தமிழக அரசு உயர்த்தி அறிவித்துள்ள பேருந்துகட்டண உயர்வு சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்குக் கட்டண உயர்வு வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. அதன்படி, நகர் மற்றும் மாநகரப் பகுதிகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.3-லிருந்து 5 ஆக உயர்த்தப்பட்டது. வால்வோ, குளிர்சாதனப் பேருந்துகள், விரைவுப்  பேருந்துகள், இடைநில்லாப் பேருந்துகளிலும் டிக்கெட் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்கும் அதே சமயத்தில், தொழிலாளர் ஊதியம், புதிய பஸ்கள் வாங்குதல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை உயர்வு ஆகிய காரணங்களால் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவது தவிர்க்க முடியாதது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட தூரம் செல்லும் அரசு பேருந்துகளின் கட்டணம் குறைந்தபட்சம் 25 முதல் 150 ரூ. வரை உயர்ந்துள்ளது பயணிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக பேருந்து கட்டணம் உயர்த்தப்படாததாலும், புதிய பேருந்துகள் வாங்கப்படாததாலும் அரசுப் போக்குவரத்து கழகங்களுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. எரிபொருள் விலையும் சமீப காலமாக உயர்ந்து வருகிறது.  இது குறித்து ஆன்மிக அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்த முன்னாள் கண்டக்டர் ரஜினி காந்த், கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அப்போது கறிவிருந்து வைக்க ஆசை என்றும் மாமிசம் உண்ண அனுமதி இல்லை என்றும் தன் முதல் மகள் திருமணத்தில் கூறிய டயலாக்கையை திரும்ப ஒப்பித்தார். முதல் மகளின் மகனுக்கு தற்போது 12 வயதாகிறது. மண்டபத்தை ரசிகர்களுக்கு எழுதி வைக்கிறேன் என்று கூறிவந்தவர், பல லட்சங்களுக்கு வாடகை வாங்குகிறாரே தவிர ஒரு ரசிகனுக்கு கூட இலவச திருமணம் நடத்தி வைத்ததில்லை. கர்நாடகாவில் டிசம்பர் 12ம் தேதி, 1950ல் பிறந்தவர் தான் நம்ம சிவாஜிராவ். ராமோஜி ராவ்க்கும், ராமாபாய்க்கும் நான்காவது மகனான சிவாஜி பெங்களூர் ஆச்சாரியா பாடசாலை, விவேகானந்த பாலக சங்கம் ஆகியவற்றில் கல்விபயின்றார். படிப்பில் கவனம் செலுத்தாமல் நடிப்பில் ஈடுபாட்டுடன் இருந்தார். படித்துமுடித்ததும், அங்கேயே பேருந்து நடத்துனராக பணியாற்றிக்கொண்டே நாடகங்களில் நடித்துவந்தார் சிவாஜிராவ். சிவாஜிராவ் கெய்க்வாட் பஸ் நம்பர் 10 யு கர்நாடக அரசுப் போக்குவரத்து பேருந்தில் பெங்க@ரில் உள்ள ஸ்ரீநகரிலிருந்து மெஜஸ்டிக் வரை என்ற சாதாரண பஸ் கண்டக்டராக 400 ரூபாய் சம்பளத்தில் பணியாற்றியவர். ரஜினி சிறிது காலம் புரூஃப் ரீடராக 60 ரூபாய் சம்பளத்தில் சம்யுக்த கர்நாடகா என்ற கன்னட தினசரியில் வேலை பார்த்தார். நடிகராக விரும்பி சென்னைவந்த ரஜினியை,சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்த்து படிக்கவைத்தார் ரஜினியின் நண்பர். அதனால் 2 ஆண்டுகள் பணிக்குச் செல்லாததால் கண்டக்டர் வேலையும் போய்விட்டது. அப்போது முதலே போக்குவரத்து கழகங்களிம் மீது ரஜினிக்கு ஒரு வெறுப்பு மனப்பான்மை வந்துவிட்டது.
“நான் அரசியலில் பங்கேற்க தொடர்ந்து 20 ஆண்டுகள் பயிற்சி பெற்றிருக்கிறேன்,  நீண்ட நாட்கள் பயிற்சி எடுத்த என்னால் மட்டுமே தமிழகத்தில் ஊழலை ஒழிக்க முடியும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்ற மத்திய பாஜக அரசு அதன் பின்னர் அப்படியே பல்டி அடித்தது. இந்த தீர்ப்புக்காக அங்கு நடந்த கலவரத்தையும் தட்டி கேட்காமல் மௌனம் காத்தேன். டில்லியில் தமிழக விவசாயிகள் 41 நாள்களாக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி மேலாண்மை வாரியம அமைக்க வேண்டும், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், பயிருக்கு லாபகர விலை என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைக்கும் அளவுக்கு மனித மலம் வரை தின்று நெஞச்சை உருக்கும் போராட்டங்களை நடத்தியும் மத்திய அரசுடன் சேர்ந்து கொண்டு, விவசாயிகளை துச்சமாக கருதினேன். இதே வடமாநிலங்களில் தாக்குதல், போராட்டம், சூறை என்றால் வரிந்து கட்டி கொண்டு அறிக்கை விடுவேன். பச்சை தமிழர் என்று கூறிக் கொள்ளும் நான், தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்த பாஜகவுடன் கண்டிப்பாக கூட்டு சேருவேன். காவி அரசுடன் இணைந்து எனது ஆன்மிக அரசியலின் மூலம் ரசிகர்களையும் பொதுமக்களையும் வீடுபேறு அடைந்து, சொர்க்கத்திற்கு போக பூஜை புனஸ்காரங்களின் மூலம் வழிவகை செய்ய ஏற்பாடு செய்வேன். நித்தியானந்தா பெண் சீடர்கள்போல எனது கட்சியிலும் என் மகள் ஒத்த வயதுடைய தொண்டர்களை சேர்த்து டூயட் பாடி மற்ற தொண்டர்களை குஷிப்படுத்துவேன், என்றார்.
பகிர்