப்பட்டவருக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் என சிபாரிசு செய்தது. அவர் உயர்ந்த பதவிக்கு சென்றுவிட்டதால் அவர் பெயரைக் கூறவும் முடியாது; அவரைபற்றி விமர்சிக்க கூடாது.
செல்வி.ஜெயலலிதா 4ம் மாலை 5.15 மணிக்கே உயிரிழந்துவிட்டார். ஏன் இன்னும் அறிவிக்கவில்லை என அப்பல்லோ பிரதாப் ரெட்டியிடம் கேட்டதற்கு, தமிழகம் முழுவதும் அப்பல்லோவிற்கு நிறைய கிளைகள் உள்ளன. அவற்றிற்கு உரிய பாதுகாப்பு கொடுங்கள் என்றார் .. திவாகரனின் பேச்சு நிறை சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கிறது..
..
இதிலிருந்து முதல்வர் எப்போது இறந்தார் என்று மத்திய அரசிற்கு .. மாநில அமைச்சர்களுக்கு ..மாநில அரசுத்துறை செயலர்களுக்கு தெரிந்திருக்கிறது.. அப்பலோ அதிபர் ஏன் தொடர்ந்து பொய் சொல்ல வேண்டும்.. பாதுகாப்பு பிரச்சனை என்றால்
காவல்துறையின் உதவியை நாடியிருக்கவேண்டுமே தவிர.. ஏன் மறைக்க வேண்டும்.. இதில் நிறைய உண்மைகள் மறைக்கபட்டிருக்கிறது.. நிறைய தில்லுமுல்லு நடந்திருக்கிறது அவரின் மரணத்தை தொடர்ந்து நிறைய மர்ம முடிச்சுகள் அவிழ்க்கபடாமல் இருக்கின்றன..
..
எரிகிற வீட்டில் பிடிங்குகிற வரை லாபம் என்று நடந்துக்கொண்டிருக்கிறார்கள்.. அன்று அங்கிருந்த கழுகு யாரென்று எல்லோருக்கும் தெரியும்.. அதிமுககாரனை விட அங்கேயே குடியிருந்தவர் விசாரிக்கப்படவேண்டும் ..
தனக்கு வேண்டியவரென்றால் யார் அவர்.. பாஜகவிற்கு அங்கென்ன வேலை .. இதிலிருந்தே மறைமுக ஆட்சி செய்வது யாரென்று வெளியே வர தொடங்கியிருக்கிறது.. பதவி சுகத்திற்காக எல்லாம் அறிந்திருந்தும் மறைக்கிற அயோக்கிய பன்னீர்.. தங்களின் மேம்பாட்டிற்காக மரணத்தை கூட மறைக்கிற சசிகலா வகையறா… கூடவே இருந்து அப்போலோவை இயக்கிய அப்போதைய மத்திய அமைச்சர் இவர்களை இயக்கிய பாசிச கும்பல் எல்லாரும் சேர்ந்து குற்றவாளியாகிறார்கள்..
இவர்கள் அமைத்திருக்கும் விசாரணை கமிஷனால் எந்த பயனுமில்லை.. உச்சநீதிமன்றமே பதவியில் இருக்கும் நீதிபதியை கொண்டு விசாரணைக்கு உத்தரவிடலாம் ..
..
ஜெயலலிதா கம்பீரமானவராக ஊடகங்கள் சித்தரித்தாலும்… இரும்பு பெண்மணியென
கட்டமைத்தாலும் நிஜ வாழ்வில் நிறைய ஏமாற்றங்களை சந்தித்த அபலை பெண்ணாக தெரிகிறார்.. தான் ஏமாற்றபடுவது அறிந்தும் அதை வெளிகாட்ட முடியாதவராகவே வாழ்ந்திருக்கிறார் .. அவரே ஒரு பேட்டியில் தன் வாழ்வில்
தூய்மையான அன்பை நட்பை உணர்ந்ததே ..இல்லை அப்படி ஒருவரை நான் சந்திததில்லை தன் தாயிடமிருந்து இருந்து கூட எனக்கு கிட்டவில்லை என்றார்..
