திராவிடத்தையும் மதஎதிர்ப்பு உணர்வையும் அவர்களாகவே விட்டுவிடுகிறோம் என்கிற வரை போராட்டம் தொடரும்.. எச்.ராசா..
மிக்க நன்றி..
எங்கே திராவிட சிந்தனை பொய்த்துவிடுமோ என அஞ்சியவர்கள்.. இதோடு முடிந்தது என எக்காலமிட்டவர்களுக்கு உணர்வை ஊட்டியிருக்கிறீர்.. எங்கே தடம் புரளுமோ என சிலர் சந்தேக கண்ணோடு எமை பார்க்கும் வேளையில்.. மூளைக்கு வேலை தந்திருக்கிறாள் “ஆண்டாள்”..
..
மிக சாதூர்யமாக நம்மை பிரிக்க ஆரியர்கள் செய்யும் சூழ்ச்சியில் அவர்களே விழுந்ததும்.. எழுந்து வர முடியாமல் தவிப்பதும் வெளிப்படையாக தெரிகிறது… அய்யா சுப.வீ அவர்கள் சொன்னதைப்போல வைரமுத்துவிற்கெதிரான பிரச்சனை அல்ல இது .. திராவிட ஆரிய போரின் தொடர்ச்சி அவ்வளவுதான்.. கவனமாக அவர்கள் வில்லையும் அம்பையும் ஏய்கிறார்கள்.. நாம் அரிவாளோடும் வேல் கம்போடும் போருக்கு தயாரென்கிறோம் .. கலைஞர் ஒரு கவிதையிலே சொன்னதைப்போல..
மறைந்துநின்று
மானமிகு வாலியை தாக்கிய
மாண்புமிகு ராமசந்திரனை மாவீரனென மகாகவி கம்பனே ஏற்கவில்லையென்பார்..
அவர் ஒரு சொல்லாடலை உபயோகப்படுத்தியிருப்பார்.. மறைந்துநின்று தாக்குதல்.. அதாவது வில் அம்பு போன்ற ஆயுதங்கள் மறைந்துநின்று தாக்கவே பயன்படும்..நாம் வீரவசனம் பேசி .. வெட்டருவாளோடு போவோம் அது தான் இப்போது நடக்கிறது..
ஆம் நம்மை மறைந்துநின்று தாக்க தொடங்கியிருக்கிறார்கள் இப்போது அம்புகளாகவும் வில்லாகவும் .. நம்மவனையே தேர்வு செய்கிறார்கள்…
..
நிறைய ஜெகத்ரட்சகர்கள் அவர்களிடத்தில் உண்டு ..மத நம்பிக்கையென்பது வேறு அதில் தலையிடவரவில்லை ஆனால் மதத்தை வைத்து திராவிடத்தை தகர்க்க வரும் போது அவர்கள் யாராக இருந்தாலும் கேள்வி கேட்போம்.. நவீன ஆள்வாரின் அறிக்கையை குறைச் சொல்லவில்லை அதை எங்கள் முதுகின் மீது ஏறிநின்று சொல்கிறீர்கள் பாருங்கள் அதைதான் எதிர்க்கிறோம்.. செயல்த்தலைவரின் துணைவியாரின் கடவுள் பக்தி அவரது சொந்த விடயம்… ஆனால் அவரை முன்னிலைபடுத்தும் அறிக்கை அவ்வளவு ஏற்புடையதல்ல.. சொந்த காசில் குழிவெட்டிகொள்வதைப்போல என்பதை உணருங்கள் ..எதிலும் வெளிப்படையான அரசியலே சிறந்தது ..
இது வைரமுத்துவின் தனிப்பட்ட விடயமல்ல எப்போது இதை அரசியலாக்க முயன்றார்களோ எப்போது இதை திராவிட இனத்தின் மீதான கல்லெறிதல் என மொழிந்தார்களோ அப்போது இது எம் இனத்தின் மீதான தாக்குதலாய் கொள்வோம்.சாதிவெறியர்களையும் மதவெறியர்களையும் அடையாளபடுத்துவோம்..
நம் பங்காளி சண்டையை ஒதுக்கி வைத்துவிட்டு எல்லோரும் சேர்ந்து பாசிசக்திற்கெதிராக குரல் கொடுப்போம்..
..
ஆண்டாளை தாசியென்ற சொல்ல அவர்கள் அவளை வேசியாக்கி .. தொடர்ந்து பதைபதைப்போடு மலிவான அரசியலை கையிலெடுத்திருக்கும் அவாள்களுக்கும் அவர்களுக்கு துணைபோகும்.. சூத்திரனுக்கும் ஒன்றை சொல்வோம்.. எந்த போராட்டமும் நீண்டநாள் கடந்தால் அது தானாகவே பிசுபிசுத்து போகும்..
ஆனாலும் எங்களின் ஒற்றுமை சீர்குலையும் போதெல்லாம் பாசிசத்தின் குரல் எங்களை இணைக்கும் வலுசேர்க்கும்..
அதுதான் இப்போது நடக்கிறது ..
மெல்ல வருகிறார்கள்.. பெரியாரையும் திராவிடத்தையும் நினைவுகூர்ந்து இன்னும் இன்னும் திராவிடத்திற்கெதிரான போராட்டத்தை முன்னெடுங்கள் .. அப்போதுதான் எம் இனம் வீறுகொண்டு எழுச்சிபெறுவோம். நாங்கள் நேர்கோட்டில்
ஒருங்கிணைவோம் 

Aalanci Spm

பகிர்