சென்னையில் கனரா டிஜிட்டல் வங்கியின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு கமல்ஹாசன் பேசினார். அடுத்த மாதம் தொடங்குகிற பயணத்தில், எனக்கு நிறைய ‘ப்ரோ’க்கள் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று பேசினார்.

சென்னையில் கனரா வங்கியின் டிஜிட்டல் வங்கித் தொடக்க விழா இன்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய கமல், ”இளைய இந்தியா டிஜிட்டல் உலகத்துக்கு மாறிக் கொண்டிருக்கிறது. டிஜிட்டல் உலகம்தான், புதிய வழித்தடம். டிஜிட்டல் கல்வி, டிஜிட்டல் பொழுதுபோக்கு என்றெல்லாம் மாறவேண்டும். உலக முன்னோடிகளாக டிஜிட்டலில் நாம் செய்யும் சாதனைகள், வெகு தொலைவில் இல்லை என்றே நினைக்கிறேன்.

என் ஆயுளுக்குள் இந்த சாதனைகளை நடக்கப் பார்த்துவிட்டுத்தான் செல்வேன். தமிழ்நாட்டில் இன்னும் பல சாதனைகள் நிகழ்வேண்டும் என்று ஆசைப்படுகிற தமிழ்த் தொண்டர்களில் நானும் ஒருவன். அடுத்த மாதத்தில் பயணத்தைத் தொடங்கும் போது, எனக்கு ஏராளமான ‘ப்ரோ’க்கள் கிடைப்பார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது” என்றார் கமல்.

பகிர்