எல்லோருக்கும் என்னால் பயன்பட்டிருக்கிறார்கள்..என்றார்.. ஜெயலலிதாவின் வாழ்க்கை வலிகள் நிறைந்தது அவரது அரசியலோடு எதிரான போக்கை கொண்டிருந்தாலும் அவரிடம் திமுக மட்டுமே கரிசனபார்வை கொண்டிருந்தது.. மற்றவர்கள் அவரை வைத்து பிழைத்தனர் 
..
ஜெயலலிதா ஜெயராம் அவரது வாழ்வின் பெரும்பகுதி யாருக்கும் அறியாத புதிராகவே இருந்தது சினிமாவிற்கு வந்தபோது அவரது தாயார் சந்தியா அவர்கள் எப்படியேனும் தன் மகளை சினிமாவில் தான் எட்டமுடியாத (தன்னால் சாதிக்கமுடியாததை) உயரத்திற்கு கொண்டு செல்லவேண்டுமென்று தனக்கு இணக்கமான ராமசந்திரனிடம் கொண்டு சேர்த்தார் ஆரம்பகாலங்களில் சினிமாவிற்காக இணங்கினாலும் .. தன் தாயாரின் மறைவிற்கு பிறகு அவரோடான நட்பை வெறுத்து ஒதுக்கி தான் விரும்புகிறவரோடு வாழவேண்டுமென ஆசைப்பட்டார் .. ஆனால் அந்த அயோக்கிய ராமசந்திரனால் .. ஜேப்பியாரை விட்டு பாபுவிடமிருந்து பிரித்து அழைத்துவர பணித்ததும் .. ஜேப்பியார் ஒரு இரவு தன்னோடு வைத்திருந்துவிட்டு ராமசந்திரனிடம் ஒப்படைதத்தார் இதை ஜேப்பியாரே சொல்லியிருக்கிறார்..
அன்று தொடங்கியது வாழ்வில் மர்மங்கள் .. அதற்கு முன்பு அதாவது
அரசியலுக்கு வருவதற்கு முன்பு கொஞ்சம் வெளிப்படையானவராக மனதில் தோன்றியதை சொல்ல கூடியவராக இருந்தார் சோபன்பாபு காதலை கோயிங் ஸ்டெடி என துணிவோடு சொல்ல அவரில் முடிந்தது .. ஆனால் அரசியல் பிரவேசம் அதை தொடர்ந்து அவர் தனக்குள் ஏற்படுத்திக்கொண்ட கோடு .. மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தி கொண்டவை அவரைப்பற்றி செய்திகளில் உண்மைத்தன்மை குறைய ஆரம்பித்தது .. அவர் தனக்குள் போட்டுக்கொண்ட கட்டுபாட்டை அவரோடு கூட இருந்தவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள் .. பெண் என்பதால் வெளிப்படையாக நடந்துக்கொள்ள முடியவில்லையென சிலர் சொல்ல அதை நம்ப தொடங்கியது கூட இருந்தவர்களுக்கு சௌகரியமாக போனது .. தன்னைச்சுற்றி என்ன நடக்கிறதென்றே தெரியாதளவிற்கு அவர் இயக்கபட்டிருக்கிறார்.. கடைசி மூச்சுவரை வெளிவராத சங்கதிகளின் நாயகியாகவே இருந்துவிட்டு போனார்.. பிரபலமான
ஒருவரின் பிறப்பும் இறப்பும் சரியாக பதிய வேண்டும்.. இறப்பில் இவ்வளவு சந்தேகங்களோடு புதைக்கபட்டிருக்கிற உண்மைகள் வெளிவந்தே தீரவேண்டும்.. அப்போலோ முதல் அடிமைகள் வரை.. கூட இருந்து இயக்கிய கழுகும் விசாரிக்கபடவேண்டியவர்கள் ..

Aalanci Spm

பகிர்